திருக்குறள்: சில அரிய தகவல்கள்!

Old man telling story to the children
Thirukkural - Old man and childrenAI Image
வி. சுவாமிநாதன்

எனது தந்தை நிறைய சமூக சிறுகதைகள் எழுதியுள்ளார். குறிப்பாக கல்கியில் எழுதிய 'பிரமை!' மற்றும் 'அவர்கள் காத்திருக்கிறார்கள்!' சிறுகதைகள் கல்கி பரிசு போட்டியில் பரிசு வாங்கியது குறுப்பிடத்தக்கது. தற்போது மங்கையர் மலரில் பிரசுரமான எனது சிறுகதை 'கூண்டு கிளி அல்ல நான்!' என்னுடைய முதல் படைப்பு. தினமலர் வாரமலரில் கவிதைச்சோலை பகுதியில் கவிதைகளூம், தினத்தந்தி குடும்ப மலரில் புதுக்கவிதைகளும் மற்றும் தொகுப்பு நூலில் தன்முனைக் கவிதைகளும் பிரசுரமாகி உள்ளன. நிறைய எழுத வேண்டும் என்கிற ஆசை உள்ளது.

Updated on

சிறுவர்களே! உலகப் புகழ் பெற்ற திருக்குறள் பற்றி உங்களுக்குத் தெரியாத பல சுவாரசியமான மற்றும் ஆச்சரியமான உண்மைகளை இங்கே எளிமையாகப் படித்துத் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்!

  • திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு: 1812

  • திருக்குறளின் முதல் பெயர்: முப்பால்

  • திருக்குறளில் உள்ள மொத்த அதிகாரங்கள்: 133

  • திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்: 1330

இயல் வாரியாக குறட்பாக்கள்:

  • அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்: 380

  • பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்: 700

  • காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்: 250

எழுத்து மற்றும் சொல் விவரங்கள்:

  • திருக்குறள் 'அ' கரத்தில் தொடங்கி, 'ன' கரத்தில் முடிகிறது.

  • திருக்குறளில் உள்ள மொத்தச் சொற்கள்: 14,000

  • திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்: 42,194

  • தமிழ் எழுத்துக்கள் 247-இல், திருக்குறளில் இடம்பெறாத எழுத்துக்களின் எண்ணிக்கை: 37

  • திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து: ஒள

  • திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஒரே எழுத்து: னி (1,705 முறை)

  • திருக்குறளில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்பட்ட எழுத்துக்கள்: ளீ, ங

  • திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்: தமிழ், கடவுள்

தாவரங்கள் மற்றும் இயற்கை:

  • இடம்பெறும் இரு மலர்கள்: அனிச்சம், குவளை

  • இடம்பெறும் ஒரே பழம்: நெருஞ்சிப்பழம்

  • இடம்பெறும் ஒரே விதை: குன்றிமணி

  • இடம்பெறும் இரண்டு மரங்கள்: பனை, மூங்கில்

இதையும் படியுங்கள்:
ரோபோ ராமனின் ரகளைகள்!
Old man telling story to the children

சிறப்புத் தகவல்கள்:

  • திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரத் தலைப்பு: குறிப்பறிதல்

  • திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்: ஒன்பது

  • 'கோடி' என்ற சொல் இடம்பெற்றுள்ள இடங்கள்: 7

  • 'எழுபது கோடி' என்ற சொல் இடம்பெற்றுள்ள குறட்பாக்களின் எண்ணிக்கை: 1

  • 'ஏழு' என்ற சொல் இடம்பெற்றுள்ள குறட்பாக்களின் எண்ணிக்கை: 8

இதையும் படியுங்கள்:
விண்வெளிக்குச் செல்ல விமானத்தைப் பயன்படுத்தாதது ஏன்?
Old man telling story to the children

பதிப்பு மற்றும் உரை வரலாறு:

  • திருக்குறள் மூலத்தை முதன்முதலில் அச்சிட்டவர்: தஞ்சை ஞானப்பிரகாசர்

  • திருக்குறளுக்கு முதன்முதலில் உரை எழுதியவர்: மணக்குடவர்

  • திருக்குறள் உரையாசிரியர்களுள் பத்தாவது உரையாசிரியர்: பரிமேலழகர்

  • திருக்குறளை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்: ஜி.யு. போப்

  • திருக்குறள் இதுவரை மொழிபெயர்க்கப்பட்டுள்ள மொழிகளின் எண்ணிக்கை: 26-க்கும் மேல் (தற்போது 100-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது).

logo
Kalki Online
kalkionline.com