நவகிரகங்களின் பயோ-டேட்டா தெரியுமா உங்களுக்கு?

Navagraham
Navagraham

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

னித வாழ்வில் ஏற்படும் ஏற்ற தாழ்வுகளுக்கும், சுக துக்கங்களுக்கும் ஆன்மிக ரீதியான காரணமாக விளங்குபவை நவகிரகங்களே என்று கூறியுள்ளனர் ஆன்றோர். அப்படிப்பட்ட நவகிரகங்களின் குணநலன்களைக் குறிக்கும் அவர்களின் பயோ-டேட்டா குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

1. சூரியன்: நவகிரகங்களின் தலைவனான சூரிய பகவான் காசியப முனிவரின் குமாரர். ஒளிப்பிழம்பான இவர் சிம்ம ராசிக்கு அதிபதியாவார். இவரது திக்கு - கிழக்கு, அதிதேவதை - அக்னி, ப்ரத்யதி தேவதை - ருத்திரன், தலம் - சூரியனார் கோவில், நிறம் - சிவப்பு, வாகனம் - ஏழு குதிரைகள் பூட்டிய ரதம், தானியம் - கோதுமை, மலர் - செந்தாமரை, எருக்கு, வஸ்திரம் - சிவப்பு, ரத்தினம் - மாணிக்கம், நிவேதனம் - கோதுமை, ரவா, சர்க்கரைப் பொங்கல்.

2. சந்திரன்: பாற்கடலிலிருந்து தோன்றிய சந்திரன், தன்னொளி உடையவர். கடக ராசிக்கு அதிபதியான இவர், வளர்பிறையில் சுபராகவும், தேய்பிறையில் பாபராகவும் விளங்குபவர். இவரது திக்கு – தென்கிழக்கு, அதிதேவதை – ஜலம், ப்ரத்யதி தேவதை – கௌரி, தலம் – திருப்பதி, நிறம் - வெள்ளை. வாகனம் - வெள்ளைக் குதிரை, தானியம் – நெல், மலர் - வெள்ளை அரளி, வஸ்திரம் – வெள்ளாடை, ரத்தினம் – முத்து, நிவேதனம் - தயிர் சாதம்.

இதையும் படியுங்கள்:
திருப்பதியில் உள்ள முக்கிய மூன்று கோவில்களில் ஜூன் மாதம் நடக்கும் சிறப்பு உற்சவங்கள்
Navagraham

3. அங்காரகன் (செவ்வாய் பகவான்): வீரபத்திரரின் அம்சமான அங்காரகன் எனும் செவ்வாய் பகவான், முருகப்பெருமானை தெய்வமாகக் கொண்டவர். பாவப் பலனைக் கொடுக்கக்கூடிய குரூர். இவர் மேஷம், ரிஷ்பம் ராசிக்கு அதிபதி. இவரது திக்கு – தெற்கு, அதிதேவதை – நிலமகள், ப்ரத்யதி தேவதை – க்ஷேத்திரபாலகர், தலம் - வைத்தீசுவரன் கோவில், நிறம் – சிவப்பு, வாகனம் – ஆட்டுக்கிடா, தானியம் – துவரை, மலர் - செண்பகப்பூ, சிவப்பு அரளி, வஸ்திரம் - சிவப்பு ஆடை, ரத்தினம் – பவளம், நிவேதனம் - துவரம் பருப்பு பொடி சாதம்.

4. புதன் பகவான்: கல்விக்கு அதிபதியான புதன் பகவான் சந்திரனின் குமாரர் ஆவார். தீய சக்திகளை விளைவிக்கும் பீடைகளை அழிக்கக்கூடிய ஆற்றல் கொண்டவ இவர், மிதுனம், கன்னி ராசிகளின் அதிபதி. இவரது திக்கு - வடகிழக்கு, அதிதேவதை - மகாவிஷ்ணு, ப்ரத்யதி தேவதை - நாராயணன், தலம் - மதுரை, நிறம் - வெளிர் பச்சை, வாகனம் - குதிரை, தானியம் - பச்சைப் பயறு, மலர் - வெண்காந்தள், வஸ்திரம் - வெண்ணிற ஆடை, ரத்தினம் - மரகதம், அன்னம் - பாசிப் பருப்பு பொடி சாதம்.

