பக்தியின் சங்கமம்: செப்டம்பரில் படையெடுக்கும் ஆலயத் திருவிழாக்கள் மற்றும் ஆன்மீக பண்டிகைகள்...

செப்டம்பர் மாதம் 1-ம் தேதி முதல் 30-ம்தேதி வரை வரும் பண்டிகைகள் மற்றும் விரதங்கள் உள்ளிட்ட முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் பார்க்கலாம்.
September Events
September EventsAI Image
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on

செப்டம்பர் ஆன்மீக விசேஷங்கள் :

செப்டம்பர் 1 : தேய்பிறை சதுர்த்தி, சித்தயோகம், திருச்செந்தூர் முருகப்பெருமான் கேடயச்சப்பரத்ததிலும் இரவு பல்லக்கிலும் திருவீதியுலா, சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

செப்டம்பர் 2 : தேய்பிறை பஞ்சமி, தேய்பிறை சஷ்டி விரதம், திருச்செந்தூர் முருகப்பெருமான் காலை பூங்கோவில் சப்பரத்திலும், இரவு தங்க முத்து கிடா வாகனத்திலும் பவனி.

செப்டம்பர் 3 : தேய்பிறை சப்தமி, கார்த்திகை விரதம், திருச்செந்தூர் முருகப்பெருமான் தங்க முத்துக்கிடா வாகனத்திலும் இரவு வெள்ளி யானை வாகனத்திலும் அம்பாள் வெள்ளி சப்பரத்திலும் புறப்பாடு.

செப்டம்பர் 4 : தேய்பிறை அஷ்டமி, சித்தயோகம், கோகுலாஷ்டமி, ஸ்ரீபாஞ்சராத்திர ஜெயந்தி, அஷ்டமி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு.

செப்டம்பர் 5 : தேய்பிறை நவமி, சித்தயோகம், மதுரை நவநீத கிருஷ்ய சுவாமி சேஷ வாகனத்தில் உறியடி உற்சவம். உப்பூர் விநாயகர் பெருமான் உற்சவம் ஆரம்பம்.

செப்டம்பர் 6 : தேய்பிறை தசமி. சித்தயோகம். பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் காலை வெள்ளி கேடய சப்பரம் இரவு சிம்ம வாகன பவனி.

செப்டம்பர் 7 : தேய்பிறை ஏகாதசி, ஏகாதசி விரதம், சுபமுகூர்த்த நாள், சித்தயோகம்.

செப்டம்பர் 8 : தேய்பிறை துவாதசி, பிரதோஷம், தேவமாதா பிறந்தநாள், சித்தயோகம், மதுரை ஸ்ரீநவநித கிருண்ஷசுவாமி இரவு கருட வாகனத்தில் ராஜாங்க சேவை.

செப்டம்பர் 9 : தேய்பிறை திரயோதசி, மாத சிவராத்திரி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்கு அலங்கார திருமஞ்சன சேவை. திருச்செந்தூர் முருகப் பெருமான் ரதோத்ஸவம்.

செப்டம்பர் 10 : தேய்பிறை சதுர்த்தசி, சர்வ அமாவாசை, சித்தயோகம், மதுரை ஸ்ரீநவநீத கிருஷ்ணசுவாமி ஆண்டாள் அலங்காரம், இரவு புஷ்ப தாண்டிலில் தவழும் கண்ணன் திருக்கோலம்.

செப்டம்பர் 11 : அமாவாசை, சித்தயோகம், பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பகவிநாயகர் மயில் வாகன திருவீதிஉலா, உப்பூர் விநாயகர் பெருமான் காமதேனு வாகன பவனி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு.

செப்டம்பர் 12 : வளர்பிறை பிரதமை, சந்திர தரிசனம்.

செப்டம்பர் 13 : வளர்பிறை துவிதியை, சுபமுகூர்த்த நாள், சித்தயோகம், கல்கி ஜெயந்தி, பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் மாலை திருத்தேரில் வீதியுலா சந்தனக்காப்பு.

செப்டம்பர் 14 : வளர்பிறை திரிதியை, அமிர்தயோகம், பிள்ளையார்பட்டி விநாயகர் தீர்த்தவாரி, ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி, சதுர்த்தி விரதம், கரிநாள்.

செப்டம்பர் 15 : வளர்பிறை சதுர்த்தி, மஹாலட்சுமி விரதம், மதுரை நவநீத கிருஷ்ணன் சுவாமி ருக்மணி சத்தியபாமா சமேத கிருஷ்ண அலங்காரம்.

செப்டம்பர் 16 : வளர்பிறை பஞ்சமி, சித்தயோகம், தல்லாகுளம் ஸ்ரீபிரசன்னா வேங்கடேசபெருமாள் கிருஷ்ண அவதாரம். சிம்ம வாகனத்தில் புறப்பாடு.

