

மகாபாரதத்தில் அர்ஜுனனுக்கே காட்சியளித்த, 9 விலங்குகளின் விசித்திர உறுப்புகள் கொண்ட அபூர்வமான ‘நவகுஞ்சரம்’ பறவையைப் பற்றி நீங்கள் எாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அது பறவையா அல்லது மிருகமா? ஒடிசா கலாச்சாரத்துடன் இதற்கு என்ன தொடர்பு? மகாபாரதத்தின் இந்த மர்மமான மற்றும் வியக்க வைக்கும் ஆன்மீக ரகசியத்தை இப்போதே தெரிந்து கொள்ள இந்தக் கட்டுரையை முழுமையாகப் படியுங்கள்!
நவகுஞ்சரம் என்கிற ஒரு பறவையை பார்த்ததும் இல்லை கேள்விப்பட்டதும் இல்லை புதுமையாக இருக்கிறதே இந்த பறவை எங்கே இருக்கிறது? என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறீர்களா? இதோ படியுங்கள்!
இந்த பறவை மகாபாரதம் கதை தெரியும் தானே உங்கள் வீட்டில் தாத்தா பாட்டி உங்களுக்கு சொல்லியிருப்பார்கள். இந்த மகாபாரதம் கதையில் வருகிறது.
வித்தியாசமான உடலமைப்பை கொண்ட இந்த பறவை நவகுஞ்சரம். ஒன்பது மிருகங்களின் உடல் உறுப்புகள் சேர்ந்த கலவை இந்த பறவை. அது என்ன ஒன்பது மிருகங்களின் உடல் அமைப்பு என்று யோசிக்கிறீர்களா? அது என்னென்ன என்று பார்ப்போம்!
சேவலின் தலை மயிலின் கழுத்து, எருதின் திமில், சிங்கத்தின் இடை, பாம்பின் வால், யானை, புலி, மானின் கால்கள் மனிதனின் கையுடன் கூடிய விலங்கு எப்படி இருக்கும் அதுதான் நவகுஞ்சரம். நவ என்றால் ஒன்பதை குறிக்கிறது. ஒன்பது விலங்குகளின் கலவை என்பதால் நவகுஞ்சரம் என்று பெயர்.
மகாபாரதம் கதையில் வரும் அர்ஜுனன் மலை மீது தவம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது நவ குஞ்சரமாக உருவெடுத்து கிருஷ்ணர் அர்ஜுனன் முன்பு தோன்றியதாக வருகிறது. தவத்திலிருந்து கண்விழித்த அர்ஜுனன் முதலில் நவ குஞ்சரத்தை பார்த்து ஆச்சரியமடைந்து திகைத்தார். பின்னர் அதன் கையில் தாமரை பூவை பார்த்தார். வெவ்வேறு விலங்குகளின் உடல் உறுப்புகள் சேர்ந்த அதன் உடல் அமைப்பை பார்த்து ஒரு விஷயத்தைப் புரிந்து கொண்டார். அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் சொன்ன வார்த்தைகள் ஞாபகத்துக்கு வந்தன.
மனிதர்களின் எண்ணங்கள் ஒரு வரையறைக்கு உட்பட்டவை. உலகமோ எல்லையற்றது என்பதை உணர்ந்தார் அர்ஜுனன். இதுவரை பார்த்திராத ஒரு உயிர் இந்த உலகில் இருக்கலாம் என்றும் நினைத்தார்.
தன்னை சோதிப்பதற்காக இந்த உருவத்தில் வந்திருப்பது கிருஷ்ணன் தான் என்று தெரிந்து கொண்டு எடுத்த வில்லை கீழே போட்டு விட்டு வணங்கினார்.
ஒரிசாவில் விளையாடப்படும் கஞ்சி பா சீட்டுக்கட்டு விளையாட்டில் நவ குஞ்சரம் ராஜாவாகவும் அர்ஜுனன் மந்திரியாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். ஒடிசாவில் வரையப்படும் ஓவியங்களில் நவ குஞ்சரம் பல வகைகளில் வரையப்படுகிறது. அதன் கையில் இருக்கும் நீலச்சக்கரம் பூரி கோவில் கோபுர கலசத்தின் உச்சாணியில் கம்பீரமாக வீற்றிருக்கிறது..
எப்படி இருக்கிறது நவ குஞ்சரம் பறவை வித்தியாசமாக இருக்கிறதா நீங்கள் ஒரிசா மாநிலத்திற்கு போனால் பாருங்கள் என்ன குட்டீஸ்களா!
இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம், நம் நாட்டின் தொன்மையான கலாச்சாரம் மற்றும் இதிகாசங்களின் வழியே ஆழ்ந்த ஞானத்தையும் புதிய வரலாற்றுத் தகவல்களையும் உள்வாங்கும் தெளிவைப் பெறலாம். உலகைப் பார்க்கும் பரந்த பார்வையைப் பெறலாம். புராணங்களின் மீதான உங்கள் புரிதலை ஆழப்படுத்தி, தமிழ் பாரம்பரியம் மற்றும் மகாபாரதக் கதைகளின் அரிய ஆன்மீக ரகசியங்களை எளிமையாகத் தெரிந்து கொள்ளும் மனநிறைவைப் பெறுங்கள்.