நவராத்திரி 9 நாட்கள்: சாப்பிட வேண்டிய சாத்விக உணவுகள்... தவிர்க்க வேண்டிய முக்கிய கட்டுப்பாடுகள்!

நவராத்திரி 9 நாட்களும் ஆன்மீகத் தூய்மையைக் கடைப்பிடிக்க பாரம்பரியமாகச் செய்யக்கூடாத சில முக்கியக் கட்டுப்பாடுகள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன
வெற்றிலை பாக்கு தாம்பூலம்
வெற்றிலை பாக்கு தாம்பூலம்AI image
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on: 

புரட்டாசி மாதத்தில் மகாளய அமாவாசைக்கு பிறகு வரும் நவராத்திரியை சாரதா நவராத்திரி என்று கொண்டாடுகிறோம். நவராத்திரி என்பது அம்பிகையின் (பெண் தெய்வத்தின்) அருளைப் பெற ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் முக்கியமான இந்து பண்டிகையாகும். இந்த விழா ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் (செப்டம்பர் - அக்டோபர்) வளர்பிறை பிரதமை முதல் நவமி வரை 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது. அம்பிகையின் ஒன்பது சக்தி ரூபங்களை வழிபடுவதற்கான காலமாக நவராத்திரி கருதப்படுகிறது. நவராத்திரி என்பது தெய்வீக ஆற்றலை, அம்பிகையின் அருளை பெறுவதற்கான காலமாகும்.

'நவராத்திரி' என்றால் 'ஒன்பது இரவுகள்' என்று பொருள். 'நவ' என்றால் 'ஒன்பது', 'ராத்திரி' என்றால் 'இரவு'. ஒவ்வொரு இரவும் நாம் உள்முகமாகத் திரும்பி (உறங்கி) மறுநாள் காலையில் புத்துணர்ச்சியுடனும் புத்துயிர் பெற்றும் உணர்வதுபோல, நவராத்திரி என்பது நம்மை நாமே உணர்ந்து, மூலத்திற்குத் திரும்புவதற்கான ஒரு காலமாகும்.

நவராத்திரி கொண்டாட்டங்கள் தொடர்ச்சியான பூஜைகள், யாகங்கள் மற்றும் ஹோமங்களால் நிறைந்துள்ளன. இவை அனைத்துத் துன்பங்களையும், துக்கங்களையும், வலிகளையும் நீக்கி, அமைதி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சியை வழங்குவதில் ஒரு சிறப்பு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன.

அந்த வகையில் இந்த ஆண்டு (2026) நவராத்திரி விழா அக்டோபர் 11 முதல் அக்டோபர் 20 வரை கொண்டாடப்படுகிறது. நவராத்திரி விரதம் இருப்பவர்கள் இந்த ஓன்பது நாட்களும் விரதம் இருந்து சக்தியை வழிபாடு செய்யலாம்.

9 இரவுகள் கொண்டாடப்படும் இந்த விழாவில் முதல் 3 நாட்கள் துர்க்கை (வீரம் மற்றும் தைரியம்), அடுத்த 3 நாட்கள் மகாலட்சுமி (செல்வம்), கடைசி 3 நாட்கள் சரஸ்வதியை (கல்வி மற்றும் ஞானம்) பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர்.

நவராத்திரி ஒன்பது நாட்களும் சாப்பிட (சாத்விக ) மற்றும் தவிர்க்கவேண்டிய உணவுகள்:

பொதுவாக நவராத்திரியின் 9 நாட்களும் சாத்விக உணவுகளை மட்டுமே உட்கொள்ளும் வழக்கம் உள்ளது. இந்த 9 நாட்களும் உடலையும் மனதையும் தூய்மையாக வைத்திருக்க இந்த சாத்விக உணவு முறை பெரிதும் உதவுகிறது.

சாப்பிட வேண்டிய உணவுகள்: (நவராத்திரி உணவுகள்)

அனைத்து வகையான புதிய பழங்கள், உலர் பழங்கள் (Nuts), மக்கானா, பால், தயிர், மோர், பன்னீர், நெய், சபுதானா (Javvarisi), நிலக்கடலை, சிறுதானியம், உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, சேனைக்கிழங்கு, சுரைக்காய், பூசணிக்காய், தக்காளி, வெள்ளரிக்காய், இஞ்சி, எலுமிச்சை, மற்றும் சாதாரண உப்புக்கு பதிலாக கல் உப்பு (Sendha Namak) பயன்படுத்தலாம்.

நவராத்திரி உணவுகள்
நவராத்திரி உணவுகள்AI image

தவிர்க்க வேண்டிய உணவுகள் :

கோதுமை, அரிசி, மைதா, ரவை, மற்றும் கடலை மாவு, வெங்காயம், பூண்டு, மஞ்சள் தூள், பெருங்காயம், கடுகு, சாதாரண அயோடின் உப்பு, பயறு மற்றும் பருப்பு வகைகள் போன்ற ‘தாமச’ உணவுகளை 9 நாட்களுக்குத் தவிர்க்க வேண்டும்.

அனைத்து விதமான நான்-வெஜ் உணவுகள் (அசைவம்), முட்டை மற்றும் மது அருந்துதல் ஆகியவற்றை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.

நவராத்திரி இந்த 9 நாட்களும் ஆன்மீகத் தூய்மையைக் கடைப்பிடிக்க பாரம்பரியமாகச் செய்யக்கூடாத சில முக்கியக் கட்டுப்பாடுகள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன:

* வீட்டை அசுத்தமாக வைத்திருக்கக் கூடாது. பூஜையின் போது கிழிந்த அல்லது துவைக்காத அழுக்கு ஆடைகளை அணிவதைத் தவிர்க்கவேண்டும்.

