சிறுவர் சிறுகதை: நீர் எனும் உயிர் அமுதம்!

சிறுவர் சிறுகதை: வறட்சியில் தவித்த ஊருக்கு தண்ணீர் தர மறுத்த கண்ணப்பனுக்கு நீர் தேவதை கொடுத்த அதிரடி தீர்ப்பு
சிறுவர் சிறுகதை | Kannappan and the Water Goddess
சிறுவர் சிறுகதை | Kannappan and the Water GoddessImage credit: Gemini AI
கமலா முரளி

ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியை ,கமலா முரளியின் தினசரி, மஞ்சரி, கலைமகள்,குவிகம் மின்னிதழ், கேலக்ஸி தளம், நமது உரத்த சிந்தனை, மலர்வனம், பூஞ்சிட்டு சிறார் மின்னிதழ், மங்கையர்மலர், கோகுலம் இந்து தமிழ்திசையின் மாயாபஜார், சிறுவர் வனம், சொல்வனம் போன்ற பல்வேறு தளங்களில் வெளிவந்துள்ளன. இவரது “மங்கை எனும் மந்திர தீபம்” எனும் மொழிபெயர்ப்பு நூலும் “இந்துமதி கல்யாணம் எப்போ ?” என்ற சிறுகதைத் தொகுப்பு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

Updated on: 

மங்களபுரி கிராமத்தில் வாழ்ந்த கண்ணப்பனின் தோட்டம் மிகப் பெரியது. பல்வேறு வகையான மரங்களும் பூச்செடிகளும் அத்தோட்டத்தில் இருந்தன. எல்லா உயிரிகளுக்கும் சரணாலயமாகவே கண்ணப்பனின் தோட்டம் இருந்தது.

தோட்டத்தின் எல்லைப் பகுதியில் ஒரு பெரிய கிணறும் இருந்தது. அதன் நீர் மிகச் சுவையாக இருக்கும். கிணறு தோண்டும் போதே நெல்லிமரக் கட்டைகளைப் போட்டதும் கிணற்றின் அருகே நெல்லி மரங்கள் இருப்பதும் தான் அந்நீரின் சுவைக்குக் காரணம்.

ஒரு வருடம் மங்களபுரி கிராமத்தில் கடும் வறட்சி ஏற்பட்டது. ஊரின் மையப்பகுதியில் அமைந்திருந்த பொதுக் கிணறு வற்றிப் போய் விட்டது. ஆனால், கண்ணப்பனின் கிணற்றில் நீர் எப்போதும் போலவே இருந்தது.

ஊரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

ஊரின் பொதுக் கிணற்றை தூர் வாரி, ஆழப்படுத்த ஊர்ப்பெரியவர்கள் முடிவு செய்தனர். உடனடி குடிநீர்த் தேவைக்காக கண்ணப்பனைத் தேடி அனைவரும் வந்தனர்.

“கண்ணப்பா, நமது கிராமத்தில் எல்லாக் கிணறும் வற்றிவிட்டன”

“அதற்கு நான் பொறுப்பு அல்ல” என அலட்சியமாகச் சொன்னான் கண்ணப்பன்.

“அதாவது கண்ணப்பா, குடிக்கவே நீர் இல்லை, அதனால்…”

“அதனால்? கிணற்றைத் தூர் வாருங்கள். என்னிடம் எதற்கு வந்தீர்கள்?”

“நாங்களும் தூர் வாரி, கிணற்றை ஆழப்படுத்தத் தான் முடிவு செய்திருக்கிறோம். ஆனாலும் , அது வரை…”

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: வகுப்பறை விளக்கு!
சிறுவர் சிறுகதை | Kannappan and the Water Goddess

“அதுவரை ?” எரிச்சலுடன் கேட்டான் கண்ணப்பன்.

“உனது கிணற்றில் நீர் இருக்கிறது. நாங்கள் உன் தோட்டத்தில் இருந்து குடிநீர் எடுத்துக் கொள்கிறோம்”.

