சரத் பூர்ணிமா 2026: அமிர்த மழை பொழியும் இரவில் லட்சுமிதேவி - கிருஷ்ணரின் அருள்பெறுவது எப்படி?

16 கலைகளுடன் உதிக்கும் முழு நிலவில் பால் பாயாசம் படைத்து வழிபடுவதன் ரகசியங்கள்!
சரத் பூர்ணிமா - Sharad Purnima 2026
சரத் பூர்ணிமா - Sharad Purnima 2026
நடேஷ் கன்னா

என் பெயர் நடேஷ் கன்னா. எனது உண்மை பெயர் சிவராம சுப்ரமணியன். எனது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் களக்காடு. தற்போது கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கல்லிடைக்குறிச்சியில் வசித்து வருகிறேன். நான் கடந்த 57 ஆண்டுகளாக பத்திரிகைகளுக்கு எழுதி வருகிறேன். சிறுகதை கட்டுரைகள் கவிதைகள் துணுக்குகள் ஜோக்ஸ் என எழுதி உள்ளேன். நான் கல்கி, தீபம், மங்கையர் மலர், குமுதம், விகடன், சாவி இதயம் பேசுகிறது முத்தாரம், ராணி, தேவி, ஜூனியர் விகடன், நக்கீரன், துக்ளக், தினமலர், போன்ற அனைத்து பத்திரிகைகளுக்கும் எழுதியுள்ளேன். எனக்கு ஆரம்ப காலத்தில் எழுத தூண்டியது கல்கி வார இதழ். அதில் நான் எழுதிய முதல் துணுக்கு இடம் பெற்றது அன்றிலிருந்து இன்று வரை எழுதி வருகிறேன். நான் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி. என்னை எழுத தூண்டிய கல்கிக்கு வாழ்த்துக்கள்.

Updated on: 

2026 ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமையன்று சரத் பூர்ணிமா என்கிற ஒரு முக்கியப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. 25 ஆம் தேதி காலை 11:55க்கு தொடங்கி மறுநாள் 26 ஆம் தேதி காலை 9:41க்கு முடிவடைகிறது. இந்தப் பௌர்ணமி திதி, விதிகளின்படி அக்டோபர் 25ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

சரத் பூர்ணிமா திதி மத நம்பிக்கைகளின்படி பிணைக்கப் பட்டுள்ளது. இந்த இரவில் சந்திரன் தனது 16 கலைகளுடன் முழுமையாக பிரகாசிப்பதாக நம்பப்படுகிறது.

சனாதனத்தின்படி சந்திரன் மனதுக்கு உரிய தொடர்பு உடையவனாக கருதப்படுகிறது. எனவே இந்த பௌர்ணமியில் குளிர்ந்த நில ஒளியில் மனதுக்கு அமைதியும் புத்துணர்ச்சியும் கிடைக்கிறது

16 கலைகள் கிருஷ்ணனோடு தொடர்புடையதாகும். எனவே சரத் பூர்ணிமா கிருஷ்ணனின் பக்தியை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது

அவரது திவ்ய ரூபத்தை நினைவுபடுத்துகிறது. மத நம்பிக்கைகளின்படி சரத் பூர்ணிமா பகவான் கிருஷ்ணன் பிருந்தாவனத்தில் கோபிகைகளுடன் ராசலிலையில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.

கிருஷ்ணனின் புல்லாங்குழல் இசை கேட்டு கோபிகைகள் மயங்கி இந்த லீலையில் பங்கேற்றதாக வரலாறு.

இது ஒரு சாதாரண நடனமாக பார்க்கப்படாமல் ஜீவாத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் இடைப்பட்ட தெய்வீக சரணாகதியாக பார்க்கப்படுகிறது.

இந்த சரத் பூர்ணாவில் கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இதனை வட மாநிலங்களில் கோஜாக்காரி பூர்ணிமா என அழைக்கின்றனர். இந்த தினத்தில் லட்சுமியை வழிபடுவது சிறப்பானதாகும். வடமாநிலங்களில் இரவு முழுவதும் கண்விழித்து பூஜை செய்து கொண்டாடுகிறார்கள்.

