

பூட்டான் மக்களின் வாழ்க்கை இயற்கையோடு இணைந்த எளிமையான சமூக மைய வாழ்க்கை. 50% வனப்பகுதி பாதுகாக்கப்பட்டு, காடுகளை அழித்து கட்டிடங்கள் கட்ட தடை. டிவி, சமூக வலைத்தளங்களை நான்சென்ஸ் எனக் கருதி விலகி, பாரம்பரிய பண்டிகைகள், மத விழாக்கள், சமூகப் பணிகளில் ஈடுபடுகிறார்கள். இந்திய ராணுவம் பாதுகாக்கும் இந்த நாடு, ஆசியாவின் சுவிட்சர்லாந்து, சொர்க்க பூமி என போற்றப்படுகிறது.
பூட்டான் நாடு என்பது இமயமலையில் உள்ள ஒரு சிறிய நாடாகும். இது மக்களின் மகிழ்ச்சியை முக்கியமாக கருதுகிறது. உலகின் ஒரே கார்பன் எதிர்மறை நாடாக திகழ்கிறது. இங்கு நாட்டின் வளர்ச்சி பணமாக அல்லாமல் மக்களின் மகிழ்ச்சிக்குரிய குறியீடு மூலம் அளவிடப்படுகிறது நாட்டின் தலைநகரான சிம்புவில் ஒரு போக்குவரத்து விளக்கு கூட கிடையாது.
காவலர்களை கைகள் மூலம் சைகை செய்து போக்குவரத்தை கட்டுப்படுத்துகிறார்கள். இந்த நாடுதான் வெளியிடும் கார்பன் அளவை விட அதிகமான காற்றை சுத்திகரிக்கும் காடுகளை பெற்றுள்ளது. இதனால் இது கார்பன் எதிர்மறை நாடாக விளங்கி வருகிறது. உலகில் புகையிலை உற்பத்தியை மற்றும் விற்பனையை தயாரிக்க சட்ட உருவமாக தடை செய்யப்பட்ட முதல் நாடு பூடான் ஆகும்.
இங்குள்ள காங்கர் புன்சு எம்
மலை உச்சி இதுவரை மனிதர்கள் ஏறப்படாத மிக உயர்ந்த மலையாகும். மலைகளை இங்கு உள்ள மக்கள் புனிதமாக கருதுகிறார்கள். எனவே மலை ஏற்றத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இயற்கை காட்சிகளும் வளமான காட்சிகளும் கண்களை கவரும் விதத்தில் உள்ளது. இது மகிழ்ச்சியின் நிலம் என குறிப்பிடப்படுகிறது.
கிராஸ் நேஷனல் ஹேப்பினஸ்
கமிஷன் கருத்துப்படி பூட்டான் பொருளாதாரத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல் மக்களின் நல்வாழ்வு சுகாதாரம் கல்வி நல்ல நிர்வாகம் சுற்றுச்சூழல் இவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது என கூறப்படுகிறது. பூட்டான் கலாச்சார பாரம்பரியத்தில் முக்கியத்துவம் அளிக்கிறது. இரக்கம் அனைத்து உயிர்களிடத்தும் மரியாதை என மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
பூட்டான் மக்கள் இயற்கையோடு இணைந்து வாழ்கிறார்கள். பசுமையான நிலப்பரப்புகள் தூய்மையான காற்று ஏராளமான பல் உயிர் பெருக்கம் ஆகியவை மகிழ்ச்சி அளிக்கும் என நம்புகிறார்கள்.
பூட்டான் மக்கள் பாரம்பரிய பண்டிகைகள் மத விழாக்கள் மற்றும் சமூகப் பணிகளில் அதிகமாக ஈடுபாடு காட்டுகிறார்கள்.