“அதெல்லாம் முடியாது. என் தோட்டத்து கிணற்று நீர் என் உபயோகத்துக்கு மட்டும் தான்”

“தம்பி, வீட்டுக்கு ஒரேயொரு குடம் குடுப்பா. அதுவும் பெரிய கிணறு தூர் வாரி முடிக்கும் வரைக்கும் தான்” என்றார் ஒரு பெரியவர்.

“முடியாதுன்னா… முடியாது தான் அய்யா” மிகக் கடுமையான குரலில் சொன்னான் கண்ணப்பன்.

சிறுவர் சிறுகதை | Kannappan and the Water Goddess
சிறுவர் சிறுகதை | Kannappan and the Water GoddessImage credit: Chatgpt

“என் தண்ணி எனக்கு மட்டும் தான். கிளும்புங்க எல்லோரும்” என விரட்டினான்.

மாலையில் வழக்கம் போல, தன் தோட்டத்தில் உள்ள மாமரத்தடியில் வந்து அமர்ந்தான் கண்ணப்பன்.

அப்போது ஒரு சிறு பறவை தன் தாயிடம் பேசுவது கண்ணப்பன் காதில் விழுந்தது.

“அம்மா, நாம ஏன் இந்தத் தோட்டத்தை விட்டுப் போகணும்?”

“இந்த தோட்டத்தில் உள்ள கிணற்று நீரை வேறு யாருக்கும் தர முடியாது என கண்ணப்பன் சொல்லி விட்டாராம். அதனால் தான்”

“அதற்காக நாம் ஏன் அம்மா வேறு இடத்துக்குப் போக வேண்டும்?”

“என் செல்லமே, குடிநீரை உயிர் அமுதம் அப்படின்னு சொல்லுவாங்க. தாகத்துக்கு தண்ணிர் கொடுக்க மாட்டேன் எனச் சொல்லவே கூடாது”

”அது மட்டுமல்ல, ஓடி வரும் ஆறும் பொங்குகிற புனலும் எல்லோருக்குமே சொந்தமானது. இயற்கை அளித்த வரப்பிரசாதம் அது.”

“சரி தான் அம்மா”

“இப்படிப்பட்ட இரக்கமற்றவரது தோட்டத்தில் இருந்து எல்லாப் பறவைகளும் விலங்குகளும் கிளம்பறதா முடிவு செஞ்சுட்டோம்”

“எல்லாருமே கிளம்பறாங்களா அம்மா?”

“ஆமாம், பறவைகளும் விலங்குகளும் மட்டுமல்ல. இந்தக் கிணற்றில் வாழும் நீர் தேவதையே கிளம்ப முடிவு பண்ணிட்டாங்க”

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: வரம்!
சிறுவர் சிறுகதை | Kannappan and the Water Goddess

உரையாடலைக் கேட்ட கண்ணப்பன் திடுக்குற்று எழுந்து நின்றான்.

”பறவைகளே, விலங்குகளே! எங்கும் செல்லாதீர்கள்.” எனக் கெஞ்சினான்.

வெளிர் நீல ஆடை தரித்து, கையில் குடத்துடன், நீர் தேவதை கண்ணப்பன் முன் தோன்றினாள்.

“அன்னையே! என்னை மன்னியுங்கள். இங்கேயே தங்கி இருங்கள். என்னை விட்டு செல்லாதீர்கள்” எனப் பணிந்தான்.

“கண்ணப்பா… இயற்கை வளங்கள் அனைவருக்கும் சொந்தமானது. அனைவருக்கும் பகிர்ந்து வாழ். உனது தோட்டத்தில் உள்ளது போல் நிறைய மரங்களைப் பயிரிட அனைவருக்கும் புத்தி சொல். “

“உங்கள் ஆணை, அன்னையே!” என வணங்கினான் கண்ணப்பன்.

உயிர் அமுதமாகிய குடிநீர் ஊர் மக்கள் அனைவருக்கும் கிடைத்தது.