மனித இறப்புக்குப் பின் ஆன்மா எமலோகத்தில் என்ன பாடுபடும்?

பசு தானம் செய்தால் எமலோகத்தில் ராஜ மரியாதை கிடைக்குமாம்!
After Death
After Death
Published on
Deepam strip
Deepam strip

இந்து புராணங்களின் படியும் கருட புராணத்தின் படியும் எமலோகம் என்பது பாவபுண்ணியங்களை கணக்கிட்டு தண்டனை வழங்கும் இடமாகும். எமலோகத்தில் எந்த மாதிரியான தண்டனைகள் வழங்கப்படுகின்றன என்பது கருட புராணத்தில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கருட புராணத்தில் ஒவ்வொரு இறந்த ஆன்மாக்களின் பாப புண்ணிய கணக்குகள் துல்லியமாக வரையறுக்கப்பட்டுள்ளன. நம் ஆன்மா பற்றிய அனைத்து தகவல்களும் கருட புராணத்தில் இடம் பெற்றுள்ளன.

சித்திரகுப்தன் கணக்கு வழக்குகளை பார்க்க, எமதர்மன் தலைமையில் எமதூதர்கள் ஆன்மாக்களை விசாரித்து தண்டனை வழங்கும் நியாயமான சபையாக எமலோகம் சித்தரிக்கப்படுகிறது.

எமலோகத்தில் நரகம் போன்ற தண்டனை பகுதிகள் பாவம் செய்தவர்களுக்கு கடும் வேதனையை தரும் இடமாக கருதப்படுகிறது.

ஒவ்வொரு மனிதனின் பாவ, புண்ணிய கணக்குகளும் துல்லியமாக பதியப்பட்டு அதற்கு ஏற்ப தண்டனை தீர்மானிக்கப்படுகிறது. இறந்தவர்கள் ஆன்மாக்களை காற்றை உருவாக்கி தேகத்தில் பிடித்து எமலோகத்திற்கு அழைத்துச் செல்வார்கள்.

எமதர்மன் நீதியின் தேவதையாக பாவங்களுக்கு ஏற்ப தண்டனை வழங்கும் இடமாக செயல்படுகிறது. இது இறப்பிற்கு பின் இந்த ஆன்மாக்களுக்கு கணக்கு தீர்க்கும் இடமாக புராணங்களில் விவரிக்கப்படுகிறது.

பூமியில் ஒருவர் பிறக்கும் இப்போதே, அவர்களின் மரணம் என்பது தீர்மானிக்கப்பட்ட ஒன்றாகும். மரணத்தை தவிர்ப்பது என்பது எவராலும் முடியாத காரியம் ஆகும். எமன் தூதர்கள் உங்களின் உயிரை பூமியிலிருந்து எமலோகத்திற்கு அழைத்துச் செல்வார்கள். பூமியில் வாழ்ந்த காலத்தில் நாம் செய்த பாவம் புண்ணியங்களை பொறுத்து சொர்க்கமா அல்லது நரகமா என்பது எமதர்மனின் நீதி சபையில் தீர்மானிக்கப்படும்.

இதையும் படியுங்கள்:
உடல், உயிர், ஆன்மா... நெய் தேங்காய் உணர்த்தும் சரணாகதி தத்துவம் என்ன?
After Death

பூமியில் நீங்கள் இறந்த நேரத்தில் இருந்து எமதர்ம உலகத்திற்கு செல்லும் வரை உங்கள் ஆன்மா பல துன்பங்களை கொடுமைகளை அனுபவிக்கும்.

கருட புராணம் என்பது நமது மரணத்திற்கு முன்கூட்டியே அறியவும், மரணத்திற்குப் பிறகு நமது ஆன்மாவின் நிலை என்னவாகும் என்பதையும் நமது பாவங்களுக்கு எமதர்மன் நீதி சபையில் என்ன தண்டனை கிடைக்கும் என்பதையும் உணர்த்தும் எச்சரிக்கை மணியாகும்.

நமது ஆன்மா பற்றிய அனைத்து தகவல்களும் இந்த புத்தகத்தில் உள்ளது. கருட புராணத்தின் படி மரணம் ஒருவருக்கு நெருங்கி விட்டால் அவர்களே விரும்பினாலும் அவரால் பேச இயலாது.

மரணம் நேரப்படும் சில நிமிடங்களுக்கு முன்னால் அவர்களுக்கு திவ்ய திருஷ்டி கிடைக்கும். அதன் மூலம் அவர்கள் உலகைப் பற்றி நன்கு புரிந்து கொள்வார்கள். அவர்கள் உணர்வுகள் ஒவ்வொன்றும் அழிய தொடங்கும்.

அவர்கள் நினைத்தாலும் அசைய முடியாது. இந்த அசையா நிலைக்கு வந்த பிறகு மரணிக்கப் போராடுகிறார்கள். இந்த நிலையில் வாயில் இருந்து உமிழ் நீர் தொடர்ந்து வெளியேறி கொண்டு இருக்கும்.

