ஐரோப்பாவின் நம்பர் 1 ரயில் நிலையம் எது தெரியுமா? சூரிச் முதலிடம் பிடித்த ரகசியம்!

60 பரபரப்பான ரயில் நிலையங்களை முந்தி சுவிட்சர்லாந்தின் சூரிச் பிரதான நிலையம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
சூரிச் ரயில் நிலையம்
சூரிச் ரயில் நிலையம்
S CHANDRA MOULI

எஸ். சந்திர மௌலி (S Chandra Mouli) எஸ். சந்திர மௌலி கடந்த நாற்பதாண்டுகளாக கல்கி குழும பத்திரிகைகளில் எழுதிவரும் மூத்த பத்திரிகையாளர். கல்கி வெளியிட்ட பல்வேறு சிறப்பிதழ்கள், மற்றும் தீபாவளி மலர்கள், தொழில் மலர்கள், விடுமுறை மலர்களுக்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்தவர். 2008ல் கல்கி வெளியிட்ட “குஜராத் டுடே” சிறப்பிதகளுக்காக ஒரு வார காலம் குஜராத் முழுவதும் பயணித்து, குஜராத்தின் வளர்ச்சியை நேரில் கண்டு, எழுதியவர். சமூக அக்கறையோடு கல்கி மேற்கொண்ட “மாதம் ஒரு மாவட்டம்” திட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணித்து பங்களித்தவர். வாஜ்பாய், வி.பி.சிங் தொடங்கி மன்மோகன் சிங், நரேந்திர மோடி வரை ஏழு இந்தியப் பிரதமர்களை சந்தித்து பேட்டி கண்டவர். எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, என்.டி.ஆர், ஜோதி பாசு, வெங்கையா நாயுடு, நிர்மலா சீதாராமன், சிவாஜி கணேசன், ரஜினி காந்த், கமலாசன், ஜெமினிகணேசன், சூர்யா, மணிரத்னம், கிரிக்கெட்டர் ஸ்ரீக்காந்த், விக்கு வினாயகராம். உமையாள்புரம் சிவராமன், வயலின் கன்யாகுமரி, ஜெயகாந்தன், நாஞ்சில் நாடன், கவிஞர் வைரமுத்து, கவிஞர் மு.மேத்தா, நா. முத்துகுமார், சோ ராமசாமி என பல்துறைப் பிரபலங்களையும் பேட்டி கண்டு எழுதியவர். இயக்குனர் ஸ்ரீதர், நடிகர் நாகேஷ், ஓவியர் கோபுலு, இயக்குனர் எஸ்பி. முத்துராமன், திருமதி ஒய்,ஜி.பி. ஃபிலிம் நியூஸ் ஆனந்தன், நடிகர் ஏ.ஆர்.எஸ். மெஜிக் நிபுணர் லால் உள்ளிட்ட பலரது வாழ்க்கை அனுபவங்களை இவர் தொடராக எழுதி, அவை பின்னர் புத்தகங்களாக வெளியாகி உள்ளன. இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானபோது, இளைய தலைமுறையினருக்கு அமரர் கல்கி பன்முகச் சாதனை வாழ்க்கையை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் “கல்கி-பொன்னியின் செல்வர்” என்ற தலைப்பில் அவரது வாழ்க்கை வரலாற்றை சுவைபட எழுதியவர். பெண்சிசுக் கொலை தொடர்பான கட்டுரைக்கு “லாட்லி விருதும்”, ரோட்டரி சங்கத்தின் “சாதனை விருதும்” பெற்றவர். தற்போது madraspaper இணைய வார இதழில் “ஓரு குடும்பக் கதை: என்ற தலைப்பில் இந்திய அரசியலில் நேரு குடும்பத்தின் பங்களிப்பு குறித்த நெடுந்தொடர் ஒன்றை எழுதி வருகிறார். சோ குறித்த ஒரு புத்தகத்தை எழுதிக் கொண்டிருக்கிறார்.

Updated on

ரோப்பாவில் இயற்கை அழகு கொஞ்ச ரயில் பயணம் செய்வது ஒரு இனிமையான அனுபவம். ஏராளமான நாடுகள். ஒவ்வொரு நாட்டிலும் பலப்பல ரயில் நிலையங்கள். செல்லும் நீண்டதூர ரயில்கள் பல இயக்கப்படுகின்றன. பல முக்கிய ரயில் நிலையங்கள் எப்போதுமே பிஸிதான்.

அண்மையில் ஐரோப்பாவில் உள்ள கன்ஸ்யூமர் சாய்ஸ் சென்டர் என்ற மையம் 2026 ஆண்டுக்கான ஐரோப்பிய ரயில் நிலையங்களின் தரக் குறியீட்டுப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளையும் சேர்ந்த 60 பரபரப்பான ரயில் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, தர வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

இதில் சுவிட்சர்லாந்து நாட்டின் சூரிச் பிரதான ரயில் நிலையம் முதலிடம் பிடித்துள்ளது. இந்த ரயில் நிலையத்துக்கு சூரிச் – ஹெச் பி என்று பெயர். இரண்டாவது இடம் பாரிஸ் வடக்கு ரயில் நிலையத்துக்குக் கிடைத்துள்ளது. ஆம்ஸ்டர்டாம் மத்திய ரயில் நிலையம் மூன்றாவது இடம்.

