ஆயுத பூஜையில் பொரி, சுண்டல் படைப்பது ஏன்? சாஸ்திரம் மற்றும் அறிவியல் உண்மைகள்!

வெறும் வழிபாட்டு உணவு மட்டுமல்ல; இதன் பின்னணியில் இருக்கும் சுவாரஸ்யமான காரணங்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் இதோ!
ஆயுத பூஜை - Ayudha Pooja Significance
ஆயுத பூஜை - Ayudha Pooja SignificanceImage credit:Gemini
சேலம் சுபா

சேலம் சுபா எனும் பெயரில் பல வருடங்களாக முன்னணி பத்திரிக்கைகள் நாளிதழ்களில் கட்டுரைகள் , கதைகள், நேர்காணல்கள் எழுதி வருகிறேன்.15 வயதில் துவங்கிய எழுத்து பயணத்தில் தற்போது பாரம்பரியம் மிக்க கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக உங்களிடம் எனது படைப்புகள் இணைவதில் பெரு மகிழ்ச்சி. வாழ்வியல், தன்னம்பிக்கை, ஆன்மீகக் கட்டுரைகளில் ஆர்வம். "உறவுச்சங்கிலி" எனும் சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது. எழுத்து என்பது வரம். அது படிப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் அமையவேண்டும் என்பதை கருத்தில் வைத்து எழுதுகிறேன். நிச்சயம் நீங்களும் விரும்புவீர்கள். ஆதரவு அளிக்கும் கல்கிக்கு நன்றி. தொடர்ந்து பயணிப்போம்.

Updated on: 

சிறுவர், சிறுமியர் முதல் பெரியவர்கள் வரை இணைந்து கொண்டாடும் இந்துப் பண்டிகை எது எனில் அது நவராத்திரி மற்றும் ஆயுத பூஜை என தாராளமாக சொல்லலாம். நவராத்திரியின் இறுதியில் வரும் ஆயுத பூஜை & சரஸ்வதி பூஜை இந்த வருடம் அக்டோபர் 19 திங்கட்கிழமை அன்று வருகிறது.

ஆயுத பூஜை என்பது நவராத்திரியின் முக்கியமான ஒரு நாளாகக் கருதப்படுகிறது. நாம் வாழ்க்கையில் பயன்படுத்தும் கருவிகள், இயந்திரங்கள், வாகனங்கள், புத்தகங்கள், தொழில் உபகரணங்கள் ஆகியவற்றை சுத்தம் செய்து, அவற்றுக்கு நன்றி தெரிவித்து வழிபடும் பாரம்பரியம் இது.

அந்த சமயம் வீட்டினை சுத்தம் செய்து கருவிகள், கதவுகள், புத்தகங்கள் என விபூதி பட்டை அடித்து சந்தனம் குங்குமம் இடுவது வழக்கம். இதை விளையாட்டாக செய்ய குழந்தைகளும் முன்வருவார்கள்.

வீடே சந்தனம் கமழும் ஆன்மீக இடமாகத் திகழும். நல்ல நேரம் பார்த்து நாம் ஓட்டும் வாகனம் முதல் வாழ்வாதாரம் தரும் லேப்டாப் வரை பூஜை செய்து அவற்றுக்கு கடவுள் அருளால் நன்றி சொல்லும் தினமாகவே ஆயுத பூஜை உள்ளது.

ஆயுத பூஜையில் கருவிகளை சுத்தம் செய்து வழிபடுவது போலவே, விவசாயம் மற்றும் உணவின் அடிப்படையான தானியங்களுக்கும் மரியாதை செலுத்தப்படுகிறது என்ற பண்பாட்டு விளக்கமும் உள்ளது. அதாவது ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாக கருவி, உழைப்பு, விளைச்சல், உணவு , நன்றி என்ற ஒரு முழுமையான சுழற்சியை ஆயுத பூஜை குறிப்பிடுவது சிறப்பு.

இந்த நாளில் பொரி, கடலை, சுண்டல் போன்ற எளிய உணவுகளை நைவேத்தியமாகப் படைப்பது தமிழர் மற்றும் தென்னிந்திய மரபில் பரவலாகக் காணப்படும் வழக்கமாக உள்ளது. சுத்தமான வாழையிலையில் பொரிகடலையுடன் மேலே வெல்லத்தூள் அல்லது நாட்டுச்சர்க்கரை அவல் தூவி படைப்பதுண்டு. குறிப்பாக பொரிகடலை, பழங்களை பணிபுரிபவர்களுக்கு மட்டுமின்றி பூஜைக்கு வருபவர்களுக்கும் வழங்கி மகிழ்வது பல நிறுவனங்களின் வழக்கம். பொரியுடன் இனிய வெல்லம் இணையும் போது தனிச்சுவையாகும்.

ஆயுத பூஜை - Ayudha Pooja Significance
ஆயுத பூஜை - Ayudha Pooja SignificanceImage credit:Gemini

இவை வெறும் “பூஜை உணவுகள்” மட்டுமல்ல; உழைப்புக்கும், கருவிகளுக்கும், இயற்கைக்கும், உணவுக்கும் நன்றி தெரிவிக்கும் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகவும் பார்க்கலாம்.

