

நாய்கள் செல்லப்பிராணி ஆக வளர்க்கிறோம். ஆனால் சில திடகாத்திரமான வலுவான நாய்கள் மூட்டைகளை இழுத்துச்செல்லக்கூடிய வகையில் இருக்கும். இந்த நாய் இனங்களின் தோற்றம் மிக மிடுக்காகவும், தசைகள் வலுவானதாகவும் காண்பதற்கு பெரிய அளவிலும் இவை காணப்படும். அத்தகைய 9 நாய் வகைகள் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
1. மாஸ்டிஃப்:
இதற்கு மிக வலுவான எலும்புகள் இருக்கும். இதற்கு மிக பரந்த தலைப்பகுதி இருக்கும். வேட்டை மற்றும் போருக்கு பயன்படுத்தக்கூடியது. இது ஆயுதங்கள் நிறைந்த கனமான வண்டியை இழுத்துச் செல்லக் கூடியது. அத்தனை வலிமை பெற்றதாகும்.
2. க்ரேட் டே:
இது மிக உயரமாக இருக்கும். நல்ல வலிமையான தலை கொண்டிருக்கும். முரட்டுத் தனமான காட்டுப் பன்றியை தாக்கக் கூடிய அளவிற்கு வேகம், தைரியம் மற்றும் வலிமை கொண்டது. மிக கனமான மூட்டைகளை இழுத்துச் செல்லும்.
3. திபெத்திய மாஸ்டிஃப்:
இதன் தோற்றம் சிங்கத்தை ப் போன்று இருக்கும். இவை பல வருடங்களுக்கு முன் ஹிமாலயப்பகுதி வீடுகளை பாதுகாக்கும் பணியிலும், மேடும் ஆடுமாடுகளைக் காக்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தன. எந்தவித கடினமான சூழலையும் எதிர்கொள்ளும் வலிமை படைத்தது. இது இரண்டு கோட் போர்த்தியது போன்ற கனமான உடல் பெற்றது. மற்ற விலங்கினத்திடமிருந்து பாதுகாப்பு தரக்கூடியது.
4. ஐரிஷ் ஓநாய் (wolf hound):
இதற்கு பரந்த மார்பும் நீண்ட கால்களும் இருக்கும். மிக வேகமாக ஓடக்கூடியது. இவற்றைக் கண்டாலே மற்ற விலங்கினங்களுக்கு பயம் ஏற்படும். பாதுகாப்பிற்காக இதை வளர்ப்பார்கள். எந்த கடுமையான சூழலிலும் போராடி எதிர்க்கக்கூடிய வலிமை படைத்தது.
5. அனடோலியன் ஷெப்பர்டு:
இது மிகப் பெரிய அளவில் காணப்பட்டாலும் வலிமையான உடல் கொண்ட இது வேகமாக ஓடக்கூடியது. ஆடு மாடுகளை மற்ற விலங்கினங்களிடமிருந்து பாதுகாக்கும். கிராமப்புற மேடு பள்ளங்ஙளான இடங்களில் அதிக விரைவாக ஓடக்கூடிய வகையில் தசை வலிமை பெற்றது. ஆடு மாடுகளை இரவில் நன்கு பாதுகாக்கும். இவை மூட்டைகளை விட விலங்கினங்கள் கொண்ட வண்டியை இழுத்துச் செல்லும் வலிமை பெற்றவை. உடல் வலிமைக்கும் பெயர் போனது.
6. கேன் கார்சோ:
இத்தாலிய நாய் இனமான இதற்கு பரந்த மார்பும், பெரிய தலை மற்றும் விளையாட்டில் ஈடுபடக்கூடிய உடல் வலிமை பெற்றது. இதன் கழுத்துப் பகுதி உறுதியாக இருக்கும். தங்கள் எஜமானின் கட்டளையை ஏற்கும். இதற்கு மனமும் உடலும் ஆரோக்கியமாக வைக்க உடற்பயிற்சி தரப்படுகிறது. விவசாயத்திற்குத் தேவையான பொருட்கள் நிறைந்த வண்டியை இழுத்துச் செல்லும் நல்ல வலிமையான உடல் வாகு பெற்றது.
7. அலாஸ்கன் மலாமூட்:
இது அபூர்வமானது. மிக வலிமையான உடல் கொண்டது. கனமான பனிச்சறுக்கு வண்டியை பலநீண்ட தூரத்திற்கு இழுத்துச் செல்லக் கூடியது. கனமான வண்டிகளை இருக்கக் கூடியது. ஆர்க்டிக் கடுமையான சூழலில் எதிர்த்து போராடக்கூடியது.
8. டாபர்மான் பின் செய் (Doberman pinscher):
இதன் கூர்மையான புத்தி, தைரியம் மற்றும் விளையாட்டுத் தனம் நிறைந்த இனமாக கருதப்படுகிறது. பல கடுமையான மூட்டைகளை இழுக்கும் வலிமைபெற்றது. இதன் வேகத்தையும் வலிமையையும் அதிகப்படுத்த பயிற்சிகள் தரப்படுகின்றன. கடுமையான மூட்டைகளை இழுத்துச் செல்லும் வலிமை பெற்றது.
9. ராட்வெய்லெர்;
மிகப் பெயிய உடல்வாகு கொண்டது. எந்த சூழலையும் கூர்ந்து கவனிக்கும் திறன் பெற்றது. இறைச்சிகள் நிறைந்த வண்டியை இழுக்கக் கூடியது. இவை வண்டியை இழுத்துச் செல்ல வசதியாக பரந்த மார்பும் நிதியைப் பெற்றது.
மனிதர்கள் மூட்டை தூக்குவது போன்று வலிமையான நாய் இனங்களும் மூட்டைகளை இழுத்துச் செல்லக்கூடிய வகையில் வலிமை பெற்றவை என்பதை இப்பதிவின் மூலம் அறியும் போது வியப்பு ஏற்படுகிறது.
செல்லப் பிராணியாக இருப்பதேடு சில அரிய வகை நாய்கள் கடுமையான மூட்டைகளை சுமந்த வண்டிகளையும் மனிதனைப் போன்று இழுத்துச் செல்லும் வலிமைபெற்ற பாராட்டத்ததக்கவை.