வெறும் புல்லல்ல 'தர்பை'.. கதிர்வீச்சை தடுக்கும் கவசம்! வியக்க வைக்கும் ஆன்மீக ரகசியங்கள்!

Amazing spiritual secrets
Amazing spiritual secrets
எம். ஆர். ஆனந்த்

I am a retired Bank officer. I have written articles in English for News Papers. I have written poems in English and Tamil 

Updated on

குசா என்று அழைக்கப்படும் தர்பை ஒரு சாதாரண புல் என்று நினைத்தால் அது மிகவும் தவறு. அதன் மகத்துவத்தை பற்றி சற்று பார்ப்போம். நமது இந்து சம்பிரதாயத்தில் தர்பை ஒரு பவித்ர பொருளாக மட்டுமல்லாது பவித்ரபடுத்தும் பொருளாகவும் கருதப்படுகிறது.  பூஜா யாகம் போன்றவைகள்  செய்யும் போது  தர்பை கொண்டு தொடுவதால் பொருள்களும் இடங்களும் புனிதமடைகின்றன 

வேதமந்திரங்களை உச்சரிக்கும்போது அம்மந்திரன்களின் ஆன்மீக அதிர்வுகளை தீர்த்தங்களில் கலந்து  பவித்ரமாக்கிறது தர்பை. அப்படி பவித்ரம் ஆக்கப்பட்ட நீரை தெளிக்கும் இடங்கள் புனித மடைகின்றன. தியானத்தில் ஈடுபடுபவர்கள் தர்பையிலான பாயை போட்டு அமர்கிறார்கள்  ஏன்? அப்படி அமரும்போது நாம் செய்யும் தியானத்தால் நம்முள் உண்டாகும் ஆன்மீக சக்தி நம் உடலில் இருந்து பூமிக்கு சென்றுவிடாமல் பாதுகாக்கப்படுகிறது. பூஜை மற்றும் தர்ப்பணம் திவசம் போன்ற சடங்குகளை செய்யும் போது தர்பயினாலான மோதிரம் அணிகிறார்கள். அப்படி விரல்களில் அணியப்படும் மோதிரம் நம் சரீரத்தை  சுத்தப்படுத்துகிறது.

தர்பை பட்டதெல்லாம் பவித்ரம் ஆகும் என்பது ஒரு சாஸ்திர பூர்வமான உண்மை. சூரிய சந்திரகிரகண காலங்களில் தர்பையை உணவு மற்றும் தண்ணீர் உள்ள பாத்திரங்களில் தர்பையை  போட்டு வைப்பார்கள் இப்படி செய்வதால் அவைகள் உடலுக்கு கேடான ரேடியேஷன் களிலிருந்து பாதுகாக்கபடுகிறது. கிரகண காலங்களில் தோன்றும் நுண் கிருமிகளிலிருந்து தர்பை உணவு பொருள்களை பாது காக்கிறது.

இதையும் படியுங்கள்:
ஆசிர்வாதம் செய்ய ஏன் வலது கையை மட்டுமே பயன்படுத்துகிறோம்?
Amazing spiritual secrets

தர்பையின் பிறப்பை பற்றி கூறும் போது அது விஷ்ணுவின் கூர்ம அவதாரம் ஆமையின் ஓட்டில் இருந்து வந்ததாக புராணங்கள் சொல்கின்றன.

இந்து மதத்தில் மட்டுமல்லாமல்  புத்த மதத்திலும் தர்ப்பையின் மகத்துவம் கூறப்பட்டுள்ளது. புத்த பிரான் தர்பையில் ஆன ஆசனத்தில் அமர்ந்த வண்ணம் தியானித்துதான் ஞானம் பெற்றதாக புத்த நூல்கள் தெரிவிக்கின்றன 

சாஸ்த்ரா யூனிவெர்சிடியில் நடத்தபட்ட ஆராய்ச்சியில் தர்பைக்கு நுண் கிருமிகளை அழிக்குமாற்றாலும் கதிர் வீச்சுகளில் இருந்து உணவு பொருட்களை கேடயம்போல காக்கவும் முடிகிறது என்று கண்டறிந்திருக்கிறார்கள்.

ஆயுர்வேதத்தில்  தர்பையை  நீரிழிவு மற்றும் கிட்னி  சம்பந்தமான நோய்களுக்கு  மருந்துகள் தயார் செய்ய  பயன்  படுத்துகிறார்கள் . தர்பயினால் செய்த ஆசனத்தில் அமர்ந்து தியானம் செய்யும் போது அது உடலை குளிர்ச்சியாக வைக்கிறது. அது மட்டு மல்லாது தர்ப்பையால் ஆனா ஆசனம் பாம்பு தேள் போன்ற விஷ ஜந்துக்கள் நம்மை நெருங்கவிடாமல் விரட்டவும் செய்கிறது.

இதையும் படியுங்கள்:
24 மணிநேரம்... 110 கிலோமீட்டர்... வெறும் கால்களில் ஒரு பக்திப் பயணம்!
Amazing spiritual secrets

தர்ப புல்லை பறிப்பதில் சில நிபந்தனைகள் கடைபிடிக்கப் படுகின்றன . தர்பை பரி ப்பவர்கள் பவித்ர மனதோடு மந்திரங்களை உச்சரித்த வண்ணம் பவ்யமாக  செய்யவேண்டும். தர்பை பறிப்பதற்கு உகந்த தினம்  கிருஷ்ண பக்ஷ பிரதமை திதி ஆகும். நுனி பாதிக்கப் பட்ட தர்பைகளை உபயோகிக்க கூடாது.

logo
Kalki Online
kalkionline.com