ஸ்ரீசக்கரம்: அண்ட சராசரத்தின் வரைபடம்! அதன் ரகசியங்களும் வழிபாட்டு முறைகளும்!


Sri Chakram
Sri Chakram
Published on

(1) பண்டைக்காலத் தாந்த்ரீக தத்துவ போதனைப்படி, பழைய சடங்கு முறைகளை கடைப்பிடித்து ஒழுகுவதில் நம்பிக்கை கொண்ட மக்கள் இந்த சக்கரத்தை பயன்படுத்தி வந்ததாக ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

(2) தாந்திரீக பிரபஞ்சோற்பத்தி மட்டுமின்றி, மனோ தத்துவம், உடலின் ஒப்பற்ற தத்துவம் இவைகளின் கருத்துக்களை உருவகப்படுத்தும் சித்திரமாகவும் ஸ்ரீசக்கரம் சொல்லப்படுகிறது.

(3) ஸ்ரீ சக்கரத்தின் சித்திரம் கி.மு. ஆயிரம் ஆண்டு காலத்துக்கு முந்தியதாகும்.

(4) ஸ்ரீசக்கரம் வெறும் கோடுகளால் ஆனவை என்று எண்ணி விடக் கூடாது. உயர் அட்சரக் கணிதம் மற்றும் சேஷாத்திரக் கணிதம் மட்டுமின்றி விஞ்ஞான அறிவு பூர்வமாக பெற்றவர்கள், மற்றும் இத்துறைகளில் ஆழ்ந்த அனுபவம் பெற்றவர்களால் தான் இந்த ஸ்ரீ சக்கரத்தை வரையமுடியும். அப்போதுதான் முழுமையான பலன் பெற முடியும்.

(5) ஒருசமயம் அகிலாண்டேசுவரியான காமாட்சிதேவியின் சக்தியானது மிகவும் உக்கிரமாக இருந்தபோதும் சாந்தடையச் செய்ய வேறு வழி தெரியாமல், அம்பிகையின் எதிரில் ஸ்ரீ சக்கரத்தை நிறுவி ஆகர்ஷித்து பின்சாந்தமுறச் செய்தனர்.

(6) ஒன்பது கட்டுகள்கொண்ட இந்த ஸ்ரீ சக்கரம்தான் அம்பாள் உறையும் இடமாகும். சாதாரண கோடுகளும் முக்கோணங்களும் தான் நம் கண்களுக்கு தெரியும். ஆனால் இதில்தான் அனைத்து சக்திகளும் அடங்கியிருக்கின்றன.

(7) ஸ்ரீ சக்கரத்தில் ஆவரணங்கள் என்று சொல்லக்கூடிய ஒன்பது சுற்றுக்கள் இருக்கின்றன. இவற்றின் நடுவில் திரிகோணத்தின் மத்தியில் தான் ஸ்ரீ சக்கர நாயகி என்று போற்றப்படும் பராசக்தியானவள் பிந்து என்கிற புள்ளியாகக் காட்சித்தருகிறாள்.

இதையும் படியுங்கள்:
விதி மாறும் திருத்தலம்! திருநள்ளாறு சென்று பரிகாரம் செய்வது எப்படி?

Sri Chakram

(8) சப்தத்திற்கும் ஒரு உருவம் உண்டு. எனவே, ஒலிக்கும் ஒலிகள் அனைத்தையும் முறையாக ஒழுங்குப் படுத்தி சீராக்கி - வடிவமாக ஓம் என்பதுதான் ஸ்ரீ சக்கரமானது.

(9) சக்தி வழிபாட்டின் மிக முக்கியமான பரிகார தேவதைகள் 64 (அறுபத்து நான்கு யோகினிகள்). இது அன்னையிடம் இருந்து தோன்றிய அபரிதமான சக்திகளாகும். சஷ்டி என்றால் 6 (ஆறு) சதுர் என்றால் 4 (நான்கு) இவ்வாறாக 64 கோடி யோகினியரால் பூஜிக்கப்படுபவள் என்பதே உண்மை.

