நிம்மதியான குடும்ப வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசிய நெறிமுறைகள்!

கணவன் மனைவி ஒற்றுமை, கூட்டுக்குடும்ப மதிப்பு மற்றும் சிக்கனமான வாழ்க்கை முறை குறித்த பொன்னான அறிவுரைகள்.
குடும்பம்
குடும்பம் Gemini image
புவனா நாகராஜன்

கடந்த 1980முதல் கல்கி ,மங்கையர்மலர், தினமலர்,வாரமலர், பெண்கள் மலர், சமையல் குறிப்புகள் தமிழ்நாடு இ பேப்பர் மேலும் சில பத்திாிகைகளில் துணுக்குகள், கட்டுரைகள், கதைகள், கவிதைகள் எழுதிவருகிறேன். தமிழ்நாடு இ பேப்பரில் 50க்கும் மேற்பட்ட கவிதைகள், கட்டுரைகள் எழுதிவருகிறேன். எனது கணவரின் உந்துதல் மற்றும் கல்கி குழுமம், மங்கையர்மலர், தினமலர் கொடுத்த ஊக்கம் தொடா்கிறேன்.

Updated on: 

தற்போதைய இளைய தலைமுறையினர்களிடம் பொறுமையும், நல்லது கெட்டதை சீா்தூக்கி பாா்க்கும் தன்மையும் அறவே இல்லை.

கூட்டுக்குடும்பத்தில் வீட்டில் ஒரு பொியவர் இருந்தால் யானை பலம் என்பாா்கள், அதெல்லாம் காலப்போக்கில் காணாமல் போய்விட்டது.

அவசர உலகம் அதில் கொஞ்சம் நிதானம் கடைபிடியுங்களேன்.

பொியவர்களை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். இறைவன் கொடுத்த நல்ல வாழ்க்கையில் சில சவால்கள், சில சறுக்கல்கள், இருக்கத்தான் செய்யும் அதை எதிா்கொண்டு பொறுமையுடன் வாழ வேண்டும். அதற்கு கணவன் மனைவி பரஸ்பர ஒற்றுமை, சரியான புாிதல், மாமனாா் மாமியாரை தாய் தகப்பன்போல நினைக்கும் மனப்பக்குவம், அவசியம் தேவையல்லவா?

இருவரும் வேலைக்கு போகிறோம், நல்ல வருமானம் வருகிறது கவலையில்லை என சேமிப்பின் தன்மை உணராமல் ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டாமே!

தேவையில்லாத பொருட்களை வாங்கிக் குவிக்க வேண்டாமே! சிக்கனம் இருந்தால் எக்கனமும் கவலையில்லை தானே.

அடுத்தவர் பாராட்ட வேண்டும் பெருமைப்பட வேண்டும் என்பதற்காக டாம்பீக வாழ்க்கை வேண்டாம். அது சமயங்களில் வாழ்க்கையை புரட்டிப்போட்டுவிடுமே!

கணவன் ஊதாாி செலவு செய்தால் அதை பக்குவமாக எடுத்துச்சொல்லி அவரை நல்வழிப்படுத்துங்கள். அதே ஊதாாித்தனம் நம்மிடமும் வரக்கூடாது.

மாமியாாிடம் உள்ள பழைய அனுபவங்களை கற்றுக் கொள்ளுங்கள். தனக்கு மிஞ்சியதே தான தர்மம். ஆக செலவுகள் செய்வது, உறவினர்களுக்கு பண உதவி செய்வது போன்ற விஷயங்களில் கொஞ்சம் பொியவர்களை கலந்து பேசி முடிவு எடுங்கள்.

நாளை கிடைக்கப் போகும் தொகையை எண்ணி இன்று இருக்கும் பணத்தை வீண் விரயம் செய்ய வேண்டாம்.

அகலக்கால் வைக்காதீா்கள். குறிப்பாக நமது சக்திக்கு மீறி கடன் வாங்காதீா்கள்!

முதலில் கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் உண்மையை பேசுங்கள்.

பொய்யை தவிா்த்திடுங்கள். ஒருவரை ஒருவர் நம்புங்கள், விட்டுக்கொடுத்து வாழக் கற்றுக் கொள்ளுங்கள். அகலக்கால் வைத்து பொிய வீடாக கட்ட வேண்டாம்.

வாடகைக்கு இல்லை சொந்த வீடு கட்டுகிறோம் என்பதால் ஆடம்பரமாக பங்களா வேண்டாமே!

