ஐன்ஸ்டீனை மிஞ்சிய அறிவுத்திறன்! Mr. Bean பற்றிய யாரும் அறியாத பக்கம்!

Mr. Bean
Mr. BeanImg credit: AI Image
எம். ஆர். ஆனந்த்

I am a retired Bank officer. I have written articles in English for News Papers. I have written poems in English and Tamil 

Updated on

தற்போது மிகவும் பிரபலமான காமெடியன் யார் தெரியுமா? அவர் தான் ரோவன் அட்கின்சன் என்கிற மிஸ்டர் பீன். மிஸ்டர் பீனை (Mr. Bean) தெரியாத வயதானவர்களும் இல்லை; நடுத்தர வயதினர் இல்லை; இளைஞர்களும் இல்லை; எல்லாவற்றிற்கும் மேலாக குழந்தைகளே இல்லை. அமெரிக்கா முதல் ஜப்பான் வரை மிஸ்டர் பீன் யன்றால் குதூகலம் அடையாத குட்டிகள் இல்லை எனலாம். இவர் தன் படங்களில் முட்டாளை போல நடித்தாலும் பெரும் விஞ்ஞானியான ஐன்ஸ்டீனை விட புத்திசாலி என்று பெயர் வாங்கியவர்.

இவருடைய IQ 178. ஆனால் ஐன்ஸ்டனின் IQ 160 தான். சார்லி சாப்ளினுக்கு பிறகு silent காமெடியில் இவரே உலகத்தை கவர்ந்தவர். அவரது ஒவ்வொரு எபிசோடும் அவரது புத்தி சாதுரியத்தை நமக்கு எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. உம்மணாம் மூஞ்சிகளுக்கும் இவரது சேட்டைகளை பார்த்தால் அடக்க முடியாத சிரிப்பு வந்துவிடும்.

இவரது படத்தை பார்த்துவிட்டு ஆனானப்பட்ட வட கொரியா கொடுங்கோலன் KIM Jong-கே விழுந்து விழுந்து சிரித்தானாம். இவர் சம்பாதித்தது பில்லியன் கணக்கில். இவர் ஒரு கார் பித்தன்; இவரிடம் இல்லாத விலை உயர்ந்த கார்களே இல்லை என்று சொல்லலாம்.

இங்கிலாந்தின் அரச குடும்ப நிகழ்ச்சிகளுக்கெல்லாம் இவரை தவறாமல் அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவரை பார்க்க வேண்டும் என்று விரும்பிய மிகப்பெரிய VVIP-களில் மறைந்த ராணி எலிசபெத்து ஒருவர். இவர் கால்பந்து வீரன் ரொனால்டோவை விட அதிகம் பிரசித்தி பெற்றவர் என்று நிரூபணம் ஆகி உள்ளது.

இதையும் படியுங்கள்:
மேடையில் நடுக்கம் இல்லாமல் கெத்தாக பேச வேண்டுமா.. இந்த 5 சீக்ரெட் ட்ரிக்ஸை பாலோ பண்ணுங்க!
Mr. Bean

இவர் மணந்தது ஒரு ஹிந்து பெண்ணை. ஆனால் அவரை விவாக ரத்துசெய்துவிட்டதாக கேள்வி. பொதுவாக விதூஷகர்களை சமூகம் அவ்வளவு பெரிதாக மதிப்பதில்லை. விதூஷகரிடம் மற்றவர்களை விட அதிக புத்திசாலித்தனம் இருக்கிறது என்று நிரூபித்தவர் மிஸ்டர் பீன். தளர்ச்சியோ இருக்குமோ ஏற்படும் பொது மிஸ்டர் பீனின் ஏதாவது ஒரு எபிசோடை போட்டு பாருங்கள் இதயம் லேசாகி விடும். வசனம் எதுவும் பேசாமலேயே நம்மை வசப்படுத்துபவர் மிஸ்டர் பீன்.

சின்ன சின்ன எபிசோடுகள் மட்டுமின்றி இவரை வைத்து முழு நீள படங்களும் வெளி வந்து வசூலை கொட்டி கொடுத்துள்ளது. அவற்றின் மிஸ்டர் பீன் James Bond ஆக நடித்த Johnny English ஒரு மிக அருமையான காமெடியான படம்.

logo
Kalki Online
kalkionline.com