24 மணி நேரம் போதவில்லையா? நேரத்தை மிச்சப்படுத்த இந்த 6 எளிய வழிகள்!

வேலைகளில் சோர்வு நீங்கி மன அமைதியுடன் இருக்க காலத்தை எப்படி திறம்பட கையாள்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
நேரம்
நேரம் Gemini image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

"கே.எஸ்.கிருஷ்ணவேனி, வைஷ்ணவ் கல்லூரியின் முன்னாள் மாணவி. கல்கி, மங்கையர் மலர், விகடன் போன்ற இதழ்கள் மற்றும் நாவல்களை படித்து, எழுதும் ஆர்வமும் மேலோங்க, 1992-ல், சமையல் குறிப்புகள் குறித்த சிறு கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். அவை 'மங்கையர் மலர்' ​​இதழில் தொடர்ந்து வெளியாகின. மேலும் பல இதழ்களில் எழுதிப் பல பரிசுகளை வென்றுள்ளார். 'பட்டிமன்றங்களில்' பங்கேற்ற அனுபவமும் உண்டு. தற்போது கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார். ஆர்வம் மிக்கவர். பல்வேறு பிரிவுகளில் பல தலைப்புகளில் சுவாரஸ்யமான கட்டுரைகளை எழுத வல்லவர். மிக விரைவாக எழுதவும் கூடியவர்."

Updated on: 

நேர நிர்வாகம் (Time Management) என்பது நம்மிடம் இருக்கும் 24 மணி நேரத்தை நமக்கு சாதகமாக திறம்பட பயன்படுத்துவதாகும். காலத்தை சரியாகக் கையாண்டால் வேலைகளை சிறப்பான முறையில் முடிக்க முடியும். இதனால் மனம் அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கும்.

1. முன்னுரிமை அளித்தல் (Prioritization):

அவசரமானது vs முக்கியமானது:

நம் பணிகளை நான்கு பிரிவுகளாகப் பிரித்துக் கொள்ளலாம். முதலில் மிகவும் முக்கியமான மற்றும் அவசரமானப் பணிகளை செய்வது. அதற்குப் பிறகு முக்கியமான ஆனால் அவசரமில்லாத பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது. மூன்றாவதாக அவசரமான ஆனால் முக்கியமில்லாத பணி (மற்றவரிடம் ஒப்படைக்கக் கூடியவை). நான்காவதாக அவசரமும் இல்லாத முக்கியமும் இல்லாத வேலைகள். இவற்றைத் தவிர்க்கலாம்.

எல்லா வேலைகளையும் நாம்தான் செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. சில வேலைகளை நம்பிக்கைக்கு உரியவர்களிடம் ஒப்படைக்கலாம். வெளிநபர்களை நாடும் 'அவுட்சோர்ஸ்' முறையையும் பின்பற்றலாம். இது முக்கியமான பணிகளில் நாம் இன்னும் கூடுதல் கவனம் செலுத்துவதற்கு உதவும்.

ஒரு நேரத்தில் ஒரு பணி:

ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வதைத்(multi-tasking) தவிர்ப்பது நல்லது. இது கவனச் சிதறலை ஏற்படுத்தி நம் வேலைத்திறனை குறைக்கும்.

2. நேர மேலாண்மை முறைகள் (Time Management Techniques):

பொமோடோரோ முறை (Pomodoro Technique):

ஒரு வேலையை தொடர்ந்து செய்வதற்கு பதிலாக 25 நிமிடங்கள் இடைவிடாமல் முழு கவனத்துடன் வேலை செய்ய வேண்டும். பின்னர் 5 நிமிடங்கள் சிறிய ஓய்வு எடுப்பது அவசியம். இப்படி நான்கு முறை செய்த பிறகு 20 முதல் 30 நிமிடங்கள் வரை பெரிய ஓய்வு எடுக்கலாம். இது மூளையை சோர்வடையாமல் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்.

நேரம்
நேரம்Gemini image

டைம் பிளாக்கிங் (Time Blocking):

நம் நாளின் ஒவ்வொரு மணி நேரத்தையும் அல்லது குறிப்பிட்ட பகுதியையும் ஒவ்வொரு வேலைக்கென ஒதுக்கி அட்டவணைப்படுத்தலாம். அந்த நேரத்தில் அந்தப் பணிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம். இப்படி ஒவ்வொரு பணிக்கும் காலக் கெடுவை நிர்ணயித்து செய்வது விரைவாக வேலை பார்க்கும் ஆர்வத்தை தூண்டும். அத்துடன் சரியான நேரத்தில் வேலைகளை முடிப்பதற்கும் ஊக்குவிக்கும்.

