புக் எடுத்தாலே தூக்கம் வருதா? இந்த டோபமைன் ட்ரிக் ட்ரை பண்ணுங்க!

மனக்கட்டுப்பாட்டை நம்பாமல் உங்களின் படிக்கும் ஆர்வம் பல மடங்கு அதிகரிக்கச் செய்து, படிப்பதை சமூக வலைத்தளங்களைப் போலவே ஒரு போதையாக மாற்றும் அற்புதமான டோபமைன் ரகசியம் இதோ.
Dopamine study trick படிக்கும் ஆர்வம்
Dopamine study trick படிக்கும் ஆர்வம்
Updated on

புத்தகத்தைத் திறந்தாலே உடனே தூக்கம் வருகிறது, ஆனால் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பார்த்தால் மட்டும் விடிய விடிய முழிப்பு வருகிறது என்று புலம்பும் மாணவர்கள் இங்கே அதிகம். இது உங்களுடைய சோம்பேறித்தனம் கிடையாது. நமது மூளை எப்போதுமே எவ்வித உடல் உழைப்பும் இல்லாமல் மிக எளிதாகக் கிடைக்கும் சந்தோஷத்தைத்தான் தேடும். மொபைல் ஸ்க்ரோலிங் செய்யும்போது கிடைக்கும் அந்த அதீத குஷி, பாடப் புத்தகத்தைப் பார்க்கும்போது கிடைப்பதில்லை. 

இதனால் மூளை படிப்பதை போரிங் வேலை என்று முத்திரை குத்திவிடுகிறது. ஆனால், மனக்கட்டுப்பாட்டை மட்டும் நம்பாமல், மூளையை ஹேக் செய்து சமூக வலைத்தளங்களைப் போலவே பாடங்களிலும் ஒரு போதையை உருவாக்கும் அட்டகாசமான தந்திரம் ஒன்று உள்ளது. உங்களின் படிக்கும் ஆர்வம் தானாக விஸ்வரூபம் எடுக்க வைக்கும் அந்த உளவியல் தந்திரத்தைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Dopamine study trick படிக்கும் ஆர்வம்
Dopamine study trick படிக்கும் ஆர்வம்

மூளையை பசியாக்க ஒரு மௌன பயிற்சி!

படிப்பதற்கு அரை மணிக்கு முன்பாக உங்களின் செல்போன், லேப்டாப் மற்றும் பாட்டு கேட்பது என அனைத்தையும் சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு, முற்றிலும் அமைதியான ஒரு அறையில் சும்மா உட்காருங்கள். முதல் பத்து நிமிடங்கள் தலை வெடிப்பது போல ஒரு எரிச்சல் வரும். ஆனால், இந்த அரை மணி நேரத் தனிமை உங்கள் மூளையில் இருக்கும் டோபமைன் அளவை அதலபாதாளத்திற்கு இறக்கிவிடும். 

இப்போது ஏதாவதொரு வேலை கிடைத்தால் போதும் என்ற ஒரு அசுரப் பசி மூளைக்கு ஏற்பட்டுவிடும். அந்தத் தருணத்தில் பாடப் புத்தகத்தை எடுத்து கண் முன் வைத்தால், பசியில் இருக்கும் மூளை அதை ஒரு பிரம்மாண்டமான பிரியாணி விருந்து போல ஆசையாகத் துவைத்துப் படிக்கத் தொடங்கிவிடும். இதுதான் இந்த முறையின் முதல் சிக்ஸர் ஆகும்.

இதையும் படியுங்கள்:
கணக்குப் புத்தகத்தைத் தேடுங்க! ‘ககிபோ’ (Kakeibo) சொல்வதைக் கேளுங்க!
Dopamine study trick படிக்கும் ஆர்வம்

வெற்றியை முன்கூட்டியே ரசிக்கும் கற்பனை!

புத்தகத்தைத் தொடுவதற்கு முன் சரியாக இரண்டு நிமிடங்கள் கண்களை மூடிக்கொள்ளுங்கள். இன்றைய பாடங்களை நீங்கள் மிகச் சிறப்பாகப் படித்து முடித்துவிட்டு, தேர்வில் அதிக மதிப்பெண்கள் வாங்குவது போல ஒரு கற்பனைப் படத்தை மனதிற்குள் ஓட்டிப் பாருங்கள். இந்தச் சின்ன ட்ரிக், படிப்பதற்கு முன்பாகவே உங்கள் உடலுக்குள் ஒரு உற்சாக போதையைத் தூண்டிவிடும். 

அதன்பிறகு பொமோடோரோ (Pomodoro) முறையைக் கையில் எடுங்கள். அதாவது இருபத்து ஐந்து நிமிடங்கள் முழுமையான படிப்பு, அடுத்து ஐந்து நிமிடங்கள் குட்டி பிரேக். இந்த பிரேக் நேரத்தில் மீண்டும் மொபைலைத் தொடாமல், ஒரு மிட்டாய் சாப்பிடுவது அல்லது பால்கனியில் நிற்பது போன்ற எளிய பரிசுகளை உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொள்ளுங்கள். இது படிப்பதையும் முன்னேற்றத்தையும் மூளைக்கு ஒன்று சேர்க்கும்.

தொடர் பயிற்சிகள்!

காலையில் தூக்கம் விழித்தவுடன் மொபைல் திரையைப் பார்ப்பதை அடியோடு நிறுத்திவிட்டு, ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பதையோ அல்லது குளிர்ந்த நீரில் குளிப்பதையோ முதல் வேலையாக வையுங்கள். முதல் மூன்று நாட்கள் இந்த புதிய முறைக்கு மாற மூளை பெரிய யுத்தமே நடத்தும். பழையபடி மொபைலைத் தேடும்.

இதையும் படியுங்கள்:
உங்க போன் மெமரி ஃபுல் ஆகி அடிக்கடி ஹேங் ஆகுதா.. அப்போ இந்த 5 ட்ரிக்ஸ உடனே ட்ரை பண்ணுங்க!
Dopamine study trick படிக்கும் ஆர்வம்

ஆனால், நான்காவது அல்லது ஐந்தாவது நாளில் மூளையின் சென்சார் ரீசெட் ஆகி, உங்களின் படிக்கும் ஆர்வம் இயற்கையாகவே அதிகரிக்கத் தொடங்கிவிடும். ஒவ்வொரு இருபத்து ஐந்து நிமிட செஷனை முடித்த உடனே, மனதிற்குள் 'நாம ஜெயிச்சிட்டோம் மாறா' என்ற வெற்றிக் களிப்பை மூளைக்குக் கடத்துங்கள்.

இந்த ஐந்து நாள் சவாலை நீங்கள் வெற்றிகரமாகக் கடந்துவிட்டால் போதும். அதன் பிறகு மணிக்கணக்கில் படிப்பது உங்களுக்கு ஒரு சுமையாவே தெரியாது. ஆனால் இதில் ஒரு மிக முக்கியமான கண்டிஷன் இருக்கிறது. நடுவில் எப்போதாவது ஒரு நாள் மணிக்கணக்கில் சமூக வலைத்தளங்களில் மூழ்கி மூளையின் சென்சாரை மீண்டும் கெடுத்துக் கொள்ளாதீர்கள். இந்த எளிய வித்தையை இன்றே முயற்சித்துப் பாருங்கள், உங்களின் மதிப்பெண் பட்டியல் ராக்கெட் வேகத்தில் எகிறும்.

logo
Kalki Online
kalkionline.com