சரத்பூர்ணிமா மிகவும் புகழ்பெற்ற மரபுகளில் ஒன்றாக விளங்கி வருகிறது.

இந்த தினத்தில் பால் பாயாசம் செய்து நில ஒளியில் படைக்கப்பட்டு அதை மறுநாள் அருந்துவது அமிர்தத்திற்கு சமமானதாகும். அதாவது சரத்பூர்ணிமா இரவு சந்திரனின் அமிர்தம் நமக்கு கிடைப்பதாக ஐதீகம்.

எனவே பால் பாயாசம் செய்து அதனை சந்திரனுக்கு படைத்து மறுநாள் அதை அருந்தினால் அமிர்தம் அருந்துவதற்கு சமமாகும்.

இன்றைய தினம் தான தர்மங்கள் செய்வதற்கு ஏற்ற நாளாகும். இதைப் பற்றி கூர்ம புராணத்தில் சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

சரத் பூர்ணிமா - Sharad Purnima 2026
சரத் பூர்ணிமா - Sharad Purnima 2026
இதையும் படியுங்கள்:
மதுரை நகரின் மர்மமான காவலன்: 2000 ஆண்டு பழமையான கூடலழகர் கோவிலின் இரகசியங்கள்!
சரத் பூர்ணிமா - Sharad Purnima 2026

சரத் பூர்ணிமா அன்று அன்னதானம் செய்வது ஏழைகளுக்கு தர்மம் செய்வதே சிறப்பானதாக கருதப்படுகிறது. இந்த சரத் பூர்ணிமா நாள் கிருஷ்ணருக்கும், லட்சுமியையும் வழிபடுவதற்கு ஏற்ற நாளாகும்.

இந்த சரத் பூர்ணிமா இரவில் சந்திரன் தனது 16 கலைகளுடன் பூரணமாக காட்சி தருகிறார். அவரிடம் இருந்து அமிர்தம் வணங்கும் பக்தர்களுக்கு கிடைப்பதாக ஐதீகம். அதனால்தான் அன்றைய தினம் பால்பாயாசம் செய்து வழிபட்டு மறுநாள் காலை அந்த பாயசத்தை அருந்தினால் அமிர்தம் சாப்பிட்டதற்கு ஒப்பாகும்.

சமஸ்கிருதத்தில் இதற்கு கோஜா கறி விரதம் என்று பெயர். ஒடிசாவில் இதனை ராஸ் பூர்ணிமா என அழைக்கிறார்கள். இந்த தினத்தில் வால்மீகி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. சரத்பூர்ணிமா அன்று லட்சுமி தேவியின் அருள் பூரணமாக கிடைத்ததாக ஐதீகம்.

அன்றைய தினம் லட்சுமி தேவி பூமிக்கு வந்து ஒவ்வொரு ஒரு வீட்டிலும் வாசம் செய்கிறாள். அதனால் அன்றைய தினம் வீட்டை சுத்தமாக வைத்து லட்சுமி தேவியை வழிபட வேண்டும்.

இதையும் படியுங்கள்:
கோவில் பிரசாதங்களின் தனித்துவ சுவைக்கும் மணத்திற்கும் இதுதான் காரணமா?
சரத் பூர்ணிமா - Sharad Purnima 2026

இதன் மூலம் லட்சுமி தேவியின் பூரண ஆசியை பெறலாம். இந்த நாளில் சந்திரனின் 16 கலைகளையும் நம்மை வந்து அடைவதாக ஐதீகம்.

வடமாநிலங்களில் இந்த பூஜை மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் அன்னதானம் தான தர்மங்கள் செய்வது நம் வாழ்வை வளமாக மாற்றும் என்பது ஐதீகம் மற்றும் நம்பிக்கை.

logo
Kalki Online
kalkionline.com