இந்த தரவரிசை வெறும் “அழகான நிலையம்” என்ற அடிப்படையில் வழங்கப்படவில்லை. ரயில்களின் நேரம் தவறாமல் இயங்குவது, பயணிகள் காத்திருக்கும் சராசரி நேரம், ரயில் தாமதங்களின் அளவு, உள்நாட்டு மற்றும் சர்வதேச ரயில் இணைப்புகள், உள்ளூர் போக்குவரத்து இணைப்புகள், டிக்கெட் வசதிகள், பயணிகளின் வசதிக்காக ரயில் நிலைய வளாகத்துக்குள்ளே இருக்கும் கடைகள் மற்றும் உணவகங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள், இலவச இணைய சேவை, பயணிகளுக்கான தகவல் வசதிகள் என்று பல்வேறு பயணிகள் வசதிகள் மற்றும் ரயில் இயக்கத் தரவுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு, தரப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.

சூரிச் ரயில் நிலையம்
சூரிச் ரயில் நிலையம்

சூரிச் பிரதான ரயில் நிலையம் எப்படி?

இந்த ரயில் நிலையத்தின் முக்கியமான பலமே நேரம் தவறாத ரயில்கள்தான். இந்த நிலையத்தில் ரயில்கள் தாமதமாகும் விகிதம் சுமார் 4% மட்டுமே. சராசரி காத்திருப்பு நேரம் 1.2 நிமிடங்கள் தான். அது மட்டுமில்லை. ஒட்டு மொத்த சுவிட்சர்லாந்திலும் ரயில்களின் தாமத விகிதம் 6% தான். இதனால் தான் சுவிட்சர்லாந்தின் ரயில் நெட் ஒர்க் அமைப்பு உலகம் முழுவதும் நேரம் தவறாமைக்காகப் பேசப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
கேப் டவுன் பயணம்: சொர்க்கத்தை பூமியில் காணத் தயாரா?
சூரிச் ரயில் நிலையம்

மேலும், இது சுவிட்சர்லாந்தின் மிக முக்கியமான ரயில்வே சந்திப்பு ஆகும். இங்கிருந்து சுவிஸ் நாட்டின் பல பகுதிகளுக்கும் மட்டுமின்றி, ஜெர்மனி, ஆஸ்திரியா, பிரான்ஸ், இத்தாலி என பல அண்டை நாடுகளுக்கும் சர்வதேச ரயில் இணைப்புகள் உள்ளன.

சூரிச் ரயில் நிலையத்தின் இன்னொரு சிறப்பு அம்சம் அதன் அடித்தளப் பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய ஷாப்பிங் மற்றும் சேவைப்பகுதி. இங்கே ஏராளமான கடைகள், உணவகங்கள், கஃபேக்கள், பேக்கரி, சூப்பர் மார்க்கெட், ஐஸ்கிரீம் பார்லர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் பயணிகளுக்குக் கிடைக்கின்றன.

ஆண்டுக்கு பத்து கோடிக்கும் அதிகமான பயணிகள் இந்த நிலையத்தைப் பயன்படுத்துவதாக சமீபத்திய அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. இத்தனை பெரிய பயணிகள் எண்ணிக்கையைக் கையாளும்போதும், காத்திருப்பு நேரத்தையும் தாமதத்தையும் குறைவாக வைத்திருப்பது இந்த நிலையத்தின் முக்கிய சாதனையாகும்.

இதையும் படியுங்கள்:
உணவு முதல் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் வரை: உலகின் 4 அதிசய நாடுகளின் சுவாரஸ்ய ரகசியங்கள்!
சூரிச் ரயில் நிலையம்

மேலும் இந்த ரயில் நிலையத்துக்குத் தொன்மையான வரலாற்று, கலாசார பாரம்பரியமும் உண்டு. இதுவே சுவிட்சர்லாந்தின் முதல் முழுமையான ரயில் பாதை முனையமாக இருந்தது. பழைய கட்டிடத்தின் வரலாற்று தோற்றத்துடன், அதன் கீழ் நவீன ரயில் வசதிகள், வணிக வளாகம், மற்றும் பல அடுக்குகளில் அமைந்துள்ள நடைமேடைகள் ஆகியவை இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

2023, 2025 அண்டுகளின் பட்டியலிலும் சூரிச் ரயில் நிலையம்தான் முதலிடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சுவிட்சர்லாந்தின் சூரிச் பிரதான ரயில் நிலையம் எவ்வாறு சர்வதேச இணைப்புகள், 4% மட்டுமே கொண்ட குறைந்த தாமத விகிதம், மற்றும் மிகச்சிறந்த வணிக வளாக வசதிகள் மூலம் ஐரோப்பாவின் சிறந்த ரயில் நிலையமாக உருவெடுத்துள்ளது என்பதை வாசகர்கள் அறிந்துகொள்வர்.

logo
Kalki Online
kalkionline.com