சிறுகதை: 'பகீரத முயற்சி' என்றால் என்ன தெரியுமா?

பகீரத முயற்சி என்ற சொல்லின் உண்மையான புராண வரலாறு என்ன? சகர மன்னன் மற்றும் கங்கை நதியின் வரலாற்றை சொல்லும் கதை.
பகீரத முயற்சி| Lord Shiva, Bhagiratha, River Ganges, and Deliverance from the Curse.
பகீரத முயற்சி | Lord Shiva, Bhagiratha, River Ganges, and Deliverance from the Curse.AI Image
Updated on
deepam strip
deepam strip

பகீரத முயற்சி என்ற சொல், பகீரதன் என்ற இளவரசன் தனது முன்னோர்களின் சாபத்தை நீக்க அரசைத் துறந்து, பல ஆண்டுகள் உணவு, உறக்கமின்றி கடும் தவம் செய்து கங்கையை பூமிக்கு கொண்டு வந்த புராணக் கதையிலிருந்து வந்தது. முடியாத காரியத்தையும் விடாமுயற்சியால் சாதிக்கலாம் என்பதைக் காட்டும் உளவியல் ஊக்கக் கதையாக இது விளங்குகிறது.

முயற்சி செய்வதற்கு உதாரணமாக 'பகீரத முயற்சி' என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். இதற்கான உண்மையான விளக்கம் பலருக்கும் தெரியாது.

முன்னொரு காலத்தில் சகரன் என்ற மன்னன் இருந்தான். அவன் ஒரு பெரிய அஸ்வமேதை யாகம் நடத்த வேண்டும் என்று எண்ணியிருந்தான். ஆனால் தேவேந்திரன் அஸ்வமேதை யாகத்திற்கு தேவையான குதிரைகளைக் கவர்ந்து பாதாள லோகத்தில் மறைத்து வைத்தான். சகரன் மகன்களான 60,000 பேர் அந்தக் குதிரைகளை மீண்டும் கொண்டு வர பாதாள லோகத்திற்குச் சென்றனர்.

அப்பொழுது பாதாள லோகத்தில் தவம் செய்து கொண்டிருந்த கபில முனிவரை பார்த்து இவரே குதிரைகளைக் கவர்ந்து கொண்டு வந்திருக்கலாம் என்று எண்ணி, அவரை தாக்க முயற்சித்தனர்.

அதனால் கோபம் கொண்ட கபில முனிவர், சகர மன்னனின் 60,000 மகன்களை பார்வையாலே சாம்பலாக மாற்றினார். இச்சாபத்திலிருந்து விடுபட ஆகாய லோகத்தில் இருக்கும் கங்கை பூமிக்கு வர வேண்டும்; அந்தப் புனித நதியில் நனைந்தால் மட்டுமே சகர மன்னனின் 60,000 மகன்களுக்கு சாப விமோசனம் கிடைக்கும்.

பகீரத முயற்சி | Lord Shiva, Bhagiratha, the River Ganges, and Deliverance from the Curse.
பகீரத முயற்சி | Lord Shiva, Bhagiratha, the River Ganges, and Deliverance from the Curse.AI Image

தம்முடைய முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடைவதற்காக பகீரதன் என்ற இளவரசன் அரசாள்வதை துறந்து காட்டில் புகுந்து பல ஆண்டுகளாக பிரம்மனை நோக்கி கடும் தவம் புரிந்தான். அவன் தவம் பல ஆண்டுகளாக உணவு, உறக்கமின்றி தொடர்ந்து கொண்டே சென்றது. அவனுடைய தவத்தை கண்ட பிரம்மா, கங்கையை பூமிக்கு அனுப்ப முடிவு செய்தார்.

இதையும் படியுங்கள்:
நச்சுனு நாலு குட்டிக் கதைகள்!
பகீரத முயற்சி| Lord Shiva, Bhagiratha, River Ganges, and Deliverance from the Curse.

இருப்பினும் அதில் ஓர் சிக்கல் இருந்தது கங்கையின் வேகத்தை பூமியால் தாங்க முடியாது அது பெரும் அழிவிற்கு வழி வகுக்கும். இதனை சரி செய்ய பகீரதன் எம்பெருமானை நோக்கி மீண்டும் கடும் தவம் புரிந்தான். சிவபெருமான் பூமியை பேரழிவிலிருந்து காப்பதற்காக கங்கையை தன்னுடைய ஜடா முடியில் தாங்கினார். அவர் மெதுவாக கங்கையை பூமிக்கு அனுப்பினார். கங்காதேவி பகீரதனை பின் தொடர்ந்தாள்.

அவன் சகர மன்னனின் 60,000 மகன்கள் சாம்பலான இடத்தை நெருங்கினான். அங்கே, கங்கையின் புனிதமான நீர் பட்டவுடன் அவர்கள் சாப விமோசனம் பெற்று அவர்களுடைய ஆன்ம முக்தி அடைந்தது.

இதையும் படியுங்கள்:
தர்மன் சூதாடியது ஏன்? மகாபாரதப் பெருநூலின் ரகசியப் பின்னணி!
பகீரத முயற்சி| Lord Shiva, Bhagiratha, River Ganges, and Deliverance from the Curse.

இவ்வாறு பகீரதம் தன்னுடைய முன்னோர்களின் சாபத்தை நீக்க அரச பதவியை துறந்து விட்டு தன்னுடைய கடும் முயற்சியினால் தவம் புரிந்து அவர்களுடைய சாபத்தை போக்கினார். முடியாத காரியத்தை கூட விடாமுயற்சியினால் சாதிக்க முடியும் என்று பகீரதன் உலகிற்கு உணர்த்தினான்.

அதனால் கோபம் கொண்ட கபில முனிவர், சகர மன்னனின் 60,000 மகன்களை பார்வையாலே சாம்பலாக மாற்றினார். இச்சாபத்திலிருந்து விடுபட ஆகாய லோகத்தில் இருக்கும் கங்கை பூமிக்கு வர வேண்டும்; அந்தப் புனித நதியில் நனைந்தால் மட்டுமே சகர மன்னனின் 60,000 மகன்களுக்கு சாப விமோசனம் கிடைக்கும்.

logo
Kalki Online
kalkionline.com