இந்த 10 அறிகுறிகள் உங்கள் வாழ்க்கையில் வருதா? அப்போ நிச்சயம் முன்னேற்றம் ஏற்படும்...

Money
Money
Published on

வாழ்க்கையில் கடுமையாக உழைத்து பணம் சம்பாதிப்பவர்கள் பணக்காரராக உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்று ஆசைப்படுவது நியாயன ஒன்றாகும். ஆனால், தொடர்ந்து கஷ்டப்பட்டுக் கொண்டேயிருக்கிறோம். எப்போது பணக்காரர் ஆவோம் என்ற சந்தேகம் இருக்கும். அதை சில அறிகுறிகள் மூலம் நாம் தெரிந்துக் கொள்ளலாம் என்கிறார்கள். அவற்றைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.

1. ஆணாக இருந்தால் வலதுக்கையும், பெண்ணாக இருந்தால் இடதுக்கையிலும் அடிக்கடி அரிப்பு ஏற்படும். ஜோதிடத்தின்படி, அடிக்கடி கையில் அரிப்பு ஏற்பட்டால் படிப்படியாக பணம் சம்மந்தமான பிரச்னைகள் குறைந்து செல்வம் அவர்கள் கையில் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. 

2. எட்டு மங்களப் பொருட்களில் சங்கும் ஒன்று என்று சொல்லப்படுகிறது. காலையில் எழுந்ததும் சங்கொலியை கேட்கும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.

3. தேன் என்பது மகாலக்ஷ்மியின் அம்சம் கொண்ட பொருளாகும். அந்த தேனை சேகரிக்கக்கூடிய கருமை நிறம் கொண்ட தேனி வீட்டிற்குள் வருவது மகாலக்ஷ்மியே வந்ததாக கருதப்படுகிறது.

4. காமதேனுவை பசு மாட்டுடன் ஒப்பிடுவர்கள். அந்த பசுமாடு காலையில் உங்கள் வீட்டிற்கு உணவு கேட்டு வந்தால் மிகவும் அதிஷ்டமாக சொல்லப்படுகிறது. மகாலக்ஷ்மியே வீட்டிற்கு வாசம் செய்ய வந்ததாக நம்பப்படுகிறது.

5. மகாலஷ்மியின் அம்சமாக கருதப்படும் துளசி செடி உங்கள் வீட்டில் நன்றாக செழிப்பாக துளிர் விட்டு வளர்கிறது என்றால் மகாலக்ஷ்மி மற்றும் மகாவிஷ்ணுவின் ஆசிர்வாதம் இருப்பதாக அர்த்தம். இதனால் உங்கள் வீட்டில் செல்வம் வரப்போவதாக பொருள்.

6. காலையில் சில்லறைகளை பார்ப்பது அல்லது வீட்டில் சில்லறை விழும் காட்சி மற்றும் ஓசையைக் கேட்பது பணத்தை மென்மேலும் ஈர்க்கக்கூடிய விஷயமாக சொல்லப்படுகிறது.

7. பூனைகள் உங்கள் வீட்டில் வந்து குட்டி போட்டால் அந்த வீட்டில் நேர்மறையாற்றலும், தெய்வீக சக்தியும் அதிகமாக இருப்பதாக அர்த்தம். இதனால் அந்த வீட்டில் பணவரவு வரக்கூடிய யோகம் இருக்கிறது.

8. வீட்டில் ஒரே மாதிரியான பல்லி, ஒரே இடத்தில் இருப்பது மகாலஷ்மியின் அம்சமாக கருதப்படுகிறது. இதனால் செல்வம் அதிகரிக்கும். அதுவும் அக்ஷய திதியன்று பல்லியை பார்ப்பது செல்வத்தை ஈர்க்கக்கூடிய யோகமாக கருதப்படுகிறது.

9. காலையில் எழுந்ததும் இனிப்பான கரும்பை பார்ப்பது சந்தோஷத்தையும், முன்னேற்றத்தையும் தரும் என்று சொல்லப்படுகிறது. 

10. மகாலக்ஷ்மியின் வாகனமாக ஆந்தை சொல்லப்படுகிறது. இந்த ஆந்தையை அடிக்கடி தொடர்ந்து நீங்கள் பார்க்கிறீர்கள் என்றால், மகாலக்ஷ்மியின் ஆசி உங்களுக்கு இருக்கிறது என்று பொருள். இதனால் வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு செல்லப் போவதற்கான அறிகுறியாக கருதப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
உங்களுக்கு பொருத்தமான ஜிமிக்கி கம்மலை தேர்ந்தெடுப்பது எப்படி?
Money

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com