சமூகத்தை மையமாகக் கொண்ட வாழ்க்கை முறையை உருவாக்கி வாழ்கின்றனர். பூட்டான் பௌத்தம் நிரம்பி உள்ளது. ஆன்மீகம் அந்நாட்டு மக்களின் அன்றாட வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது. மன அமைதி மற்றும் இரக்கத்தை பின்பற்றுகின்றனர். பூட்டான் அரசியல்வாதிகள் நான் அதைச் செய்வேன் இதைச் செய்வேன் என்று கூறுவதில்லை. மாறாக உங்களின் மகிழ்ச்சி பாதுகாக்கப்படும் என்று சொல்லி வாக்குறுதி அளிக்கிறார்கள்.
அரசாங்கம் மக்களின் சந்தோஷத்தை அறிய ஜிடிபி Gross national happiness என்ற அமைப்பை உருவாக்கி உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா என்ற கேள்வி இடம்பெறுகிறது. சொன்னால் நம்ப மாட்டீர்கள். பூட்டான் ஆசியாவின் மகிழ்ச்சியான நாடாகவும் உலகின் எட்டாவது மகிழ்ச்சியான நாடாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே, பூட்டான் நாட்டை ஆசியாவின் சுவிட்சர்லாந்து என அழைக்கின்றனர். எளிமையான அரசு எளிமையான மக்கள் மன்னர் ஆட்சி ஆக இருந்தாலும் இதுதான் நடைமுறை. மீத்தேன் கிடையாது அணு ஆயுதமும் கிடையாது. எந்த நாட்டுடனும் போர் புரிந்தது இல்லை. விவசாயம்தான் முக்கிய தொழில்.
மக்களிடம் பொய் புரட்டு இல்லை. இயற்கையோடு இணைந்து வாழ்கிறார்கள். டி வி பார்க்க மாட்டார்கள் சமூக வலைத்தளம் பக்கம் போவது இல்லை. இவர்கள் பார்வையின் படி வலைத்தளம் என்பது நான்சென்ஸ். நாட்டில் 50 சதவீதம் வனப்பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளது. இங்கு காடுகளை அழித்துவிட்டு இஷ்டம்போல் கட்டிடங்கள் கட்டிட முடியாது. எங்கு பார்த்தாலும் வனச் சரணாலயங்கள் உள்ளன.
டெல்லியில் இருந்து பூட்டானில் உள்ள பாரோ விமான நிலையம் செல்லலாம். பூட்டானில் சிகரெட் மது தடை செய்யப்பட்டுள்ளது. பூட்டான் தலைநகர் திம்பு. பூட்டான மிக தூய்மையான நாடாக உள்ளது. பூட்டான் மக்கள் தொகை சுமார் எட்டு லட்சம். குடும்பத்தில் கல்யாணம், அப்பா, அம்மா என பெரிய மதிப்பு கிடையாது. இங்குள்ள பெண்கள் அவர்கள் விருப்பப்படி யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம்.
இந்த நாட்டில் எந்த குழந்தையும் அனாதை கிடையாது. யாராவது ஒருவர் தத்து எடுத்து வளர்த்து வருவார்கள். கல்வி, மருத்துவம் இலவசம். வெளிநாட்டில் போய் படிப்பதாக இருந்தால் கூட அரசாங்கம் உதவி செய்யும். இதில் வேடிக்கை என்னவென்றால் பூட்டான் நாட்டை இந்திய ராணுவம்தான் பாதுகாக்கிறது. பூட்டான் நாட்டிலிருந்து அதிக அளவில் இந்தியாவிற்கு மின்சாரம் கிடைக்கிறது. ஆசியாவின் சொர்க்க பூமி என்றால் அது பூட்டான் நாடுதான்.
இந்தத் தொகுப்பைப் படிப்பதன் மூலம், இயற்கை வளங்களை அழிக்காமல் எவ்வாறு மகிழ்ச்சியான மற்றும் அமைதியான வாழ்க்கையை வாழ முடியும் என்பதற்கான தெளிவையும், மன அழுத்தமில்லாத எளிய வாழ்க்கை முறை குறித்த புதிய பார்வையையும் பெறுவீர்கள்.