ஸ்ட்ரெஸ்ஸை 'ஸ்விட்ச் ஆஃப்' செய்ய முடியுமா? நகைச்சுவை எனும் மேஜிக் பட்டன்!

Humor sense tamil motivation
Humor sense
Published on

“வாய்விட்டு சிரிச்சா நோய் விட்டுப் போகும்” இது ஒரு அழகான பழமொழி. இதன் பொருள் மனமார சிரித்தால் உடலும் மனமும் ஆரோக்கியமாகும் என்பதாகும்.

ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் வாழ்க்கையில் சலிப்படைந்து விடுகிறோம், அப்போது நமது மனச்சுமைகளையும் கரைத்து விடும் நகைச்சுவை (Humor sense) எனும் அற்புத சக்தி நம்மிடம் உள்ளது என்பதை உணர்ந்தால் போதும், மனச்சுமை கரைந்து உற்சாகம் தரும்.

சிலர் எப்போதும் சிரித்த முகத்துடன் காட்சி தருவர்; அவரைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். அவர்கள் பேசத் தொடங்கினாலே சூழல் இலகுவாகி விடுகிறது. அவர் கூறும் ஜோக்குகளுக்கு பலர் அடிமை. அவரின் நகைச்சுவை உணர்வு அவரை மட்டுமல்லாது, அவரைச் சுற்றியுள்ளோரையும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் வைத்திருக்கிறது. சிரிப்பு என்பது நேர்மறை எண்ணங்களை பரவச் செய்யும் தன்மை உடையது; ஒருவர் சிரித்தால் அருகிலிருப்பவர்களும் தன்னிச்சையாக சிரிக்கத் தொடங்குவார்கள்.

ஆனால், அவர்களுக்கு நேர் மாறாக இருப்பவர்களும் உண்டு. இடி விழுந்தாலும் சிரிக்க மாட்டார்கள் போல கடின முகத்துடன் இருப்பர். வாழ்க்கையின் சுமைகளை அவர்கள் உள்ளத்திற்குள் அடைத்து வைத்து கொள்வர். அதனால் தனிமையில் எப்போதும் தன்னம்பிக்கையின்றி தவிப்பர். இதனால் தான் அவர்கள் மன அழுத்தத்தை சந்திக்கின்றனர்.

உண்மையில், நகைச்சுவை உணர்வுக்கும் மனநிலைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று நிபுணர்கள் கூறுகின்றனர். "எனக்கு மனசு சரியில்லை; நான் என் நண்பரைப் பார்த்து வருகிறேன்” என்பவர் பலர் உண்டு. அந்த நண்பரின் நகைச்சுவை கலந்த உரையாடல் மன அழுத்தத்தை குறைத்து, கவலைகளை மறக்கச் செய்து, புதிய நம்பிக்கையை உருவாக்கும் மருந்தாக அமைகிறது. சில நிமிடங்கள் மனமுவந்து சிரித்தாலே உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறுகிறது.

இன்றைய இளைஞர்கள் மத்தியில் “டென்ஷன், ஸ்டிரெஸ், பிஸி” என்ற வார்த்தைகளே அதிகம் ஒலிக்கின்றன. சிரிக்கும் முகங்களை காண்பதே அரிதாகிறது. IT field-ல் மூழ்கடித்து விட்ட வேலைகள் மற்றும் சொந்த வாழ்க்கை, போட்டி மனப்பான்மை, எதிர்காலப் பயம் ஆகியவை அவர்களைப் பிடித்து ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றன.

இன்றைய உலகில் மன அழுத்தத்தை குறைக்க, பல நகரங்களில் சிரிப்பு கிளப்புகள் (Laughing Clubs) அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் ஒரு கூட்டமாக சந்தித்து சிரிப்பதற்காக பயிற்சி மேற்கொள்கிறார்கள். சிறிய விளையாட்டுகள், சிரிப்பு யோகா, நகைச்சுவை கதைகள்—இவை அனைவருக்கும் மன அழுத்தத்தை குறைக்க உதவுகின்றன.

நாம் அனைவரும் மிகுந்த மனச்சோர்வுடன் இருந்தால், உடனே நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களின் திரைப்படத்தைப் பார்க்க முயல்கிறோம். இல்லையெனில் ஆங்கில மொழியில் தேடுவோம், அப்படிப்பட்ட தருணங்களில் Charlie Chaplin நினைவிற்கு வராமல் இருக்க முடியுமா? தனது மௌன நடிப்பின் மூலம் உலக மக்களை சிரிக்க வைத்த மகத்தான கலைஞர் அவர். உலக சினிமாவுக்கு அளித்த பங்களிப்பிற்காக Academy Honorary Award பெற்ற பெருமையும் அவருக்கு உண்டு.

அதேபோல், 1990–1995 ஆம் ஆண்டுகளில் ஒளிபரப்பான Mr. Bean உலகப் புகழ்பெற்ற நகைச்சுவைத் தொடர். இதில் நடித்த Rowan Atkinson தனது தனித்துவமான உடல் மொழியாலும், நேர்த்தியான நகைச்சுவை நடிப்பாலும் அனைவரையும் கவர்ந்தார். வசனங்கள் குறைவாக இருந்தாலும் சிரிப்பை உருவாக்கும் திறன் அவருக்கு உண்டு.

இன்றும் Mr. Bean உலகம் முழுவதும் குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பும் நகைச்சுவைக் கதாபாத்திரமாக திகழ்கிறது. சில நிமிடங்கள் நாம் மனதில் நகைச்சுவையை உணர்ந்தாலே, மனம் லேசாகி, உடலும் புத்துணர்ச்சி பெறுகிறது. சிரிப்பு மனித உறவுகளை இணைக்கும் பாலமாகவும், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உரிய வழியாகவும் செயல்படுகிறது.

எங்கள் குடும்பத்தில் எந்த விழாவானாலும் நானும் என் சகோதரிகள் இருவரும் இணைந்து சென்று எங்கள் நகைச்சுவையால் ஒரே ஆர்பாட்டமாக அனைவரையும் கலாய்த்து அந்த இடத்தை அந்த நாளை மகிழ்ச்சி நிறைந்ததாக செய்வோம்.

இதையும் படியுங்கள்:
மாசம் ஒரு சம்பளத்தை மட்டும் நம்பி இருக்கீங்களா.. கேம் ஓவர் ஆகுறதுக்குள்ள இத படிச்சு உஷாராகுங்க!
Humor sense tamil motivation

ஏதாவது ஒரு சூழ்நிலையில் நாங்கள் செல்லவில்லை என்றால், அங்கே அனைவரும் “நீங்கள் வராததால் வீடே அமைதியாக இருக்கிறது” என்று கூறி வருந்துவார்கள். ஆக, நகைச்சுவை வெறும் பொழுதுபோக்கல்ல; அது மனதை இலகுவாக்கும் மாய மந்திரம். தினமும் சிறிது நேரம் மனம் விட்டு சிரிப்பதற்காக ஒதுக்கினால், வாழ்க்கை இன்னும் இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் மாறும்.

நாமும் மகிழ்ச்சி அடைவோம், சுற்றி இருப்போரையும் மனமகிழ செய்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com