(10) மனிதன் தன்னை கட்டுப்படுத்தி சித்தபுருஷனாக வளர்ந்து அன்னையின் அருளை உணரும் ஆன்மீக நிலையின் முடிவே, ஸ்ரீசக்கர தத்துவமாகும்.

(11) ஸ்ரீசக்கரத்தின் மறுபெயரே, ஸ்ரீசக்ரராஜம் என்ற சிறப்பு பெயராக விளங்குகிறது.

(12) சக்கரத்தின் கீழாக நோக்கிய முக்கோணங்கள் ஐந்தும் (5), மேல் நோக்கிய முக்கோணங்கள் நான்கும் (4), சிவாத்மகம் என்பர்.

(13) ஸ்ரீசக்கர பூஜை செய்யும் உபாசகன் (சாதகன்) லௌகீக சுகானுபவங்களை அடைவதோடு ஞானத்தை கடைபிடிப்பதின் மூலம் விருப்பு, வெறுப்பு, புலன்கள் இவற்றை வென்று மோட்ச சாம்ராஜ் யத்தை அடைகிறான்.

(14) சென்னையில் உள்ள திருவேற்காட்டு கருமாரியம்மன், மாங்காடு காமாட்சியம்மன், தென்குன்றத்தூர் காத்யாயனி அம்மன் ஆகிய மூவரையும் பவுர்ணமி தினத்தன்று ஒரே நாளில் தரிசனம் செய்வது திரிசக்கர தரிசனம் என்று அழைக்கப்படும். ஆடி மாத பவுர்ணமியன்று இந்த தரிசனம் மிகவும் விசேஷமானது.

(15) திருச்சிக்கு அருகே திருவானைக்காவில் அருள் புரியும் அகிலாண்டேஸ்வரியின் காதுகளில் தாடங்க வடிவில் ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. உக்கிரமாக இருந்த அம்பாளுக்கு ஸ்ரீசக்ரம் அணிவித்து சாந்தமாக்கியவர் ஆதி சங்கரர் என்று கூறப்படுகிறது.

(16) நவசக்கரம் என்ற அழைக்கப்படுவதும் ஸ்ரீசக்கரமே. இதில் 64 கோடி தேவதைகள் வசிக்கிறார்கள். இது தவிர 51 கணேசர்கள், 9 கிரகங்கள், அஸ்வினி முதலான 27 நட்சத்திரங்கள், 7 யோகினிகள், 12 ராசிகள், 51 பீட தேவதைகள் என்று 157 தேவதைகளின் ரூபமாக அம்பிகை ஸ்ரீசக்கரத்தில் வழிபடப்படுகிறாள்.

(17) ஸ்ரீசக்ரம் என்பது வரைபடம். மகாமேரு என்பது அதன் உருவம். ஸ்ரீசக்ரத்தை உயரமாகவும், பெரிய வடிவமாகவும் செய்தால் அது ஸ்ரீமகாமேரு என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. ஶ்ரீ சக்ரம் blue print என்றால் அதில் எழும்பும் கட்டிடம் மஹா மேரு ஆகும்.

(18) சவுந்தர்ய லஹரி, லலிதா சகஸ்ரநாமம், தேவி புஜங்கம், பவானி புஜங்கம், தேவிபாகவதம், திருமந்திரம் போன்ற நூல்கள் ஸ்ரீசக்கர வழிபாட்டை சிறப்பித்துக் கூறுகின்றன.

(19) மாங்காட்டில் ஆதிசங்கரர் தன்னுடைய கரத்தாலேயே அர்த்த மேருவை பிரதிஷ்டை செய்துள்ளார். அந்த மேருவானது அஷ்ட கந்தங்கள் என்ற பெயரில் அழைக்கப்படும் சந்தனம், அகில், பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ, கோரோசனம், சிவாஜித், ஜடாமஞ்சில், கச்சோலம் ஆகிய எட்டு விதமான நறுமணப்பொருட்களைக் கொண்டு உருவாக்கப் பட்டுள்ளது தனிச்சிறப்பு.

இதையும் படியுங்கள்:
நாளை (மார்ச் 6) திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா: கும்பத்திலிருந்து மீன ராசிக்கு பிரவேசிக்கும் சனீஸ்வரர் - முழு விபரங்கள்!

