சவால்களை எதிர்கொள்ளுங்கள் - சாதனைகளை படைத்திடுங்கள்!

சவாலை சாதனையாக மாற்ற உங்களிடம் துணிவும் இருக்கின்றது திறமையும் இருக்கின்றது என்று நம்பிக்கை வையுங்கள்.
Challenges
Challenges
Updated on

வாழ்க்கையில் நீங்கள் உலகத்தையே வெல்ல வேண்டும் என்றால், சவால்களை (Challenges) எதிர்கொள்ள வேண்டியது அவசியம். சவால்கள் நிறைந்த செயலால் தான் சாதனை கதவுகளை திறந்து, அதனுள் சென்று வெற்றி மகுடம் சூட முடியும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

உங்களிடம் திறமை வலுப்பெற்று இருந்தால் மட்டுமே சவால்களை எதிர்கொள்ள முடிவு செய்யுங்கள். துணிவும் செயலும் திறமையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது என்பதை நீங்கள் மறந்து விடாதீர்கள். சிந்தித்து செயல்படும் ஆற்றலை வளர்த்துக் கொள்ளுங்கள்.

சவால்கள் நிறைந்த செயலில் தான் சாதனைகள் ஒளிந்து இருக்கிறது. அந்த சவாலை சாதனையாக மாற்ற உங்களிடம் துணிவும் இருக்கின்றது திறமையும் இருக்கின்றது என்று நம்பிக்கை வையுங்கள். அந்த நேர்மறை எண்ணங்கள் தான் உங்களை துணிவான பாதைக்கு இட்டுச் செல்லும் மறந்து விடாமல், சிந்தித்து செயல்படுங்கள் வெற்றி நிச்சயம்.

வாழ்க்கையில் நீங்கள் கற்றறிந்த படிப்பினால் மட்டும் வெற்றிக்கனியை பறிக்க முடியாது. பேச்சு திறனும், எதையும் சமாளிக்கும் தகுதியும் உங்களிடம் இருக்க வேண்டும் என்று உணர்ந்து செயல் ஆற்றுங்கள்.

வாழ்க்கையில் ஏமாளியாக இருந்து விட்டால், ஒருபோதும் உங்களுக்கு முன்னேறும் வழியும் தெரியாது. போராடும் குணமும் இருக்காது என்பதன் உண்மை அறிந்து, எந்த இடத்திலும் புத்திசாலித்தனமாக இருக்க பழகிக் கொள்ளுங்கள்.

வாழ்க்கையில் எதிர் விமர்சனங்கள் வரத்தான் செய்யும். அவற்றைக் கண்டு அஞ்சாமல், பதறாமல் எதிர்வினை ஆற்றி, அதனைக் கடந்து முன்னேற தொடங்குங்கள். இரக்கம் காட்டுவது மனித தர்மம். தேவை இல்லாத இடத்தில், அதனை வெளிப்படுத்தி, ஏமாற்றம் அடையாதீர்கள்.

வாழ்க்கையில் நீங்கள் உயர்வதற்கு, நொடிந்து போனவர்களின் கடினமான வாழ்க்கையைப் படிப்பினையாக எடுத்துக் கொண்டு, நம் முன்னே உயர்ந்தவர்களின் வாழ்க்கையை குறிப்பெடுத்து, அதனை உள்மனதில் குறிக்கோளாக நிலை நிறுத்தி, உங்களின் உயர்வுக்கு, முன்னேற்றும் படிகளாக மாற்றுங்கள்.

வாழ்க்கையில் சவால்களை நீங்கள் எதிர்கொள்ள முதலில் உங்கள் மனதில் எதுவும் நம்மால் முடியும் என்ற நம்பிக்கை விதையுங்கள். அதன் கரங்கள் வலுவான பாதைக்கு இட்டுச் செல்லும் என்பதை தெரிந்து கொண்டால் போதும், வாழ்க்கையில் சாதிக்கும் துடிப்பான எண்ணங்கள் நம் கண்முன்னே வரிசைக்கட்டி நிற்கும் பாருங்கள்.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கையின் சவால்கள்: எதிர்மறை எண்ணங்களை வென்று, நேர்மறையாக வாழ்வது எப்படி?
Challenges

வாழ்க்கையில் சிலவற்றை கடந்து செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதனை கடந்து செல்லுங்கள். ஒருபோதும் தன்னோடு சுமந்து செல்லும் எண்ணம் எப்போதும் உங்களுக்கு வேண்டாம். வாழ்க்கையில் பாரத்தைக் கூட்டி, துயரத்தை விலைக்கு வாங்கி அவஸ்தை பட வேண்டாம்.

வாழ்க்கையில் தினமும் சவால்களை எதிர்கொள்ளும் மனிதர்களே நெஞ்சுரம் கொண்டு, சாதனைகளைப் படைத்து, நெஞ்சம் நிமிர்ந்து பயணம் செய்கிறார்கள். சுழலும் பூமியின் ஈர்ப்பு விசை போல், நம்மை சாதனை படைத்து, முன்னேற்றப் பாதையில் தடம் பதிக்கச் செய்யும் அச்சாணி தான் சவால்கள்.

தன்னுடைய தனித்தன்மை வாய்ந்த திறமைகளை வலிமையுடன் கையாலும் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். தனக்கு கிடைத்த அனுபவங்கள் அத்தனையும் உள்ளத்தில் மெருகேற்றி, செயலில் நம்பிக்கையோடு அலசி ஆராய்ந்து பார்த்து, உறுதியாக நின்று, வெற்றியின் இலக்கை நோக்கி களமாடுங்கள்.

இதையும் படியுங்கள்:
வெற்றிபெற வெறும் திறமை மட்டும் போதாது! வேறு என்ன தேவை தெரியுமா?
Challenges

வாழ்க்கையில் சவால்களை துணிவுடன் எதிர்கொள்பவன் திறமைசாலி. அதனை வென்று முடித்து சாதனை படைப்பவன் புத்திசாலி. நாம் எல்லோரும் புத்திசாலியாக இருப்போம் அல்லது மாறுவோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com