மனதுக்கான 'ஜிம்' எது தெரியுமா? இந்தியர்களை ஈர்க்கும் புதிய கலாச்சாரம்!

Reading habits
Reading habitsImg credit: AI Image
Updated on

இன்றைய வாழ்க்கையின் வேகம்.

இன்றைய வாழ்க்கை ஒரு ஓட்டம்.

காலை கண் திறந்தவுடனே மொபைல் திரை, செய்திகளின் சத்தம், வேலை அழுத்தம், இலக்குகளின் அலைச்சல் - இவை எல்லாம் சேர்ந்து மனித மனதை ஒரு இடைவிடாத வேகத்தில் தள்ளிக்கொண்டே இருக்கின்றன.

இந்த வேகத்தின் நடுவில், ஒரு சாதாரணமான ஆனால் ஆழமான கேள்வி நம்முள் எழுகிறது - அது 'நாம் கடைசியாக ஒரு புத்தகத்தை அமைதியாக எப்போது வாசித்தோம்?' என்பது தான்.

வாசிப்பு என்ற பழைய அழகு. வாசிப்பு என்பது ஒருகாலத்தில் வாழ்க்கையின் ஓர் அங்கமாக இருந்தது. மாலை நேரங்களில் விளக்கு வெளிச்சத்தில் பக்கங்கள் புரள்வதும், கதைகளில் மனிதர்கள் வாழ்வதும், அறிவின் உலகம் மெதுவாக விரிவதும் ஒரு இயல்பான அனுபவமாக இருந்தது. ஆனால் இன்றோ வாசிப்பு ஒரு கடமையாக மாறியிருக்கிறது.

'படிக்க வேண்டும்' என்ற எண்ணம் இருக்கிறது; ஆனால் அதை அடையும் மன அமைதி குறைந்து வருகிறது.

ஒரு புதிய பரிமாணம்:

இத்தகைய சூழ்நிலையில்தான் உலகின் பல நகரங்களில் ஒரு புதிய மாற்றம் உருவாகி வருகிறது அதில் எந்தவித போட்டியோ அளவு கோலோ இல்லை மன அழுத்தம் இல்லாத 'சேர்ந்து வாசிக்கும் கலாச்சாரம்' எனும் ஒரு அமைதியான அனுபவம். அந்த மாற்றம் ஒவ்வொரு இடங்களிலும் மாறுபடுகின்றன அதைப்பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

இங்கு இந்தியாவில் உள்ள மிக முக்கிய நகரங்களில் இந்த வாசிக்கும் பழக்கத்தை எப்படி கையாளுகிறார்கள் என்று பார்ப்போம்.

மும்பை – பகிர்ந்த அமைதி:

மும்பை போன்ற நகரங்களில் சில வாசிப்பு குழுக்கள் உருவாகியுள்ளன. அங்கு யாரும் யாரையும் மதிப்பிடுவதில்லை.

'எவ்வளவு படித்தீர்கள்?' என்ற கேள்வி இல்லை.

'எதைப் புரிந்தீர்கள்?' என்ற அழுத்தமும் இல்லை.

ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த புத்தகத்தோடு வந்து அமைதியாக அமர்கிறார்கள். சில நேரம் அந்த இடத்தில் பேச்சு சத்தம் கூட இல்லை - பக்கங்கள் புரளும் மென்மையான சத்தம் மட்டும் இருக்கும். வாசிப்பு என்பது அங்கு ஒரு தனிமை அல்ல; அது ஒரு பகிர்ந்த அமைதி.

புனே – மனிதர்களை இணைக்கும் வாசிப்பு:

புனேவில் வாசிப்பு இன்னும் மனிதநேயமாக மாறியுள்ளது.

ஒரு எளிய எண்ணம் அங்கு வாழ்கிறது.

ஒரு புத்தகத்தைக் கொண்டு வந்து வாசித்து அதில் உள்ள எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுதல்.

அதுபோல் பகிரும் பொழுது சில மனிதர்களை சந்திக்கிறோம் அப்பொழுது ஒரு நட்பு வட்டம் உருவாகிறது. அந்த நட்பு வட்டம் மனிதர்களை இணைக்கிறது.

