தேங்காயை இப்படித்தான் உடைக்க வேண்டும்! ஆன்மீகத்தில் மறைந்துள்ள முக்கிய குறியீடுகள்!

தேங்காயின் வெளிப்புற ஓடு மனிதனின் கர்வத்தையும், தேங்காயின் உள்ளே உள்ள வெண்மை பகுதி தூய்மையான மனத்தையும் குறிக்கின்றன.
breaking coconuts|தேங்காய் பலன்கள்
breaking coconuts|தேங்காய் பலன்கள்AI Image
Updated on

ஆன்மிகத்தில் தேங்காய் என்பது தூய்மை மற்றும் அகங்கார தியாகத்தின் அடையாளமாகவும், சமையலில் அது உணவின் சுவை, மணம் மற்றும் ஊட்டச்சத்தை அதிகரிக்கும் முக்கியப் பொருளாகவும் விளங்குகின்றன.

தேங்காய் பலன்கள்:

தென்னை மரம் 'கற்பக விருட்சம்' என அழைக்கப் படுகிறது, ஏனெனில் அதன் ஒவ்வொரு பகுதியும் மனிதனுக்குப் பயன்படுகிறது. அந்தவ கையில் தேங்காய் நம் இந்திய கலாச்சாரத்திலும், ஆன்மிகத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

விநாயகர் பூஜை முதல் புதிய தொடக்கங்கள், திருமணங்கள், புதுமனை புகுவிழா மற்றும் விழாக்கள் வரையிலான பல்வேறு சடங்குகளில் கலசம் வைத்து தேங்காய் படைப்பது வழக்கம்.

இதன் இருப்பு, ஆன்மீக வளர்ச்சி, நல்ல அதிர்ஷ்டம் மற்றும் தெய்வீகத் தொடர்பை வளர்ப்பதில் அதன் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கிறது. எனவே, சடங்குகளில் தேங்காயை உடைக்கும் செயல், இந்து வாழ்க்கையின் கலாச்சார, ஆன்மீக மற்றும் நடைமுறை அம்சங்களில் ஆழமாக வேரூன்றிய பன்முக அர்த்தங்களைக் கொண்டுள்ளது.

இந்திய கலாச்சாரத்தில் தேங்காய் 'ஸ்ரீபலம்' (கடவுளின் கனி) என அழைக்கப்படுகிறது. இது தூய்மை, வளம் மற்றும் தெய்வீகத்தின் அடையாளமாகப் போற்றப் படுகிறது. ஆன்மிக சடங்குகளில் தேங்காயில் உள்ள மூன்று கண்கள் மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரைக் குறிக்கின்றன. சாஸ்திரத்தில் தேங்காயின் மூன்று கண்கள் பிரஜாபதியின் ஞானம், அறிவு மற்றும் விழிப்புணர்வு ஆகிய மூன்று கண்களைக் குறிக்கின்றன.

நாம் ஆன்மிக வழிபாட்டின் போது தேங்காய் உடைக்கும் நிகழ்வு நமது கர்வம் மற்றும் அகந்தையை இறைவனிடம் சமர்ப்பித்து தூய்மையடைவதை உணர்த்துகிறது. அதாவது, ஆன்மீக நம்பிக்கையின்படி தேங்காயை உடைப்பது மனிதனின் அகந்தையை (ஈகோ அல்லது ஆணவம்) கடவுள் முன் உடைத்துச் சமர்ப்பிப்பதைக் குறிக்கிறது.

தேங்காயின் வெளிப்புற ஓடு மனிதனின் கர்வத்தையும், தேங்காயின் உள்ளே உள்ள வெண்மை பகுதி தூய்மையான மனத்தையும் குறிக்கின்றன.

Coconut benefits
Coconut benefits

அதன் மென்மையான சதைப்பகுதி, ஒருவரின் உள்ளார்ந்த தூய்மையையும் பக்தியையும் குறிக்கும் வகையில் தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்படுகிறது.