குடும்பம்
குடும்பம்Gemini image

குழந்தைகளுக்கு நல்ல பண்பாடு இறை நம்பிக்கையை ஊட்டி வளருங்கள். நல்ல புத்தகங்களை வாங்கிக்கொடுத்து படிக்கச் சொல்லுங்கள். பல மொழிகளையும் கற்றுக் கொடுங்கள். அதற்காக திணிக்க வேண்டாம்.

உறவு மற்றும் நட்பு வட்டங்களில் உள்ளவர்களிடம் அன்பும் மரியாதையையும் காட்டி பழகச் சொல்லிக் கொடுங்கள். கருத்து வேறுபாடுகள் இருந்தால் பொியவர்களிடம் பேசி உடனே தீா்வு காணும் வழியை கடைபிடியுங்கள்.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கையில் ஜெயிப்பது எது? எது நம்மை அழிக்கும்? உண்மையான வைராக்கியம் அறிந்து கொள்ளுங்கள்!
குடும்பம்

மனசாட்சி கடைபிடித்து, மனித நேயம் பாா்த்து உதவி செய்யுங்கள். கோபப்படாமல் கருத்து வேறுபாடுகளை களைந்து ஒற்றுமை கடைபிடித்து வாழுங்கள். பொியவர்களிடம் கலக்காமல் எந்த காாியமும் செய்யாதீா்கள்.

சின்ன சின்ன விஷயங்களை பொிதாக ஆக்காமல் ஈகோவை விடுத்து வாழப் பழகிக் கொள்ளுங்கள். கணவன் வருவாய்க்குமேல் பணம் கொண்டு வந்தால் கேள்வி கேளுங்கள். குழந்தைகள் எதிாில் சண்டை போடாதீா்கள். பசுமரத்து ஆனி போல குழந்தைகள் மனதில் பதியும் என்பதால் அதை கூடுமான வரையில் தவிர்ப்பது நல்லதே.

வாரம் ஒரு முறையாவது அனைவரும் அமர்ந்து பேசி சந்தோஷமாக வாழ பழகிக் கொள்ளுங்கள். நான் என்ற அகம்பாவம் யாாிடமும் தலை தூக்காமல் இருக்க வேண்டும் அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்பட வேண்டாம். அடுத்தவர் வளர்ச்சி கண்டு பொறாமையும் வேண்டாம்.

நமது பிள்ளைகளோடு அடுத்தவர்களை ஒப்பிட்டு பாா்க்காதீா்கள், பாஸ்ட் புட் வகைகளை குறையுங்கள். மனைவிக்கு தொியாமல் கணவன் மதுவுக்கு அடிமையாவதும், கணவனுக்கு தொியாமல் மனைவி ஆன் லைன் ஆர்டர் போடுவதையும் தவிா்க்கலாமல்லவா!

ஒருவருக்கு ஒருவர் நல்ல பரஸ்பர புாிதலோடு வாழ்வதே வள்ளுவன் வாசுகி வாழ்க்கையாகும்.

இதையும் படியுங்கள்:
பொய் வதந்திகளைப் புன்னகையால் வீழ்த்துங்கள்: மனநிம்மதியைக் காக்கும் எளிய வழிகள்!
குடும்பம்

எவ்வளவு பிரச்னை வந்தாலும் தாய் தகப்பனாரை முதியோா் இல்லத்தில் சேர்த்து விடாதீா்கள். பாதகமான செயல்களை செய்ய வேண்டாம், பாவமான காாியங்களை செய்ய வேண்டாம் ,அது நமது சந்ததியை பாதிக்கும். ஆக விவேகம், நிதானம் கடைபிடித்து, இறை நம்பிக்கையோடு நல்ல ஒழுக்கம் நல்ல எண்ணம் இவைகளை உள்ளடக்கி வாழ்வதே சிறப்பான வாழ்க்கையாகும். இந்த நெறிமுறைகளை இன்றைய இளைய தலைமுறையினர்கள் கடைபிடிப்பதே நல்லதாகும்.

இன்றைய இளைய தலைமுறையினர் குடும்பத்தில் கடைபிடிக்க வேண்டிய ஒற்றுமை, பெரியவர்களுக்கான மரியாதை, மற்றும் நிம்மதியான குடும்பம் மற்றும் வாழ்க்கைப் பாதையை கண்டுகொள்ளலாம்.

logo
Kalki Online
kalkionline.com