இதையும் படியுங்கள்:
பக்திப் பெருக்குடன் ஜூலை: முக்கிய விசேஷங்கள் மற்றும் முகூர்த்த நாட்கள்...
September Events

செப்டம்பர் 17 : வளர்பிறை சஷ்டி, சுபமுகூர்த்த நாள், சஷ்டி விரதம், சித்தயோகம், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம், திருப்பதி ஏழுமலையப்பன் காலை சிம்ம வாகன பவனி, இரவு முத்துபந்தல் அருளிய லீலை.

செப்டம்பர் 18 : வளர்பிறை சப்தமி, அமிர்த யோகம், தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேச பெருமாள் கஜேந்திர மோட்சம். ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியபெருமாள் சேஷ வாகனத்தில் திருவீதி உலா.

செப்டம்பர் 19 : வளர்பிறை அஷ்டமி, தூர்வாஷ்டமி, அஷ்டமி, சித்தயோகம், ஜேஷ்டாஷ்டமி, லட்சுமி ஆவாஹாணம், வில்லிபுத்தூர் பெரியபெருமாள் வெள்ளி கருட வாகனத்தில் பவனி. திருப்பதி ஏழுமலையப்பன் மோகினி அலங்காரம்.

செப்டம்பர் 20 : வளர்பிறை நவமி, நந்த நவமி, கேதாரவிருதாரம்பம், திருப்பதி ஏழுமலையப்பன் காலை ஹனுமன் வாகனத்தில் வசந்த உற்சவ காட்சி.

செப்டம்பர் 21 : வளர்பிறை தசமி, கஜலட்சுமி விரதம், கரூர் தான்தோன்றி கல்யாண வெங்கடேச பெருமாள் திருக்கல்யாணம், இரவு சுவாமி புஷ்பக விமான பவனி, தல்லாக்குளம் வெங்கடேச பெருமாள் சயன திருக்கோலாமாய் காட்சி.

செப்டம்பர் 22 : வளர்பிறை ஏகாதசி, சர்வ ஏகாதசி, சித்தயோகம், திருவோண விரதம்.

செப்டம்பர் ஆன்மீக விசேஷங்கள்
செப்டம்பர் ஆன்மீக விசேஷங்கள்AI Image

செப்டம்பர் 23 : வளர்பிறை துவாதசி, வாமன ஜெயந்தி, தல்லாகுளம், வெங்கடேச பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூர், ஒப்பிலியப்பன், நாட்டரசன் கோட்டை, குணசீலம் போன்ற தலங்களில் எம்பெருமான் ரதோத்ஸசம்.

செப்டம்பர் 24 : வளர்பிறை திரயோதசி, பிரதோஷம், சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம், திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

செப்டம்பர் 25 : வளர்பிறை சதுர்த்தசி, அனந்த விரதம், கதளீ கௌரீ விரதம், சித்தயோகம், நடராஜர் அபிஷேகம், மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேச பெருமாள் தெப்போத்ஸசம்.

செப்டம்பர் 26 : பௌர்ணமி, சித்தயோகம், உமாமஹேசுவர விரதம், திருவண்ணாமலை அருணாசநாயகர் சன்னதி மேலே கிரிவலம் வரும் காட்சி, திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கருட வாகன பவனி.

செப்டம்பர் 27 : தேய்பிறை பிரதமை, அமிர்த யோகம், மஹாளய பக்ஷ ஆரம்பம், திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல், இருக்கன்குடி, காஞ்சி மாரியம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்ய நன்று.

இதையும் படியுங்கள்:
ஆகஸ்ட் மாத ஆன்மீக காலண்டர்: வரலட்சுமி விரதம் முதல் ஓணம் பண்டிகை வரை...
September Events

செப்டம்பர் 28 : தேய்பிறை துவிதியை, சித்தயோகம், தேவக்கோட்டை ரெங்கநாதர் புறப்பாடு, கரூர் தான்தோன்றி கல்யாண பெருமாள் ஊஞ்சலில் காட்சியருளல், சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

செப்டம்பர் 29 : தேய்பிறை திரிதியை, சங்கடஹர சதுர்த்தி மஹாபரணி, சித்தயோகம், பிரஹதீ கௌரீ விரதம், நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய நன்று, சுவாமிமலை முருகப்பெருமானுக்கு பேராயிரம் நாமவாளி கொண்ட தங்கப் பூமாலை.

இதையும் படியுங்கள்:
ஆன்மீக உற்சவம்:ஆகஸ்ட் -21 திருச்சானூர் தங்கத்தேர் பவனி. 22-ல் ஆட்சிப் பொறுப்பேற்கும் சுந்தரேஸ்வரர்!
September Events

செப்டம்பர் 30 : தேய்பிறை சதுர்த்தி, கார்த்திகை விரதம், அமிர்தயோகம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் நரசிம்மர் மூலவருக்கு திருமஞ்சனம். திருச்செந்தூர், பழனி இத்தலங்களில் முருகப்பெருமான் புறப்பாடு.

logo
Kalki Online
kalkionline.com