

இன்று 25th September வெளியாகும் The Vvaan, The force of the forest ல் காட்டபட்டுள்ள 400 வருட பழமையான வன் தேவி கோவிலின் மர்மம் என்ன?? சூரிய அஸ்தமனத்திற்கு பின் கோவிலுக்குளா ஏன் செல்லக் கூடாது??
சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் தமன்னா பாட்டியா இருவரும் சேர்ந்து நடித்துள்ள The Vvaan, The force of the forest என்கிற படம் இன்று 25th September, release ஆகிறது. இந்த படத்தில் பீகாரில் உள்ள பிஹ்தா கிராமத்தில் அமைந்துள்ள மா வன் தேவி கோவிலை பற்றி அறியப்படாத பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள்.
அந்த கிராமத்திலுள்ள ஒரு புனிதமான காட்டிலுள்ள ஆன்மீகத்தை எடுத்து காட்டும் வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளது. சூரியன் மறைந்த பிறகு அப்பகுதிக்குள் நுழைவதற்கு நீண்ட காலமாக விதிக்கப்பட்டிருந்த தடை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
பிரபல எழுத்தாளர் அருணாப் குமார் மற்றும் இயக்குநர் தீபக் குமார் மிஸ்ரா இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளார்கள். இவர்கள் இருவரும் முதலில் அந்த கோவிலுக்குச் சென்றிருக்கிறார்கள். கோவில் பயணத்தைத் தொடர்ந்து, படக்குழுவினர் அர்ச்சகர்கள், கிராமவாசிகள் மற்றும் உள்ளூர் மக்களுடன் வன் தேவியை பற்றிய புராணக்கதைகள் குறித்துப் பேசிய பிறகே இந்த படத்தை எடுக்க தீர்மானித்தார்கள்.
அப்படி என்னதான் இந்த கோவிலில் இருக்கிறது. ஏன் சூரிய அஸ்தனமான பிறகு இந்த கோவிலுக்கு செல்லக்கூடாது? பார்க்கலாமா..?
மா வன் தேவி கோவில், பாட்னாவிலிருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் உள்ள பிஹ்டா (Bihta) என்கிற கிராமத்தில் அமைந்துள்ளது. வன் என்றால் காடு என்று பொருளாகும். இக்கோவில் ஒரு புனிதமான காட்டில் இருக்கிறது. பெரும்பாலான புகழ்பெற்ற கோவில்களில் உள்ள சிலைகளை போலில்லாமல் இங்கிருக்கும் தேவி ஒரு புனித பிண்டமாகவே வணங்கப்படுகிறார்.
பல ஆண்டுகளுக்கு முன்னால் இந்த கோவில் அடர்ந்த காடுகளால் சூழப்பட்டு இருந்ததாகவும், தற்போது அந்த நிலங்களில் விவசாயம் செய்யப் படுவதாகவும் கூறப்படுகின்றன.
இந்த வன் தேவி கோவில் சுமார் 350 முதல் 400 ஆண்டு களுக்கு மேல் பழமையானதாக இருக்கலாம் என கருதப்படுகிறது. அதாவது இதன் தோற்றம் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கூறப்படுகிறது.
காலப்போக்கில் இந்த கோவிலின் தோற்றம் மாறியிருந்தாலும், அங்கிருக்கும் தேவியை பற்றிய கதைகள் மட்டும் பல நூற்றாண்டுகளாகவே இன்றளவும் தொடர்ந்து கூறப்பட்டு வந்திருக்கின்றன.
வன் தேவி கோவிலின் பின்னணிக் கதை என்ன?
இந்த வன் தேவி கதையானது ராகோபூரைச் சேர்ந்த வித்யானந்த் மிஸ்ரா என்ற பக்தருடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது.
புராணங்களின்படி, மிஸ்ரா விந்தியாச்சலப் பிரதேசத்தில் உள்ள விந்தியாவாசினி தேவியின் பக்தராக இருந்தார். அவருக்கு வயதாக வயதாக விந்தியாச்சலப் பிரதேசத்திற்குப் பயணம் செய்வதென்பது மிகவும் சவாலாகவே இருந்தது. அப்போது ஒருநாள் தேவி அவரின் கனவில் வந்து விந்தியாச்சல பிரதேசத்தில் உள்ள தன்னுடைய புனிதமான பிண்டத்திலிருந்து சிறிதளவை அவருடைய கிராமத்திற்குக் கொண்டு செல்லுமாறு அவரிடம் கூறினார்.
தேவியின் வாக்குப்படியே அவரும் தேவியின் பிண்டத்தை கொண்டு வந்து தன் வீட்டிற்கு அருகிலுள்ள காட்டில் வைத்ததாக கூறப்படுகின்றன.
அந்தக் கோவில் ஒரு எளிய குடிசையில் அமைந்திருந்தது மேலும் அது வனப் பகுதியின் நடுவில் அமைந்திருந்ததால், அந்த தேவிக்கு வன் தேவி அதாவது வனத்தின் தேவி என்ற பெயர் சூட்டப்பட்டது.
1958 ல் யாகம் செய்வதற்காக அங்கு வந்த பகவான் தாஸ் தியாகி அவர்கள் அந்த கோவில் வடிவத்தை மாற்றி அமைப்பதில் முக்கியப் பங்கை ஆற்றினார்.
எத்தனையோ மாற்றங்கள் செய்யப்பட்ட போதிலும், அந்தத் தேவி ஒரு பாரம்பரிய சிலையாகக் கருதப்படாமல், இன்றளவும் ஒரு பிண்டமாகவே போற்றப்படுகிறாள்.
இருட்டிய பிறகு மக்கள் கோவிலுக்குள் நுழைய ஏன் தடை விதிக்கப்பட்டுள்ளது?
சூரியன் மறைந்த பிறகு கோவிலுக்கும் அந்த காட்டிற்குள் செல்வதற்கும் இன்றளவும் மக்கள் அனுமதிக்கப் படுவதில்லை. இது வன் தேவியுடன் தொடர்புடைய மிகவும் சுவாரஸ்யமான பழக்க வழக்கங்களில் ஒன்றாக திகழ்கிறது.
மாலையில் கோவிலை மூடிவிட்டு அர்ச்சகர் அந்த இடத்தை விட்டுச் சென்று விடுவதாகவும் அதற்கு பிறகு உள்ளே யாரும் தங்குவதில்லை என்றும் கூறப்படுகிறது.
அங்கிருக்கும் வன் தேவியே இரவு முழுவதும் அதன் வளாகத்தைச் சுற்றி உலவுகிறார் என்றும் ஆகவேதான் யாரையும் அனுமதிப்பதில்லை என்று அந்த கிராமத்து மக்கள் கூறுகிறார்கள். மேலும் இந்த நிகழ்ச்சியே ஒரு மர்மமான புகழைப் பெற்றுத்தருவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.
இருப்பினும், இருட்டிய பிறகு அங்கு ஏதேனும் அமானுஷ்ய செயல்பாடு நடைபெறுவதற்கான ஆதாரமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக மொத்தத்தில், இந்த படமானது பீகாரிலுள்ள இந்த தேவியின் கோவிலை பற்றி அறியப்படாத அதேசமயம் சில ஆச்சரியமான உண்மைகளையும் தெரிந்து கொள்ளும் ஒரு வாய்ப்பை நமக்கு வழங்குகிறது. படத்தை பார்த்தால்தான் முழுக்கதையும் தெரியும்.