திருமணத்தடை நீங்கி சந்தான பாக்கியம் பெற எந்த விநாயகரை எப்படி வழிபட வேண்டும்?

கணவன்-மனைவி ஒற்றுமை பெருகவும், குழந்தை பாக்கியம் பெறவும் உதவும் சக்திமிக்க விநாயகர் வழிபாட்டு முறைகள்.
விநாயகர் வழிபாடு - Ganesha Worship,
விநாயகர் வழிபாடு - Ganesha Worship,
இந்திராணி தங்கவேல்

தஞ்சாவூரைச் சேர்ந்த இந்திராணி தங்கவேல், மங்கையர் மலரில் வெளியான முதல் கட்டுரை மூலம் எழுத்துப் பயணத்தைத் தொடங்கியவர், இன்று கல்கி ஆன்லைனில் தொடர்ந்து எழுதி வருகிறார். அருமையான சிறுகதைகளும் பயனுள்ள பல கட்டுரைகளும் எழுத வல்லவர்.

Updated on: 

திருமணத்தடை நீங்கி, கணவன்-மனைவி இடையே அன்யோன்யமும் ஒற்றுமையும் பெருகி, மகப்பேறு (மழலைச் செல்வம்) பெற வழிபட வேண்டிய சிறப்புமிக்க கணபதி வடிவங்கள் மற்றும் வழிபடும் முறைகள்:

சுயம்வர கணபதி: திருமணத்தடைகளைப் போக்கி, நல்ல வரன் அமையவும், தம்பதியர் இடையே இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை பலப்படவும் சுயம்வர கணபதி வழிபாடு மிகச் சிறந்தது.சுயம்வர பார்வதி மந்திரத்துடன் கணபதியை வழிபடத் திருமணத் தடைகள் அகலும்.

சுயம்வர பார்வதி மூல மந்திரம்:

"ஓம் ஹ்ரீம் யோகினீ யோகேஸ்வரி யோக பயங்கரி சகல ஸ்தாவர ஜங்கமஸ்ய முக ஹ்ருதயம் மம வசம் ஆகர்ஷய ஆகர்ஷய நமஹ:"

மந்திரத்தை ஜபிக்கும் முறை:

நேரம்: அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் (காலை 4:30 - 6:00) அல்லது மாலை விளக்கேற்றும் நேரத்தில் ஜபிப்பது மிகவும் விசேஷம்.

தீபம்: நெய் அல்லது நல்லெண்ணெய் தீபமேற்றி, ஸ்ரீ பார்வதி தேவி அல்லது சுயம்வர கணபதி/சிவன்-பார்வதி படத்திற்கு முன் அமர்ந்து ஜபிக்க வேண்டும்.

எண்ணிக்கை: தினமும் 108 முறை ஜபிப்பது சிறந்தது (குறைந்தது 21 முறை அல்லது 108 முறை மாலையைப் பயன்படுத்தி எண்ணலாம்).

நைவேத்தியம்: தேவிக்குக் கற்கண்டு, உலர் திராட்சை அல்லது காய்ச்சிய பால் நைவேத்தியமாக வைக்கலாம்.

சங்கல்பம்: கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து அல்லது தனித்தனியாக மனதார தங்களது பிரார்த்தனையை (திருமணம் நிறைவேற / தம்பதி ஒற்றுமை / குழந்தை பாக்கியம்) வேண்டி ஜபிக்க வேண்டும்.

வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை அல்லது பௌர்ணமி நாட்களில் இம்மார்க்கத்தைத் தொடங்குவது கூடுதல் நற்பலன்களைத்தரும்.

இதையும் படியுங்கள்:
சுவாமிமலை தங்க கவசம் வைரவேல் தரிசனம்! காணக் கண் கோடி வேண்டும்!
விநாயகர் வழிபாடு - Ganesha Worship,

சந்தான கணபதி: குழந்தைப்பேறு (மழலைச் செல்வம்) பெற விரும்புபவர்கள் வழிபட வேண்டிய முதன்மை வடிவம் சந்தான கணபதி.விநாயகர் கோவிலில் குழந்தைப் பேறு (நன்மக்கட்பேறு) வேண்டி வழிபடுவதற்குச் சில சிறப்பு வழிபாட்டு முறைகள் மரபுவழியாகப் பின்பற்றப்படுகின்றன.

வழிபடும் முறை மற்றும் அர்ச்சனை

சந்தான கணபதி வழிபாடு: கோவிலில் உள்ள விநாயகர் அல்லது சந்தான கணபதியின் வடிவத்திற்குப் பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி அல்லது வளர்பிறை சதுர்த்தி நாட்களில் வழிபாடு செய்வது சிறப்பு. தனது மடியில் ஒரு குழந்தையை ஏந்தியவாறு காட்சி தரும் விநாயகரின் வடிவம் இது. இவரைத் தொடர்ந்து வழிபட்டு வர மகப்பேறு பாக்கியம் விரைந்து கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இதையும் படியுங்கள்:
பிள்ளையாரை எங்கு தொடங்கினாலும் ஏன் முதலில் வணங்க வேண்டும்? புராண ரகசியங்கள் இதோ!
விநாயகர் வழிபாடு - Ganesha Worship,

அபிஷேகம்: விநாயகருக்குப் பால் அபிஷேகம் அல்லது இளநீர் அபிஷேகம் செய்து வழிபடுவது சந்தான பாக்கியத்தை விரைவுபடுத்தும் என்பது நம்பிக்கை.