3. கவனச் சிதறல்களை தவிர்ப்பது:

வேலை செய்யும்போது சமூக ஊடகங்கள் மற்றும் தொலைபேசியை ஒதுக்கி வைப்பதும், தேவையில்லாத மொபைல் நோட்டிபிகேஷன்களை அமைதிப் படுத்தவும் வேண்டும். இவை நம் வேலைகளில் கவனத்தை திருப்பாமல் நம்முடைய கவனத்தை திசை திருப்பி சிதறடிக்கும்.

தேவையற்ற இணையதள பக்கங்களைத் திறந்து வைப்பதையும் தவிர்க்கவும்.

நம் இலக்குகளுக்கு உதவாத அல்லது தேவையற்ற பணிகளை தவிர்க்க வேண்டும். இதற்கு "முடியாது" என்று சொல்ல கற்றுக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். நம் முக்கிய வேலைகளுக்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில், தேவையில்லாத கூடுதல் பொறுப்புகள் அல்லது அழைப்புகளுக்கு அன்பாக 'இல்லை' என்று கூறக் கற்றுக் கொள்ளலாம்.

4. திட்டமிடுதல் மற்றும் ஆரோக்கியம்:

காலையில் எழுந்ததும் அல்லது முந்தைய நாள் இரவே அடுத்த நாளுக்கான செய்ய வேண்டிய பட்டியலை தயார் செய்து வைத்துக்கொள்ள தேவையற்ற டென்ஷன் குறையும்.

வேலைகளை குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிக்க வேண்டும் என்பதற்காக ஓய்வில்லாமல் அதிலேயே மூழ்கி விடக்கூடாது.

இதையும் படியுங்கள்:
காலையில் கண்விழித்ததும் இந்த தவறுகளை செய்யாதீர்கள்... சீக்கிரமே வயதான தோற்றம் வந்துவிடும்!
நேரம்

அது உடலுக்கும் மனதுக்கும் சோர்வைத்தரும். அதற்காக நீண்ட நேரம் ஓய்வெடுத்தாலும் வேலைக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். வேலைகளுக்கு இடையே சில நிமிடங்களை ஓய்வுக்கு ஒதுக்குவதுபோல, மனதை ஆசுவாசப்படுத்திக் கொள்வதும் நல்லது. தினமும் உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்குவது நம் உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொண்டு, வேலைத் திறனை மேம்படுத்த உதவும். இதற்குப் போதுமான தூக்கமும் அவசியம்.

5. தள்ளிப்போடும் பழக்கத்தை கைவிடுதல்:

ஏதேனும் ஒரு வேலையைத் தொடங்கத் தயக்கமாக இருந்தால், 5 நிமிடங்கள் மட்டும் இந்த வேலையைச் செய்வோம் என்று மனதிற்குள் எண்ணித் தொடங்கிப் பார்க்க வேகம் தானாகவே வந்துவிடும்.

ஒரு பெரிய திட்டத்தை அல்லது வேலையை ஒரே நேரத்தில் செய்ய நினைக்காமல் அதைச் சிறிய சிறிய பகுதிகளாகப் பிரித்து செய்யும்பொழுது வேலை சுலபமாகவும் வேகமாகவும் முடிந்துவிடும்.

இதையும் படியுங்கள்:
நேரமே இல்லையா? சமையலறையிலேயே உடற்பயிற்சி செய்யும் சூப்பர் எளிய வழிகள்!
நேரம்

6. வேலை மற்றும் வாழ்க்கை சமநிலை (Work-Life Balance):

அலுவலக வேலைகளைத் திட்டமிட்ட நேரத்திற்குள் முடிக்க பழகுவதும், வேலை நேரத்தையும் தனிப்பட்ட வாழ்க்கைக்கான நேரத்தையும் தெளிவாக பிரித்துக் கொள்வதும் மன அழுத்தத்தை வெகுவாகக் குறைக்கும். உழைப்பு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு நம்மை மகிழ்விக்கும் விஷயங்களுக்கும், குடும்பத்தினருடன் செலவிடும் நேரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம்.

ஒரு விஷயத்தைப் பற்றித் தெரிந்து வைத்திருப்பது மட்டும் முக்கியமல்ல; அதைத் திறம்படச் செய்து முடிப்பதுதான் முக்கியம். இதற்கு தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலம் காலத்தை நம் சிறந்த நண்பனாக மாற்றிக்கொள்ள முடியும்.

அலுவலக வேலைகளையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் சமன் செய்து, மன அழுத்தமின்றி நிம்மதியாக வாழ்வதற்கான எளிய வழிகளைப் பெற்றுச் செல்வீர்கள்.