'ஒரு புத்தகம், ஒரு உரையாடல், ஒரு புதிய நட்பு' - இதுவே அந்த அனுபவத்தின் செல்வம்.

பெங்களூர் – கஃபே வாசிப்பு கலாசாரம்:

பெங்களூரில் வாசிப்பு காபி வாசனையோடு கலந்திருக்கிறது.

கஃபே மூலையில் அமர்ந்து புத்தகம் வாசிப்பது, பின்னர் அதைப் பற்றி மெதுவாக உரையாடுவது - இது ஒரு கலாச்சார அனுபவமாகவே மாறியுள்ளது.

'இந்த கதையில் உனக்கு என்ன தோன்றியது?'

என்ற ஒரு எளிய கேள்வி கூட சில நேரங்களில் ஆழமான சிந்தனைகளைத் திறக்கிறது.

இதையும் படியுங்கள்:
தனிமை உங்களை நெருங்கும் முன்... வாழ்வை ருசிக்கத் தொடங்குங்கள்!
Reading habits

சென்னை – அமைதியின் வாசிப்பு:

சென்னையில் வாசிப்பு இன்னும் அமைதியானது.

பூங்காக்களில் அல்லது அமைதியான இடங்களில் மக்கள் தனித்தனியாக அமர்ந்து வாசிக்கிறார்கள்.

பேச்சு குறைவு; கவனம் அதிகம்.

வாசிப்பு முடிந்த பின் மட்டுமே சில சின்ன பகிர்வுகள். அந்த அமைதியே ஒரு தனி மொழியாக மாறுகிறது.

யாரோ ஒருவர் சொன்னது போல - 'இது மனதுக்கான ஜிம்.'

டெல்லி – சமூகமாகும் வாசிப்பு:

டெல்லியில் வாசிப்பு சமூகத்தன்மையோடு இணைகிறது.

வாசிப்பு முடிந்ததும் பரிந்துரைகள், உரையாடல்கள், கருத்துகள் உருவாகின்றன.

'இதை நீயும் படிக்க வேண்டும்' என்ற நல்ல எண்ணம் அங்கு பரவுகிறது.

வாசிப்பு தனிமையிலிருந்து வெளியே வந்து சமூகமாக மாறுகிறது.

கொல்கத்தா – நேரத்தின் உரையாடல்:

கொல்கத்தாவில் வாசிப்பு ஒரு சுவாரஸ்யமான வடிவத்தை எடுக்கிறது.

சில இடங்களில் குறுகிய நேர உரையாடல்கள் - ஒரு புத்தகம், ஒரு மனிதர், சில நிமிடங்கள்.

மனிதர்கள் மாறுகிறார்கள்; ஆனால் புத்தகங்கள் இணைப்பைத் தொடர்கின்றன.

இதையும் படியுங்கள்:
'நான் இல்லனா எதுவும் நடக்காது' - இந்த எண்ணம் ஆபத்தானதா?
Reading habits

வாசிப்பு ஒரு பயணம்:

இந்த எல்லா பரிமாணங்களையும் பார்த்தால் ஒரு உண்மை தெளிவாக புரியும்: வாசிப்பு இப்போது கட்டாயம் அல்ல, அது ஒரு தேர்வு; அது போட்டிக்காக அல்ல, அமைதிக்காக; அறிவை சேர்க்கும் வழி மட்டுமல்ல, மனதை சந்திக்கும் ஒரு வழியும் கூட. ஒரு புத்தகத்தை வாசிப்பது வெறும் பக்கங்களைத் திருப்புவது அல்ல, அது நம்முள் இருக்கும் மன அழுத்தத்தை குறைக்கும் ஒரு பயணம். உலகத்தின் ஓட்டத்திலிருந்து சில நிமிடங்கள் விலகி, நம்மை நாமே அமைதியாக சந்திக்க ஒரு இடம்.

இன்றைய வேகமான உலகத்தில், வாசிப்பு நம்மை மாற்றுவதில்லை. ஆனால் நம்மை நிதானப்படுத்துகிறது.

அதுவே அதன் அழகு. அதுவே அதன் அமைதி.

logo
Kalki Online
kalkionline.com