திருமங்கையாழ்வார் வரலாறு: கள்வனாக இருந்து ஆழ்வாரான நீலனின் வியக்க வைக்கும் வாழ்க்கை!

சோழ நாட்டு ராபின்ஹுட் திருமங்கையாழ்வாரின் வியக்க வைக்கும் வரலாறும் வைணவப் புரட்சியும்.
திருமங்கையாழ்வார் வரலாறு - Thirumangai Azhwar history
திருமங்கையாழ்வார் வரலாறு - Thirumangai Azhwar history
ஆனந்த் ஸ்ரீனிவாசன்

ஆனந்த் ஸ்ரீனிவாசன், தபால் துறையில் உயர் அதிகாரியாகப் பணியாற்றி 2010-ல் ஓய்வு பெற்றவர். 1985 முதல் சமூகப் பிரச்னைகள் குறித்து எழுதி வருகிறார். 75 கதைகள், 5 கதைத் தொகுப்புகளின் ஆசிரியர். தினமலர் வாரமலர் டி.வி.ஆர் நினைவுச் சிறுகதைப் போட்டியில் மூன்று முறை பரிசு வென்றவர்.

Updated on: 

திருமங்கையாழ்வார் வரலாறு:

“கண்ணனுக்கும் கள்வனுக்கும்

பேதமில்லை தோழி

அவன் கன்னம் வைத்து திருடி வந்த

கதைகள் பல கோடி

பெண்: தர்மம் செய்யாதவரின் வீடுகளை நாடி நாடி

பொருள் எடுப்போம் தேடித் தேடி

மர்மம் எதுவும் இல்லை மனது சுத்தம் தோழி

இந்தப் பாடலை நாம் கேள்விப்பட்டிருப்போம்

இந்த பாடலின் பல்லவி கண்ணனுக்கும் கள்வனுக்கும் பேதமில்லை தோழி  அவன் கன்னம் வைத்து திருடி வந்த கதைகள் பல கோடி.

இப்போது நம் வாசகர்களுக்கு புரிந்து இருக்கும் திருமால் பெருமை படத்தில் திருமங்கை ஆழ்வார் பற்றிய பாடல் என்று.

ஆம் திருமங்கை ஆழ்வார் பற்றிய பெருமைகளைச் சொல்லும் பாடல் வரிகள் கவிஞர் கண்ணதாசன் மூலம் எழுதப்பட்டுத் திருமால் பெருமையில் பார்த்து இருப்பீர்கள்.

அந்தக் காலத்து ராபின்ஹுட். மாதிரி பணம் இருக்கிறவர் களிடம் கொள்ளையடித்து ஏழை மக்களுக்கும் ,கோயில் திருப்பணி செய்யவும் பயன்படுத்திய ஆழ்வார்.

பன்னிரண்டு ஆழ்வார்களில்  கடைசி ஆழ்வார் ஆன திருமங்கை ஆழ்வாரின் திருநட்சித் திரம் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத் தில் ஒவ்வொரு வைஷ்ணவ ஆலயங்களில் கொண்டாடப்படுகிறது.

திருமங்கையாழ்வார் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர். நாலாயிரதிவ்யப் பிரபந்தத்தில் நம்மாழ்வருக்கு அடுத்து அதிக எண்ணிக்கையில் இவரது 1253 பாடல்கள் இடம்பெறுகின்றன.

108 திவ்ய தேசங்களில் 86 திருத்தலங்களுக்கு யாத்திரை சென்று அவற்றைப் பாடினார்.

திருவரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி, ராப்பத்து உற்சவங்களை ஏற்படுத்தியவர். 

பல்வேறு யாப்பு, சிற்றிலக்கிய, சித்திரக்கவி வகைகளில் பாடல்கள் இயற்றினார். மடல் என்னும் சிற்றிலக்கிய வகைமையின் முன்னோடியாகவும் கருதப்படுகிறது.

திருமங்கையாழ்வார் சோழ நாட்டில் உள்ள திருவாலிக்கு அருகில் உள்ள திருக்குரையலூரில் கள்ளர் குடியில் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தார். 