எல்லாம் சரி... அதென்ன நல்ல நாளும் அதுவுமாக பொரியை ஏன் படைக்கிறோம் எனும் கேள்வி அனைவரிடமும் உண்டு. அறிவியல் மற்றும் சாஸ்திர ரீதியாக இதற்கான காரணம் என்ன என்பற்கான சிறு விளக்கம் இங்கு.

முதலில் சாஸ்திரம் சொல்லும் பின்னணி என்னவென்று பார்ப்போம்.

பொரி எளிமை மற்றும் வளத்தின் அடையாளமாகவும் சிறிய நெல் வெடித்து பொரியாக மாறுவது சிறிய தானியம் பெரிதாக விரிவடைவதைப் போலக் கருதப்படுகிறது. அதனால் வளர்ச்சி, பெருக்கம், செழிப்பு ஆகியவற்றின் குறியீடாக பொரி பார்க்கப்படுகிறது.

கடலை வலிமை மற்றும் நிறைவு

நிலத்தில் விளையும் பருப்பு வகையான கடலை, உழைப்பின் விளைவு மற்றும் உணவின் அடிப்படை வளத்தை குறிக்கும் என பாரம்பரியமாகக் கருதப் படுகிறது.

சுண்டல் நவராத்திரி நாட்களில் சக்தியின் அம்சங்களை வழிபடும்போது அவரவருக்கு உரித்தான பலவகை பருப்பு வகைகளால் சுண்டல் செய்வது வழக்கம். அதே நியதியின் தொடர்ச்சியாக ஆயுத பூஜை/விஜயதசமி காலத்திலும் படையலில் சுண்டல் நைவேத்தியமாக இடம்பெறுகிறது.

இதையும் படியுங்கள்:
ஆயுத பூஜை: தேதி, திதி நேரம் மற்றும் பூஜை செய்ய உகந்த நல்ல நேரம் எது?
ஆயுத பூஜை - Ayudha Pooja Significance

அறிவியல் பார்வையில்

இந்த உணவுகளுக்கு நடைமுறை காரணங்களும் உள்ளன.

படைக்கும் இந்த உணவுகளில் முக்கிய சத்துக்கள் அடங்கி நமது உடல் நலம் பேணுகிறது.

கார்போஹைட்ரேட் உள்ள பொரி, இலகுவான, எளிதில் பகிரக்கூடிய உணவான கடலை, புரதம், நார்ச்சத்து, நல்ல கொழுப்பு, நீண்ட நேரம் நிறைவுணர்வு தரும் அற்புத ஸ்நாக்ஸ் ஆன சுண்டல் ஆகியவை புரதம், நார்ச்சத்து, கனிமங்கள். விழா நேரத்தில் சத்தான சிற்றுண்டியாக அமைகிறது.

மேலும் சுண்டல் மற்றும் கடலை தாவரப் புரதம் மற்றும் நார்ச்சத்து வழங்குகின்றன. முன்பு அதிக உடல் உழைப்புடன் இருந்த சமூகங்களில் இத்தகைய பருப்பு வகைகள் எளிதில் கிடைக்கக்கூடிய மலிவான அதே நேரம் நீண்ட நேரம் பசியைக் கட்டுப்படுத்த உதவும் உணவுகளாக இருந்ததால் இவற்றை படைத்து வழிபடும் வழக்கம் உருவாகியிருக்கலாம்.

குறிப்பாக ஆயுத பூஜையில் பொரி, கடலை, சுண்டல் கட்டாயம் படைக்கவேண்டும் என்பது அனைவருக்கும் பொருந்தும் ஒரே சாஸ்திர விதியாக உள்ளது என்று கூற முடியாது. இது பெரும்பாலும் அந்தந்த பகுதி மற்றும் குடும்ப வழக்கத்துடன் இணைந்த நைவேத்திய மரபாகும்.

இதையும் படியுங்கள்:
கோவில் பிரசாதங்களின் தனித்துவ சுவைக்கும் மணத்திற்கும் இதுதான் காரணமா?
ஆயுத பூஜை - Ayudha Pooja Significance

உழைப்புக்கு மரியாதை

நம் வாழ்க்கையை முன்னேற்றும் உழைப்பையும் தொழிலையும் மதிப்பதே ஆயுத பூஜையின் முக்கியமான கருத்து. மேலும் கருவிகளுக்கு நன்றி, சுத்தத்தின் முக்கியத்துவம், கல்வியின் முக்கியத்துவம் உணர்த்தும் சரஸ்வதி வழிபாட்டுடன் தொடர்பு, நம்மை பாதுகாக்கும் வாகன பூஜை, உழைப்புக்கு நன்றி செலுத்தும் விதமாக விவசாயத்துக்கு மரியாதை , பகிர்ந்து உண்ணுதல் மற்றும் வளத்தைப் பகிர்தல் என்ற பண்பாட்டை உணர்த்தும் படையலின் (நைவேத்தியம்) சிறப்பு என ஏராளமான வாழ்க்கைத் தத்துவங்களை உள்ளடக்கிய ஆயுத பூஜையை மறவாமல் பொரிகடலை சுண்டலுடன் வழிபட்டு மகிழ்வோம்.

logo
Kalki Online
kalkionline.com