அனைத்து வயது பெண்களும் செல்லக்கூடிய ஐயனின் ஐந்து பஞ்ச சாஸ்தா கோவில்கள்!

அனைத்து வயது பெண்களும் செல்லக்கூடிய சபரிமலையை போல் சக்தி வாய்ந்த ஐந்து கோவில்கள் ஐயனின் ஐந்து பஞ்ச சாஸ்தா கோவில்கள் உள்ளன.
Pancha Sastha temples
Pancha Sastha templesimage credit-Wikipedia
Published on

இந்தியாவில், சில பழமையான புகழ்பெற்ற கோவில்களில் ஆகம விதிகள் இன்றும் கூட கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் சில கோவில் களுக்குள் பெண்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 70 வருட காலமாகக் காத்திருப்பிற்கு பின்னர் 2016-ல்தான் பெண்களுக்கு சிக்னாபூர் சனி கோவிலுக்குள் செல்ல அனுமதி கிடைத்திருக்கிறது. ஆனால், இப்போதும்கூட சபரிமலை கோவிலுக்குச் செல்ல பெண்களுக்கு அனுமதியில்லை.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் மாதவிடாய் வயதுடைய பெண்கள் (10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள்) பாரம்பரியமாக அனுமதிக்கப்படுவதில்லை என்பது நீண்டகால மரபாக உள்ளது. ஏனெனில் ஐயப்பன் ஒரு நைஷ்டிக பிரம்மச்சாரி (கடைப்பிடிக்கப்பட்ட பிரம்மச்சாரி) என்று கருதப்படுகிறது.

ஆனால் அனைத்து வயது பெண்களும் செல்லக்கூடிய சபரிமலையை போல் சக்தி வாய்ந்த ஐந்து கோவில்கள் ஐயனின் ஐந்து பஞ்ச சாஸ்தா கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் ஐயப்பன் பிரம்மச்சாரி கோலத்தில் இல்லாமல் பல ரூபத்தில் இருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
ஐயப்ப பக்தர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய அறுபடை வீடு திருத்தலங்கள்!
Pancha Sastha temples

சபரிமலைக்குச் செல்ல விரும்பும் பெண்கள் வழிபடக்கூடிய, ஐயப்பனின் தொடர்புடைய சில முக்கிய இடங்கள் மற்றும் "பெண்களின் சபரிமலை" என அழைக்கப்படும் இடங்கள் இதோ...

* ஆற்றுக்கால் பகவதி கோவில் (திருவனந்தபுரம்): 'பெண்களின் சபரிமலை' என அழைக்கப்படுகிறது. ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உலகம் முழுவதும் புகழ்பெற்ற கோவில் என்பது கூடுதல் சிறப்பாகும். இதற்கு முக்கிய காரணம் இந்த கோவிலில் நடைபெறும் பொங்கல் இடும் திருவிழாவாகும். இந்த கோவிலின் கடவுள் பார்வதி தேவி ஆவார். இவரைத்தான் பகவதி அம்மனாக வழிபாடு செய்து வருகின்றனர். ஆனால் இன்னும் சிலர், கண்ணகியின் அவதாரமே ஆற்றுக்கால் பகவதி அம்மன் என்று தலபுராணமாக கூறகின்றனர்.

* கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில், குளத்துப்புழா ஆற்றங்கரையில் அமைந்துள்ள குளத்துப்புழை சாஸ்தா கோவில், பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஐயப்பனின் 108 சாஸ்தா தலங்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் ஐயப்பன் 8 வயது குழந்தை வடிவத்தில் பால சாஸ்தாவாக இருப்பதால் அனைத்து வயது பெண்களும் செல்லலாம்.

* அடுத்ததாக கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்திலேயே இருக்கும் ஆரியங்காவு சாஸ்தா கோவில். மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஆரியங்காவு சாஸ்தா கோவில் (Aryankavu Sastha Temple) மிகவும் புகழ்பெற்ற ஐந்து முக்கிய ஐயப்பன் (சாஸ்தா) கோவில்களில் ஒன்றாகும். இங்கே ஐயப்பன் 'திரு ஆரியன்' என்றும் பாண்டிய மன்னன் பெண் புஷ்கலையை திருமணம் செய்துவிட்டு பூரணி மற்றும் புஷ்கலை தேவிகளுடன் திருமணக் கோலத்தில் (கிரகஸ்த நிலையில்)காட்சி அளிக்கிறார். தாம்பத்திய கோலத்தில் இருப்பதால் அனைத்து பெண்களும் தாராளமாக பார்க்கலாம்.

இந்த கோவில் சபரிமலையை போன்றே 18 படிகளைக் கொண்டது. ஐயப்பன் இரு மனைவியருடன் (பூர்ணா மற்றும் புஷ்கலை) இருப்பதால், இவரை வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கும் என்பது நம்பிக்கை. இங்குள்ள தர்மசாஸ்தா, தமிழ் கலாச்சார பாரம்பரியப்படி வழிபடப்படுகிறார். ஆரியங்காவு கோவில், சபரிமலையை போன்றே பிரம்மச்சரியம் காக்கும் இடமாக இல்லாமல், குடும்பத் தலைவனாக சாஸ்தா அருளும் தலமாக சிறப்பு பெற்று விளங்குகிறது.

* அச்சன்கோவில் தர்மசாஸ்தா கோவில், கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள ஐயப்பனின் புகழ்பெற்ற பஞ்ச சாஸ்தா தலங்களில் ஒன்றாகும். இங்கே ஐயப்ப கிரகஸ்தர் கோலத்தில் இருப்பதால் இங்கேயும் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம், 18 படிகள் ஏறலாம்.

* கடைசியாக எருமேலி ஐயப்பன் கோவில் (எருமேலி ஸ்ரீ தர்ம சாஸ்தா கோவில்), கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலை யாத்திரையின் மிக முக்கியமான புனிதத் தலமாகும். மகிஷியை வதம் செய்ய ஐயப்பன் வேட்டை கோலத்தில் புறப்பட்ட இடம்.

இதையும் படியுங்கள்:
பரசுராமர் நிறுவிய ஐயப்பனின் ஐந்து பருவங்களுக்கான 5 கோயில்கள்!
Pancha Sastha temples

இங்கே ஐயப்பன் வேட்டை கோலத்தில் காட்சி அளிப்பார். இக்கோவில் ஐயப்பனின் படைவீடு என்றும், சாஸ்தாவின் 'விசுத்தி சக்ர' கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. சபரிமலை யாத்திரையின்போது பக்தர்கள் நிச்சயம் வந்து வழிபட வேண்டிய கோவில் இதுவாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com