தந்தை சோழ மன்னனின் படைத்தளபதியான ஆலிநாடான், தாயார் வல்லித்திரு. பெற்றோர் இட்ட பெயர் நீலன். ஆழ்வார்களில் சிலர் திருமாலின் ஆயுதங்களின் அம்சமாகப் பிறந்தவர்கள் என்ற வைணவக் கோட்பாட்டின்படி திருமாலின் சார்ங்கம் என்ற வில்லின் அம்சமாகப் பிறந்தார்.

இளமையில் கல்வி கற்று ஆசுகவி, மதுரகவி, சித்திரக்கவி, வித்தாரக்கவி என நான்கு வகைக் கவிகளையும் பாடும் திறமை பெற்றார். நீலன் இளவயதிலேயே ஆயுதப்பயிற்சி பெற்று மற்போரில் தேர்ச்சி பெற்றார்.

திருமங்கையாழ்வார் வரலாறு - Thirumangai Azhwar history
திருமங்கையாழ்வார் வரலாறு - Thirumangai Azhwar history

ஆலிநாடார் மறைந்த பின் சோழமன்னன் அவரைத் திருமங்கை என்ற நாட்டின் குறுநில மன்னனாக்கினான். பரகாலன் (எதிரிகளுக்குக் காலன்) என அழைக்கப்பட்டார்.

திருவெள்ளக்கோவிலில் ஒரு வைணவ வைத்தியனின் மகளாக வளர்ந்து வந்த குமுதவல்லியின் அழகைக் கண்டு, அவளை மணம் செய்ய விரும்பினார். 

குமுதவல்லியின் நிபந்தனைகளை ஏற்றுப் பரகாலன் திருநறையூரில் (நாச்சியார்கோவில்) பஞ்ச சம்ஸ்காரம் செய்துகொண்டார்.

அங்குக் கோவில் கொண்ட திருநறையூர் நம்பியே பரகாலனுக்குக் குருவாக நல்வினைச்சடங்கு செய்து வைத்ததாகக் குருபரம்பரைக் கதை கூறுகிறது.

குமுதவல்லியின் இரண்டாவது நிபந்தனையான ஒரு வருடம் 1008 வைணவ அடியவர்களுக்கு உணவளிக்க வேண்டும்.

இந்த நிபந்தனையை நிறைவேற்ற அவர் மிகவும் சிரமப்பட்டார்.

சோழநாடு சோறு உடைத்து. என்ற சொல்வதை நாம் கேள்விப்பட்டு இருப்போம். அப்பேற்பட்ட சோழ நாட்டில் பசி பட்டினி உள்ள மக்களைப் பார்ப்பது மிக அரிது.

தன் மேல் காதல் கொண்ட கலியனுக்கு மிகவும் tough task   குமுதவல்லி கொடுத்ததால் 1008 பேரை அவரால் அடையாளம் காணமுடியவில்லை. தினமும் shortage காணப்பட்டது.

ஆனால் குமுதவல்லியோ என்றைக்கு 1008 வைஷ்ணவர் களுக்கு உணவளித்தேன் என்று  என்றைக்கு நிரூபிக்கிறோயோ அன்றுதான் உன்னை நான் மனம் பிடிப்பேன் என்று உறுதியாகக் கூறவும் அரசாங்க கஜானா காலியாகவும் குமுதவல்லியின் கட்டளையை நிறைவேற்ற கொள்ளை அடிக்க ஆரம்பித்தார்.

அதனால் அரசனுக்குக் கப்பம் கட்ட முடியாமல் போகவே, அரசனால் சிறையில் அடைக்கப்பட்டார்.

பரகாலன் சிறையில் இருந்தபோது தேவப்பெருமாள் கனவில் தோன்றி காஞ்சியில் புதையல் இருப்பதைக்கூறி மறைந்தார். 

மன்னன் பரகாலனோடு தன் படையைக் காஞ்சிக்கு அனுப்பினார். வேகவதிக்கரையில் கிடைத்த பெரும்புதையலைக்கொண்டு, மன்னனின் கப்பத்தைக் கட்டி, சிறையிலிருந்து விடுதலை பெற்றார்.