அர்ச்சனைப் பொருட்கள்:

அருகம்புல்: விநாயகருக்கு மிகவும் உகந்த அருகம்புல் மாலை சாற்றி அர்ச்சனை செய்யவேண்டும்.

மல்லிகைப் பூ / தாமரைப்பூ: மங்களகரமான வெண்மலர்களால் அர்ச்சனை செய்வது விசேஷம்.

இரட்டைத் தேங்காய்: தம்பதியர் இருவரும் சேர்ந்து இரட்டைத் தேங்காய் சிதறுகாயாக உடைத்து வேண்டிப் பிரார்திக்கலாம்.

தம்பதியருக்கான சிறப்புப் பிரார்த்தனை:

பிரதட்சிணம் (வலம் வருதல்): தம்பதியர் இருவரும் இணைந்து விநாயகரை 21 முறை அல்லது 108 முறை வலம் வந்து மனதாரப் பிரார்த்தனை செய்யவேண்டும்.

தோப்புக்கரணம்: 18 அல்லது 108 தோப்புக் கரணமிட்டுத் தங்கள் குறைகளைப் பொறுத்து அருளுமாறு வேண்டிக்கொள்ளலாம்.

நைவேத்தியம்: கொழுக்கட்டை, சுண்டல் அல்லது பால் பாயாசம் நைவேத்தியம் செய்து, அதை அங்கிருக்கும் குழந்தைகளுக்குப் பிரசாதமாக வழங்கி மகிழலாம். (குழந்தைகளுக்குப் பிரசாதம் வழங்குவது மகப்பேறு யோகத்தை அதிகரிக்கும் ஐதீகம்).

விநாயகர் வழிபாடு - Ganesha Worship,
விநாயகர் வழிபாடு - Ganesha Worship,

நன்மக்கள் பேறுக்கான சிறப்பு வழிபாடு: அரச மரத்தடி விநாயகர்

ஆற்றங்கரை அல்லது குளக்கரையில் உள்ள அரச மரத்தடி விநாயகரை அதிகாலையில் வலம் வருவது மிகவும் பலன் தரும். அதிகாலை வேளையில் (சூரிய உதயத்திற்கு முன்) அரச மரமும் வேப்ப மரமும் இணைந்திருக்கும் இடத்திலுள்ள விநாயகரை தம்பதியர் இருவரும் இணைந்து 21 அல்லது 108 முறை வலம் வரவேண்டும்.

அரச மரத்திலிருந்து வெளிவரும் காற்று பெண்களின் கருப்பை இயக்கத்தைச் சீராக்கவும், ஆண்களின் உயிரணு வீரியத்தை உயர்த்தவும் உதவும் என அறிவியல் பூர்வமாகவும் நம்பப்படுகிறது.

அரச மரத்தடி விநாயகருக்கு நெய் தீபமேற்றி 21 முறை வலம் வந்து வழிபடுவது விசேஷம்.

தம்பதியர் ஒற்றுமை மற்றும் சந்தானபாக்கியத்திற்கான வழிபாட்டு முறைகள்

சங்கடஹர சதுர்த்தி வழிபாடு: பிரதி மாதம் வரும் சங்கடஹர சதுர்த்தி அன்று கணவனுக்கு மனைவி / மனைவிக்குக் கணவன் என இருவருமாகச் சேர்ந்து விநாயகருக்கு அருகம்புல், எருக்கம் பூ மாலை சாற்றி அர்ச்சனை செய்யவேண்டும்.

செவ்வாய் & வெள்ளிக்கிழமை: செவ்வாய்க்கிழமைகளில் கார்த்திகை நட்சத்திரம் அல்லது சதுர்த்தி திதி இணையும் நாளில் கணபதி ஹோமத்திலோ அல்லது அருகிலுள்ள விநாயகர் கோவிலிலோ நெய் தீபமேற்றி வழிபடலாம்.

மஞ்சள் விநாயகர் வழிபாடு: வீட்டில் வளர்பிறை சதுர்த்தி அன்று தம்பதியர் இருவரும் சேர்ந்து மஞ்சள் தூளில் விநாயகர் பிடித்து வைத்து, அருகம்புல் மற்றும் உதிரிப் பூக்களால் அர்ச்சித்து அகல் தீபமேற்றி வழிபட வேண்டும்.

பிரசாத நைவேத்தியம்: கணபதிக்கு விருப்பமான மோதகம் (கொழுக்கட்டை), சுண்டல் அல்லது பால் பாயாசம் நைவேத்தியம் செய்து வழிபடலாம்.

முக்கியத் தலங்கள்

திருமணஞ்சேரி (மயிலாடுதுறை அருகில்): திருமணத் தடை நீங்கவும், கணவன்-மனைவி ஒற்றுமைக்கும் புகழ்பெற்ற தலம்.

ஈச்சனாரி விநாயகர் கோவில் (கோயம்புத்தூர்): திருமணப் பேறு மற்றும் நன்மக்கட்பேறு அருளும் சக்திமிக்க தலம்.

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் (சிவகங்கை): நினைத்த காரியம் நிறைவேறவும், சந்தான பாக்கியம் பெறவும் இவரை வழிபடுவது விசேஷம்.

இதையும் படியுங்கள்:
திருப்பதி ஏழுமலையான் கண்கள் ஏன் மூடப்பட்டிருக்கிறது? வியாழன், வெள்ளியின் ரகசிய அலங்காரங்கள்!
விநாயகர் வழிபாடு - Ganesha Worship,