பாத்திரங்களை சுத்தம் செய்யும்போது கவனிக்க வேண்டியவை!

பாத்திரங்களை சுத்தம் செய்யும்போது கவனிக்க வேண்டியவை!

சமையல் பாத்திரங்களை அடுப்பில் இருந்து எடுத்தவுடன் சூட்டோடு தண்ணீர் குழாயின் அடியில் வைக்காமல், சூடு ஆறியதும் வைத்தால் அவை நீண்ட நாள் உழைக்கும் ‌

சமையல் பாத்திரங்களை கழுவிய பின் கடைசியில் வெந்நீரில் அலம்பி, துடைத்து, வெயிலில் வைத்து எடுத்தால் சுத்தமாவதுடன், கிருமிகளும் அழிந்துவிடும்.

அவ்வப்போது தண்ணீரில் சிறிது வினிகர் கலந்து பாத்திரங்கள் கழுவினால் பளிச்சென்று இருக்கும். கைகளும் மென்மையாக இருக்கும்.

பித்தளை, தாமிர பாத்திரங்களின் மேல்படியும் பச்சை பாசியை போக்க வினிகரும், உப்புத்தூளும் கலந்து, தேய்த்து கழுவினால் போதும்.

தாமிர பாத்திரங்களை தக்காளியால் தேய்த்து கழுவினால் பளிச்சென்று இருக்கும்.

வெண்கல பாத்திரங்களை புளி கொண்டு தேய்த்து கழுவினால் சுத்தமாகி பளிச்சிடும்.

எவர்சில்வர் பாத்திரங்களை 'ஸ்டீல் உல்'லால் தேய்த்தால் கீறல் விழும். ஆதலால் அதை தவிர்ப்பது நல்லது.

எவர்சில்வர் பாத்திரங்களை அரிசி களைந்த நீரில் ஊற போட்டு பிறகு தேய்த்து கழுவினால் சுத்தமாவதுடன் பளிச்சென்று இருக்கும்.

இரும்பு வாணலி போன்ற எண்ணெய் பிசுக்கு ஏற்படும் பாத்திரங்களை மண்ணில் புரட்டி எடுத்து, பிறகு கழுவினால் பிசுக்கும் அகலும், தேய்ப்பதும் எளிது. சிறிது மோர் தெளித்து தேய்த்தாலும் எண்ணெய் பிசுக்கு நீங்கும்.

ஸ்க்ரப்பருக்கு பதிலாக அந்தக் காலம் போல தேங்காய் நார் பயன்படுத்தினால் பாத்திரங்கள் பளிச்சிடும். பயன்படுத்தியதும் தூக்கி எறிந்து விடலாம். கிருமிகள் சேர வாய்ப்பில்லை.

காபி டிகாக்ஷன் இறக்கியதும் தங்கும் காபி பொடி சக்கையை கொண்டு எவர்சிலர் பாத்திரங்களை தேய்த்தால் பளிச்சென்றும், சுத்தமாகவும் இருக்கும்.

பீங்கான் தட்டு, கிண்ணம் போன்ற பொருட்களில் படியும் கரையை போக்க வெள்ளை வினிகர் கொண்டு தேய்த்தால் போதும். அவற்றில் உள்ள செராமிக்கும் போகாது.

பித்தளை பாத்திரங்களை கடலை மாவு சீயக்காய் தூள் கலந்து தேய்த்தால் பளபளக்கும். சுத்தமாகவும் ஆகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com