மார்கழி மாதம் பிறந்து விட்டாலே வீட்டின் வாசல் தோறும் கோலங்கள் பளிச்சிடும். அதிலும் விசேஷ தினங்களில் வண்ணக்கோலங்கள் அலங்காரமாக வாசல்களில் காணப்படும். அதிகாலையில் பெண்கள் குனிந்து நிமிர்ந்து, இடுப்பை வளைத்து, கைகளை லாவகமாகச் சுழற்றி கோலங்களை இடுவது, சூரிய நமஸ்காரம் போன்ற யோகாசன நிலைக்கு நிகரான பயிற்சியாகும். அந்த வகையில், வாசலில் கோலம் இடும்போது தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
கோலத்தை எளிதாக போட உதவும் 'Stencils' வாங்க...
* வீட்டின் முன்பு சாணம் தெளித்து கோலம் போடுவது நம் கலாசாரத்தில் வழக்கமான ஒன்று. அதிலும் மார்கழி மாதத்தில் கோலம் இடுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். ஏனெனில், கோலம் போடுவது பூமிக்கு செய்யும் மரியாதையாகும்.
* கோலம் என்பதற்கு அலங்கரித்தல் என்ற பொருள் உள்ளதால் தினந்தோறும் வாசலில் கோலம் போடுவது வீட்டையே அலங்கரிப்பது போன்றதாகும்.
* அதிகாலை நேரத்தில் சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து சாணம் தெளித்து கோலம் போட வேண்டும்.
* மகாலட்சுமி தாயார் நம் வீட்டு வாசலில் வாசம் செய்வதால் புது தண்ணீரைக் கொண்டு வாசல் தெளிக்க வேண்டும்.
* கோலத்தில் உள்ள சாணத்தின் பசுமை மகாவிஷ்ணுவையும், மாவின் வெண்மை பிரம்மாவையும் காவியின் செம்மை பரமேஸ்வரரையும் குறிக்கிறது.
* நமக்கு செல்வச் செழிப்பைத் தர கோலமிட்ட பின்னர் பூசணி, செம்பருத்தி போன்ற மலர்களை அதன் நடுவே வைக்க வேண்டும்.
* தாமரைப்பூ கோலத்தை பௌர்ணமி நாளன்று இடுவது மிகவும் சிறப்பாகும்.
* கோலத்தின் அனைத்து பக்கங்களிலும் பூக்கள் வைத்தால் திக் பாலகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்.
* கோலமிடுபவர்களுக்கு அவர்களையும் அறியாமலேயே சீரான மூச்சுப் பயிற்சி கிடைக்கிறது.
* வீட்டில் உள்ளவர்கள் வெளியில் செல்லும் முன்பே கோலம் போட்டுவிட வேண்டும்.
* கோலம் போட்டு முடித்த பிறகே அடுப்பு பற்ற வைக்க வேண்டும்.
* ஆள்காட்டி விரலைத் தவிர்த்து பிற விரல்களை வைத்துதான் கோலமிட வேண்டும்.
* சுவரையொட்டி போடப்படும் பார்டர் கோலங்கள் தீய சக்திகளை தடுக்கும் வல்லமை கொண்டது.
* அரிசி மாவினால் கோலமிடுவது சில உயிர்களுக்கு உணவாக இருப்பதால் அன்னதானம் செய்த பலன் கிடைக்கும்.
* கோலத்தில் புள்ளி, கோடு போன்றவை போடும்போது சிறு தவறு ஏற்பட்டால் காலினால் அழிக்காமல் கையால் அழிக்க வேண்டும். வீட்டின் வேலைக்காரர்களைக் கொண்டு கோலம் இடுதல் கூடாது.
* சுப காரியங்களின்போது இரட்டைக்கோடு வருவது போலவும், அசுப காரியங்களின் போது ஒற்றைக்கோடு வருவது போல் கோலம் போட வேண்டும்.
* தெற்கு பார்த்தோ, தெற்கில் முடியும்படியோ கோலம் போடாமல் இருப்பதோடு, வாசல்படிகளில் குறுக்குக்கோடுகள் போடக்கூடாது. மேலும், இடது கையால் கோலம் போடாமல் வலது கையால்தான் கோலமிட வேண்டும்.
* பெண்கள் குனிந்தபடி நின்றுதான் கோலம் போடவேண்டுமே தவிர, அமர்ந்துகொண்டு கோலம் போடக்கூடாது.
* தெய்வீக வடிவங்களைக் குறிக்கும் கோலங்களை வீட்டு வாசலில் போடக் கூடாது. இறந்தவர்களுக்கு திதி கொடுக்கும் நாட்களிலோ, அமாவாசை நாட்களிலோ கோலம் போடக் கூடாது.
கோலம் போடுவதால் நம் வீட்டிற்குள் துர் சக்திகள் நுழையாது. மார்கழி மாதங்களில் அதிகாலையில் எழுந்து கோலமிட்டு இறைவனை தொழுவது, உடலுக்கு ஆரோக்கியத்தை மட்டுமல்ல, உள்ளத்திற்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
கோலத்தை எளிதாக போட உதவும் 'Stencils' வாங்க...