Sri Chakram

(20) சென்னையின் முக்கியப்பகுதியாக விளங்கும் பாரிமுனையில் தம்புச்செட்டித்தெருவில் உள்ளது புகழ் பெற்ற காளிகாம்பாள் ஆலயம். குபேரன் வழிபட்ட தலம். ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த அர்த்தமேரு சக்கரம் இங்குள்ளது.

ஸ்ரீ ஆதிபராசக்தியின் அதி அருள் சூட்சம வடிவே ஸ்ரீசக்கரமாகும். அம்பிகையின் ஸ்ரீசக்கரம் ஒன்பது சுற்றுக்களைக் கொண்டதாகும், நவாவர்ணம் என்பர். ஆவரணம் என்பது சுற்று, அடைப்பு எனப் பொருள் படுவதாகும். ஸ்ரீ ஆதிசங்கரர் சௌந்தர்ய லஹரியில், கூறுகிறபடி நாற்பத்தி நான்கு தத்துவங்களாக விளங்குகிற சியாமள சக்கரம் அமைப்பு.

1. பிரகாரங்கள்-3 (சதுரங்கள்)

2. மேகலைகள்-3 (வட்டங்கள்)

3. தளங்கள்-16 (தாமரை இதழ்கள்)

4. சிவ ரூப சக்கரங்கள்-45.

சக்தி ரூப சக்கரங்கள்-56.

மூலகாரண தாதுக்கள்-97.

பிந்துஸ்தான மந்திரகோணங்கள்8.

எட்டுத் தளங்கள் (தாமரை இதழ்கள்) என்று மஹாசக்திப் பிரவாகமாக விளங்கும் ஸ்ரீசக்கரம் சூக்ஷமமான வடிவிலுள்ளதாகும்.

இதைப் பெரியோர்கள் மூலம் அறியத்தக்கதாகும். ஒன்றின் கீழ் (ஒன்றுக்குள் ஒன்றாக) ஒன்றாய், நேர்கோணங்கள்

தலைகீழ் (ஒன்றுக்குள் ஒன்றாக) ஒன்றாய் முக்கோணங்கள் 5.முக்கோணங்கள் 14வெளிமுக்கோணங்கள் 10உள்முக்கோணங்கள் 10நடுமுக்கோணம் 1 (சிறியது) ஒரு புள்ளி 1 (சிறுமுக்கோண நடுவில்) சிவகோணம்.

லோக நாயகி யோக நாயகியாய், யோக நெறியின் விளக்கமாக உள்ளதே ஸ்ரீ சக்ரம் என்பர்;

மூன்று குணங்களாகிய சத்வ குண, தமோ குண, ரஜோ குண நிலைகளை மாற்றி சத்வகுண மேம்பாட்டை ஏகாக்ரஹ சிந்தையை வைராக்ய நிலையில் வைத்திருக்கும் போது கிடைக்கும் அட்டமா சித்திகளைப் பெறச்செய்யும் அணிமா, மகிமா லஹிமா, கரிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசித்வம் வசித்வம் ஆகியவற்றை அளிக்கும் 8 தேவதைகளும், காமம், குரோதம், மோஹம், லோபம், மதம், மாச்சர்யம், புண்ணியம், பாவம் என்ற 8 தேவதைகளும் அடுத்து ஆதாரங்களானமூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாஹதம், விசுத்தி; ஆக்ஞை, சகஸ்ராரம், பரவெளி என 8 ஆதார சக்தி தேவதைகளும் 3 மேகலையாக விழிப்பு, உறக்கம், கனவு, வீடு, மோட்ஷம் என்பது சுத்த சைதன்ய ரூபமான புருஷனுக்கு அந்தக்; கரணம் முதலிய உபாதிகள் விலக்கி அவனது உண்மையான ஸ்வரூபத்தில் நிலை பெறச்செய்த நிலையில் தன்னையும் தன்னுள் அடங்கிய மஹா சக்தியை வெளிபடுத்தி உலகை உய்யச் செய்யும் ஸ்ரீ ஆதிபராசக்தியின் அதி அருள் சூட்சம வடிவே இந்த ஸ்ரீ சக்ரமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com