திருமங்கையாழ்வார் அடியார் சேவையையே தனது குறிக்கோளாகக் கொண்டு தனக்குக் கிடைத்த செல்வத்தை அடியார் சேவையில் செலவிட்டார். செல்வம் தீரவே செல்வந்தர்களிடமிருந்து திருடியும், நீர்மேல் நடப்பான்', 'நிழலில்ஒதுங்குவான்', 'தாள்ஊதுவான்', 'தோலாவழக்கன்' ஆகிய நால்வரின் துணைகொண்டு வழிப்பறி செய்தும் தன் சேவையைத் தொடர்ந்தார். '

பெருமாள் பரகாலனை ஆட்கொள்ள வேண்டி ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார்.

 திருமணங்கொல்லையில் ஒரு புதுமணம் புரிந்த இணையரை வழிமறித்து, நகைகளை வழிப்பறிச் செய்தார். மணமகன் காலில் உள்ள மெட்டியை க் கழற்ற இயலாமல் பல்லால் கடித்து எடுத்தார். அப்போது கலியனுக்கு ஞானம் பிறந்தது.

ஆனால் கொள்ளையிட்ட நகைகள் இருந்த பொதியைத் தூக்க முடியவில்லை, அதற்கான காரணத்தை அந்தணர் வடிவில் வந்த பெருமானிடம் கேட்க, பரகாலனின் காதில் அந்தணராக வந்த பெருமாள் கலியா(பலம் மிக்கவன்) என்று அழைத்து எட்டெழுத்து மந்திரத்தை (ஓம் நமோ நாராயணாய) உபதேசித்தார். பரகாலன் தன் முதல் பாடலைப் பாடினார்.

இதையும் படியுங்கள்:
ஏழுமலையான் 'வெறுங்கை வேடன்' என்று அழைக்கப்படுவதன் ரகசியம் தெரியுமா?
திருமங்கையாழ்வார் வரலாறு - Thirumangai Azhwar history

“வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் பெருந் துயர் இடும்பையில் பிறந்து

கூடினேன் கூடி இளையவர்தம்மோடு அவர் தரும் கலவியே கருதி

ஓடினேன் ஓடி உய்வது ஓர் பொருளால் உணர்வு எனும் பெரும் பதம் திரிந்து

நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்.”

திருமங்கை ஆழ்வார் பல வைணைவ தலங்களுக்குப் பயணம் சென்று தலத்தையும், அங்குக் கோவில் கொண்ட பெருமாளையும் மங்களாசாசனம் செய்தார். 

இமயமலையிலுள்ள பத்ரிநாத், நைமிசாரண்யம் தொடங்கித் திருக்குறுங்குடி வரை 86 திவ்ய தேசங்களைப் பாடியிருக்கிறார்.

தைமாதம் அமாவாசை அன்று திருநாங்கூரைச் சுற்றி கோயில் கொண்டிருக்கும் பதினொரு பெருமாள்களையும் தன் பாசுரங்களால் பாடி மங்களாசாசனம் செய்வதற்காகத் திருமங்கை ஆழ்வார் புறப்பட்டு வருகிறார். 

பதினொரு பெருமாள்களும் தங்கக் கருட வாகனத்தில் வந்து காட்சி கொடுத்து, ஆழ்வாரிடம் மங்களாசாசனம் பெற்றுச் (பாடல்களை ஏற்று) செல்கிறார்கள்.

திருநெடுந்தாண்டகம் பாடிய பின் திருக்குறுங்குடியில் பரமபதம் அடைந்தார். பக்தியின் கனிந்த

“குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயராயினவெல்லாம்

நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும் அருளோடு பெருநிலமளிக்கும்

வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினுமாயின செய்யும்

நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்”

பெரிய திருமொழி.

இப்படிபட்ட பெருமைகள் உடைய ஆழ்வார் புகழ் பாடுவோம் இந்நாளில். 

ஆழ்வார் திருவடிகளே சரணம்.

இதையும் படியுங்கள்:
திருவாதிரை களி: வெறும் பிரசாதம் மட்டுமல்ல; 'ஆனந்தத்தின்' அடையாளம்!
திருமங்கையாழ்வார் வரலாறு - Thirumangai Azhwar history