ஆன்மிகத்தில் பழங்காலத்து விலங்குப் பலிகளுக்கு மாற்றாகத் தேங்காய் உடைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. அதன்படி கோவிலில் அர்ச்சனைக்காகவும், வீட்டில் பூஜை போன்ற நல்ல காரியங்களுக்கு உடைக்கப்படும் தேங்காயில் நிறைய குறியீடுகள் மறைந்திருக்கிறது.

பொதுவாக தென்னிந்திய சமையல்களில் தேங்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. சமையல் தேவை களுக்காகவும் அன்றாட உபயோகத்திற்காகவும் தேங்காயை எந்தப் பக்கவாட்டிலும் அல்லது குறுக்காகவும் உடைப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் வழிபாடுகள் மற்றும் கோவில் விசேஷங்களின் போது தேங்காய் உடைக்கும் வேளையில் அது குறுக்காக உடைவது சரியா என்ற ஐயம் பலருக்கு உள்ளது. பொதுவாக தேங்காய் உடைக்கும்போது அது எப்படி உடைகிறது என்பதை வைத்து நல்லது நடக்குமா கெட்டது நடக்குமா என்றும் தெரிந்துகொள்வார்கள்.

இதையும் படியுங்கள்:
நினைத்தது நிறைவேறும்… சிதறு தேங்காய் ஏன்?
breaking coconuts|தேங்காய் பலன்கள்

தெய்வ வழிபாட்டிற்காக தேங்காய் உடைக்கும்போது குடுமியுடன் சேர்த்து உடைப்பது பாரம்பரிய வழக்கமாகும்.

வழிபாட்டுக்காக இறைவனுக்குச் சிதறு தேங்காய் அல்லது படைப்புத் தேங்காய் உடைக்கும்போது அது சரியாக நடுவில் அல்லது நேராக உடையவேண்டும்.

ஆன்மிக வழிபாட்டிற்கென்று தேங்காய் உடைக்கும் பொழுது சரி பாதியாக (சரிசமமாக ) உடைத்தால் நல்லது உண்டாகும் என்பார்கள்.

தேங்காய் குறுக்காக அல்லது பக்கவாட்டில் சிதறி உடைவது நல்லதல்ல என்று ஆன்மிக நம்பிக்கைகளில் கருதப்படுகிறது.

குறுக்கில் உடைத்தால் ‘குற்றம் இருக்கிறது’ என்று பொருள். எக்காரணம் கொண்டும் உடைத்த தேங்காயை மூடி பார்க்கக்கூடாது.

சிறிய மூடியும், பெரிய மூடியுமாக உடைத்தால் நாம் நினைத்த காரியம் சிறிது நாள் கழித்து காரியம் நிறைவேறும்.

அதேபோல் உடைக்கப்பட்ட தேங்காய் அழுகி போயிருந்தால் பலரும் இதை கெட்ட சகுனமாக நினைப்பர். ஆனால் ஆன்மீகப்படி கண் திருஷ்டி மற்றும் தோஷங்கள் நீங்கியதைக் குறிக்கும். தேங்காய் அழுகி இருந்தால் பயப்படத் தேவையில்லை; மனதைச் சுமையாக்கிக் கொள்ளாமல் மற்றொரு நல்ல தேங்காயை இறைவனுக்குச் சமர்ப்பிக்கலாம்.

அதேபோல் உடைப்பட்ட தேங்காயின் உள்ளே பூ இருந்தால் குழந்தைப்பேறு உண்டாகும்.

இதையும் படியுங்கள்:
உடல், உயிர், ஆன்மா... நெய் தேங்காய் உணர்த்தும் சரணாகதி தத்துவம் என்ன?
breaking coconuts|தேங்காய் பலன்கள்

சிதறுகாய் உடைக்கும் பொழுது நன்றாக சிதற வேண்டும். அப்பொழுது சரிசமமாக உடையக்கூடாது. கடினமான தேங்காய் சிறு, சிறு துண்டுகளாக சிதறி ஓடினால்தான் நமது வாழ்வில் வரும் கடினமான தடைகளும், துன்பங்களும் சிதறும் என்பது ஐதீகம்.

logo
Kalki Online
kalkionline.com