5. குரு பகவான்: தேவ குரு என்ற பட்டத்தைக் கொண்ட பிருகஸ்பதி முழு சுப கிரகமாவார். இவர் தோஷங்கள் அனைத்தையும் நீக்கக்கூடியவர். தனுசு, மீன ராசிகளுக்கு அதிபதி. இவரது திக்கு - வடக்கு, அதிதேவதை - பிரம்மா, ப்ரத்யதி தேவதை - இந்திரன், தலம் - திருச்செந்தூர், நிறம் - மஞ்சள், வாகனம் - மீனம், தானியம் - கடலை, வஸ்திரம் - மஞ்சள் நிற ஆடை, ரத்தினம் - புஷ்பராகம், நிவேதனம் - கடலைப் பொடி சாதம், சுண்டல்.

இதையும் படியுங்கள்:
வைகாசி விசாகம் முதல் ஜூன் மாதத்தில் வரும் முக்கிய ஆன்மிக நிகழ்வுகள்...
Navagraham

6. சுக்கிரன் பகவான்: அசுரர்களின் குரு சுக்கிராச்சாரியார் எனும் சுக்கிர பகவான். மழைக்கோள் என அழைக்கப்படக்கூடியவர். இவர் ரிஷபம், துலாம் ராசிகளுக்கு அதிபதி ஆவார். இவரது திக்கு – கிழக்கு, அதிதேவதை - இந்திராணி, ப்ரத்யதி தேவதை - இந்திர மருத்துவன், தலம் - ஸ்ரீரங்கம், வாகனம் – முதலை, தானியம் - மொச்சை, மலர் - வெண் தாமரை, வஸ்திரம் - வெள்ளாடை, ரத்தினம் - வைரம், நிவேதனம் - மொச்சைப் பொடி சாதம்.

7. சனி பகவான்: சூரிய பகவானின் குமாரர் இவர். பாவ பலன்களைத் தருவதில் ஈஸ்வர பட்டம் பெற்றவர். சனி பகவானைப் போல கொடுப்பவரும் இல்லை, கெடுப்பவரும் இல்லை என்பது ஜோதிட பழமொழி. மகரம், கும்பம் ராசிகளுக்கு அதிபதி இவர். இவரது திக்கு - மேற்கு, அதிதேவதை - யமன், ப்ரத்யதி தேவதை - பிரஜாபதி, தலம் - திருநள்ளாறு, நிறம் - கருமை, வாகனம் - காகம், தானியம் - எள், மலர் - கருங்குவளை, வன்னி, வஸ்திரம் - கருப்பு நிற ஆடை, ரத்தினம் - நீலம், நிவேதனம் - எள்ளுப்பொடி சாதம்.

இதையும் படியுங்கள்:
ஜூன் மாத நாள்காட்டி: 12 ராசிகளுக்கான ‘சந்திராஷ்டமம்’ நாட்கள்
Navagraham

8. ராகு: நிழல் கிரகம் என அழைக்கப்படும் ராகு அசுரத் தலையும், பாம்பின் உடலையும் கொண்டவர். வீரம் மிக்க இவர் கருநாகம் என்று அழைக்கப்படுபவர். இவரது திக்கு - தென்மேற்கு, அதிதேவதை - பசு, ப்ரத்யதி தேவதை - பாம்பு, தலம் - திருக்காளத்தி, நிறம் - கருமை, வாகனம் - நீல சிம்மம், தானியம் - உளுந்து, மலர் - மந்தாரை, வஸ்திரம் - கருப்பு நிற ஆடை, ரத்தினம் - கோமேதகம், நிவேதனம் - உளுத்தம் பருப்புப் பொடி சாதம்.

9. கேது: நாகத்தின் தலையும், அசுரனின் உடலையும் கொண்ட இவர் செந்நாகம், சிகி என்றும் அழைக்கப்படுபவர். இவரது திக்கு - வட மேற்கு, அதிதேவதை - சித்திரகுப்தன், ப்ரத்யதி தேவதை - பிரம்மன், தலம் - திருக்காளத்தி, நிறம் - செம்மை, வாகனம் - கழுகு, தானியம் - கொள்ளு, மலர் - செவ்வல்லி, வஸ்திரம் - பல நிற ஆடை, ரத்தினம் - வைடூரியம், நிவேதனம் - கொள்ளுப்பொடி சாதம்.

logo
Kalki Online
kalkionline.com