* பூஜை அறையிலோ அல்லது வழிபாட்டின் போதோ பெல்ட், காலணிகள், பைகள் போன்ற தோல் சார்ந்த பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும்.

* நவராத்திரி ஒன்பது நாட்களும் வீடுகளில் முற்றிலும் தூய்மையான சைவ உணவுகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும். அசைவ உணவுகளைத் தொடக் கூடாது.

இதையும் படியுங்கள்:
குட்டீஸ்களா! நவராத்திரி கொலு பொம்மைகள் வைப்பது எப்படி என உங்களுக்கு தெரியுமா?
வெற்றிலை பாக்கு தாம்பூலம்

* வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவை 'தாமச' (சோம்பல் மற்றும் உணர்ச்சியைத் தூண்டும்) உணவுகளாகக் கருதப்படுவதால், இந்த நாட்களில் சமைக்கும் உணவில் இவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும்.

* வீட்டில் 'அகண்ட தீபம்' (தொடர்ந்து எரியும் விளக்கு) ஏற்றியிருந்தால் அல்லது நவராத்திரி கொலு வைத்திருப்பவர்கள், ஒன்பது நாட்களும் வீட்டைப் பூட்டிவிட்டு அனைவரும் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். வீட்டில் யாராவது ஒருவர் கண்டிப்பாக இருப்பது நல்லது.

* 9 நாட்களும் மது அருந்துவது, புகைபிடிப்பது மற்றும் பிற போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது இந்த வழிபாட்டு காலத்தில் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

* நவராத்திரி காலம் முடியும் வரை நகம் வெட்டுவது, முடி வெட்டிக்கொள்வது மற்றும் தாடி ஷேவிங் (Shaving) போன்ற செயல்கள் செய்வதைத் தவிர்க்கவேண்டும்.

* நவராத்திரி விரதத்தை தீவிரமாகப் பின்பற்றுபவர்கள் ஆடம்பரக் கட்டிலில் தூங்குவதைத் தவிர்த்து, தரையில் பாய் விரித்து உறங்குவது (பூமி சயனம்) ஆன்மீக ஒழுக்கத்திற்கு நல்லது.

நவராத்திரி கொண்டாட்டம் - Navarathri Celebration,
நவராத்திரி கொண்டாட்டம் - Navarathri Celebration,Image credit: Gemini

* விரதம் இருப்பவர்கள் பகல் நேரத்தில் தூங்குவதை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும். இது சோம்பேறித்தனத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது.

* வீட்டில் சண்டையிடுவது, கத்துவது, மற்றவர்களை பற்றி புறம் பேசுவது, வாக்குவாதங்களில் ஈடுபடுவது, பொய் சொல்வது போன்றவை எதிர்மறை ஆற்றலை உருவாக்கும் என்பதால் இவற்றைத் தவிர்க்கவேண்டும்.

* 9-ஆம் நாளான ஆயுத பூஜை/சரஸ்வதி பூஜை அன்று புத்தகங்கள், பேனா மற்றும் கல்வி உபகரணங்களை தேவியின் காலடியில் வைத்து வழிபட வேண்டும்; அன்று அவற்றை எடுத்துப் படிக்கக் கூடாது.

* நவராத்திரி என்பது பெண் சக்தியைக் கொண்டாடும் பண்டிகை என்பதால், வீட்டில் உள்ள பெண்களையோ அல்லது வெளியில் உள்ள பெண்களையோ எக்காரணம் கொண்டும் அவமதிக்கவோ, மனவருத்தத்திற்கு உள்ளாக்கவோ கூடாது.

செய்ய வேண்டியவை:

* நவராத்திரி நாட்களில் வாசலில் சுண்ணாம்பு மாவினால் கோலமிடாமால், பச்சரிசி மாவினால் மட்டுமே கோலமிட வேண்டும்.

இதையும் படியுங்கள்:
நவராத்திரி கொண்டாட்டத்தை அசத்தலாக திட்டமிடுவது எப்படி? எளிய கொலு கைட்!
வெற்றிலை பாக்கு தாம்பூலம்

* காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளைகளிலும் வீட்டில் விளக்கேற்றி, நைவேத்தியம் படைத்து தேவிக்கு உகந்த மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.

* வீட்டிற்கு வரும் பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, பூ, பழம், குங்குமம் தந்து உபசரிக்க வேண்டும். குறிப்பாக 8-ஆம் அல்லது 9-ஆம் நாளில் சிறுமிகளை (கன்யா) வீட்டிற்கு அழைத்து உணவளித்து ஆசி பெறுவது சிறப்பு.

* பூஜை அறையையும், வீட்டின் பிற பகுதிகளையும் எப்போதும் சுத்தமாகவும், நறுமணத்துடனும் வைத்திருக்க வேண்டும்.

* இந்த நவராத்திரி நாட்களில் வசதியற்றவர்களுக்கு ஆடை, உணவு அல்லது பண உதவி போன்ற தானங்களைச் செய்வது தேவியின் அருளை உடனே பெற்றுத்தரும்.

இதையும் படியுங்கள்:
நவராத்திரி 9 நாளுக்கும் 9 வகை சுண்டல்: நாவில் கரையும் கறிப் பொடி ரகசியம்!
வெற்றிலை பாக்கு தாம்பூலம்

- நவராத்திரி என்பது வெறும் உணவு விரதம் மட்டுமல்லாமல், நம் மனம், வாக்கு மற்றும் செயல்களைத் தூய்மையாக வைத்திருக்கும் ஒரு ஆன்மீகப் பயிற்சி ஆகும்.

logo
Kalki Online
kalkionline.com