ஈகோவுக்கு இடமில்லை: குடும்ப அமைதிக்குத் தேவை மனப்பக்குவம்!

வயதாகும்போது ஈகோவைத் துறந்துவிட்டு, சகோதரத்துவத்துடன் வாழ்ந்தால் வாழ்க்கை மலரும்!
பக்குவம்
பக்குவம்AI image
Updated on

ந்த கட்டுரை, கோபம் சூறாவளியை விட ஆபத்தானது என அனுபவத்தின் அடிப்படையில் எச்சரிக்கிறது. குடும்ப உறவுகளில் நான் மட்டுமே சரி என்ற அகங்காரத்தை விட, பிறரின் கருத்துகளுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும் என கூறுகிறது. தேவையற்ற ஆலோசனைகளை தவிர்த்து, ஈகோவை குறைத்து, ஆன்மிக நாட்டம், சகோதரத்துவ உணர்வு, நிதானம், பொறுமை ஆகியவற்றுடன் வாழ்ந்தால் அமைதி, முன்னேற்றம் உறுதி என விளக்குகிறது.

நமது வாழ்க்கையில் நாம் பல விஷயங்களை கற்றுக்கொள்வதே இல்லை. ஆனால் எனக்கு எல்லாம் தொியும் என்ற எண்ணம் பலரிடம் இருக்கத்தான் செய்கிறது. மனிதனுக்குவாழ்க்கையில் "நாணயம்" எப்படி முக்கியமோ அதேபோல "நா நயம்" என்பதும் முக்கியம். புயலும், கோபமும் வீசி விட்டு போகும்போதும், நாம் நமக்கே கோபத்தில் பேசிவிட்டு போகும்போதும், அமைதியானது கெட்டுப்போய்விடுகிறது! அதே நேரம் அவை அடங்கிய பின் அவ்விஷயம் நீடிக்காமல் அமைதியாகிவிடுகிறது.

அதேபோல புயலுக்கு பின்னே அமைதி என்றாலும் அதன் தாக்கம் நீண்ட நாள் பாதிப்பை ஏற்படுத்தாது! முன்னேற்பாடு நடவடிக்கைளால் சேதம் அதிகமானாலும் சில நாட்களில் நிலைமை சீராகி நாம் இயல்பு நிலைக்கு திரும்பிவிடுவோம் அதுதான் நடைமுறையும் கூட . ஆனால் கோபம் எனும் புயல் வீசி அதனால் வீசப்படும் வாா்த்தைகளுக்கு வீாியம் அதிகம் அது சூறைக்காற்றை விட மோசமானது!

பின் விளைவுகள் அதிகம் என்பதோடு அதற்கு எந்த நிவாரணமும் கிடையாது. அது பல விளைவுகளையும் ஜீரணிக்க முடியாத சங்கடங்களையும் உண்டாக்கிவிடும் என்பதே அனுபவ பூா்வமான உண்மை! இதைத்தான் கவிஞர் தன்னுடைய பாடல் வரிகளில் "ஆத்திரம் தன்னை அழித்திடும்போது அறிவுக்கு வேலைகொடு" என எழுதி இருப்பாா் அந்த நேரம் நாம் அறிவுக்கு வேலை கொடுப்பதற்கு பதிலாக அழிவுக்குவேலை கொடுக்கிறோம்

பக்குவம்
பக்குவம்AI image

நிதானமும் பொறுமையும் மனிதனின் இரண்டு கண்கள் போன்றவை. கண்ணை இமை காப்பதுபோல நாம் அதை பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும் சோ்த்து வைத்த சில்லறையை சிந்திவிட்டால் அள்ளிவிடலாம். ஆனால் கோபத்தில் வாா்த்தைகளை சிதறவிட்டால் அதை அள்ளவே முடியாது, அது ஒரு மாயமானது.

இதையும் படியுங்கள்:
குறை சொல்லும் குணம் ஒரு நோயா? அது உங்களை பாதிக்குதா? மீண்டு வருவது எப்படி?
பக்குவம்

பல விஷயங்களில் பொிய பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க வாய்ப்பில்லை. கொடுக்கல் வாங்கலில் நாணயம் எப்படி முக்கியமோ அதேபோல் வாா்த்தைகளை பிரயோகம் செய்யும்போது நாநயமானது மிகவும் முக்கியமானது.

மேலும் நாம் நமது கருத்துகளையே பிறர் மீது திணிப்பதிலேயே நமது எண்ண ஓட்டம் இருக்கக்கூடாது, அடுத்தவர் வாா்த்தைகளுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும், பொதுவாகவே எதுவும் சில காலம்தான் என்ற பக்குவத்தை வளா்த்துக் கொள்ள வேண்டும்!

மனப்பக்குவம் அவசியம் தேவை. வயதாகி விட்டதா? அப்போதுதான் நாம் சில விஷயங்களில் குடும்பத்தாா்களுடன் நட்பு மற்றும் உறவு வகைகளில் பக்குவமாக நடந்துகொள்ள வேண்டும். நம்முடைய கெளரவம் மதிப்பு இவைகளை காப்பாற்றிக்கொள்ள நினைத்தால் குடும்பத்தில் உள்ள பிள்ளைகளிடம் ஒப்படைக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
அமிர்தமும் விஷமாகும்: உறவுகளின் எல்லைக் கோடு
பக்குவம்

அவர்கள் தவறான பாதையில் போவது போல தொிந்தால் கண்டிப்பாக கண்டிக்கலாம். அது தவறல்ல. ஆனால் நான் தான் அனைத்தையும் பாா்த்துக்கொள்வேன் என் பேச்சைத்தான் அனைவரும் கேட்கவேண்டும் என்றெல்லாம் வீம்பு பிடிக்கக்கூடாது.

நாம் தேவையில்லாத ஆலோசணைகளை சொல்லாமல் இருந்தாலே அவரவர்கள் அவரவர்களுடைய வேலையை சரிவர பாா்க்க முடியும். தன்மானம் இழந்து எதையும் விட்டுக்கொடுக்க வேண்டாம்! அதே நேரம் சில விஷயங்களில் நாம் ஈகோ பாா்க்காமல் விட்டுக்கொடுத்து போகலாம் தவறேதும் இல்லை.

ஆக இறைவன் நமக்கு நல்ல வாழ்க்கையை கொடுத்துள்ளபோது அதை சரிவர பயன்படுத்தி, கோபதாபங்கள் மறந்து அனைவரையும் அனுசரித்து, விவேகம், நிதானம் பொறுமை எனும் கவசங்களோடு வாழ்ந்து பாருங்கள் அமைதியை கடைபிடியுங்கள் ஆன்மிக நாட்டத்தை விாிவாக்குங்கள் அனைவரோடும் நட்பு பாராட்டி சகோதர சமத்துவ உணர்வுகளோடு வாழப்பழகிக் கொள்ளுங்கள் வாழ்க்கையில் ஏற்றம் வருவதை யாராலும் தடுக்கவே இயலாது வாழ்க்கை வாழ்வதற்கே!

ஈகோ மற்றும் வீா்ப்புகளைத் துறந்து மனப்பக்குவத்துடன் அனைவரையும் அனுசரித்துச் செல்வதன் மூலம், உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எக்காலத்திலும் குறைவில்லாத மகிழ்ச்சியும் ஆன்மிக நிறைவும் கிடைக்கும்.

logo
Kalki Online
kalkionline.com