மிக அதிக பாவம் செய்தவருக்கு உடலின் கீழ்ப்பகுதியில் இருந்து மரணம் ஏற்படும். அந்த நேரத்தில் மூன்று எமது தூதர்கள் அவர்களுக்கு மிகவும் கோரமாக காட்சியளிப்பார்கள். எமதூதர்கள் மிகவும் கருப்பாக சீரற்ற முக அமைப்புடன் காட்சி அளிப்பார்கள். அவர்களின் உருவத்தை பார்த்த மாத்திரத்தில் பயத்தில் இறக்கப் போகிற மனிதர்களின் சிறுநீர் கசிய தொடங்கும்.

எமது தூதர்கள் அந்த ஆன்மாக்களை இறுக கட்டி விடுவார்கள். எமலோகத்திற்கு செல்லும் வழியில் ஆன்மாவிற்கு களைப்பு ஏற்பட்டால் அதற்கு ஓய்வு எடுக்க அனுமதி கிடையாது. எம தூதர்கள் ஆன்மாவிடம் அனுபவிக்கப் போகும் வலியை கூறி அதன் பயத்தை அதிகரிப்பார்கள். எமது தூதர்களிடம் ஆன்மாக்கள் தங்களை விட்டு விடும்படி கெஞ்சும். எம தூதர்கள் எந்தவித கருணையையும் காட்ட மாட்டார்கள்.

இந்த சமயத்தில் ஆன்மாக்களுக்கு தான் செய்த பாவங்கள் நினைவுக்கு வரும். ஆன்மாக்களால் தரையில் கூட நடக்க முடியாது. கொதிக்கின்ற மணலிலும் ஆன்மாக்களை எம தூதர்கள் சவுக்கால் அடித்து இழுத்துச் செல்வார்கள்.

இறந்த ஆன்மாக்களுக்கு இந்த எமலோக பயணம் ஒரு கொடூரமான அனுபவமாக இருக்கும். எமலோகம் சென்றபின் ஆன்மா நியாய சபையில் நிறுத்தப்படும். எமதர்மனை பார்க்கும் வரை சித்திரவதைகள் தொடர்ந்து கொண்டிருக்கும்.

இதையும் படியுங்கள்:
ஆன்மா புனிதமானது என்பதை தீர்மானிப்பவை எவை என்பது தெரியுமா?
After Death

எமதர்மனை சந்தித்தபின் ஆன்மா அவரது உடல் இருக்கும் இடத்திற்கு மீண்டும் கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்படும். ஆன்மா தன் இறந்த உடலை பார்த்து கதறி அழும். மீண்டும் உடலில் செல்ல முயற்சி செய்யும். ஆனால் எமது தூதர்கள் அதை தடுத்து விடுவார்கள். இவையெல்லாம் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து விடும்.

புண்ணியம் செய்த ஆன்மாக்கள் சொர்க்கத்திற்கும், பாவம் செய்த ஆன்மாக்கள் நரகத்திற்கும் அனுப்பப்படும்.

அதனால்தான் இறந்த 16 நாட்களில் திவசம் செய்து பிண்டம் வைக்க வேண்டும் என புராணங்கள் கூறுகிறது. 16 நாள் காரியம் முடிந்த பின் மீண்டும் எம தூதர்கள் அழைத்துச் செல்வார்கள். இவை அனைத்துமே நொடி பொழுதில் நடந்து விடும். பதினாராம் நாள் கழித்து மீண்டும் அழைத்துச் செல்லும்போது அந்த ஜீவன் தான் வாழ்ந்த வீட்டை திரும்பிப் பார்த்து அழுது கொண்டே செல்லுமாம்.

ஒரு நாளைக்கு 247 காத தூரம் செல்ல வேண்டும். ஒரு மனிதன் தான் வாழும் காலத்தில் பசு தானம் செய்வதன் மூலம் ஆத்மா வைதரணி நதியை எளிதில் கடக்கலாம்.

பசு தானம் என்பது ஒரு எளிய மனிதருக்கு கஷ்டப்படும் சூழ்நிலையில் அந்த பசுவை வைத்து அவர் ஜீவனும் செய்யக்கூடிய அளவில் பசு தானம் செய்ய வேண்டும்.

எமன் சபையில் 12 சிறவனார்கள் இருப்பார்கள். அவர்கள் நாம் செய்த பாவ புண்ணியத்தை சரி பார்த்து அதற்கு ஏற்ப தண்டனை கிடைக்கும் படி செய்வார்கள்.

இதையும் படியுங்கள்:
மனித இறப்புக்குப் பின் உடல் என்ன செய்யும்? ஆன்மா என்ன செய்யும்?
After Death

இறைவன் அருள் நம்மிடம் இருந்தால் சிவகணங்கள் நம்மளை அழைத்துச் செல்லும். இறந்த ஆன்மா ஒரு நாளைக்கு 247 காத தூரம் செல்வார்கள் . இறந்தவர்களின் காரியம் 16ஆம் நாள் கழிந்த பிறகு எமலோகம் செல்ல சுமார் ஒரு வருடம் ஆகும். அது வரையிலும் நாம் பாவ புண்ணியத்திற்கு ஏற்றபடி தண்டனை கிடைக்கும் . இதிலிருந்து யாரும் தப்ப முடியாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com