

செப்டம்பர் 5.
அன்று பள்ளி வளாகமே விழாக்கோலம் பூண்டிருந்தது. வண்ணக்காகிதங்கள், பலூன்கள், மாணவர்கள் வரைந்த ஓவியங்கள், ஆசிரியர்களுக்கான வாழ்த்து அட்டைகள் என பள்ளி முழுவதும் மகிழ்ச்சி நிறைந்திருந்தது.
நுழைவு வாயில் பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தது:
“HAPPY TEACHERS DAY!”
மாணவர்கள் அனைவரும் தங்களுடைய ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க ஆவலுடன் இருந்தனர்.
ஆனால் ஐந்தாம் வகுப்பு மாணவன் அரவிந்த் மட்டும் அமைதியாக தனது இருக்கையில் அமர்ந்திருந்தான்.
அவனுடைய வகுப்பாசிரியர் பிரேமா மேடம். அவர் ஒரு ஆங்கில ஆசிரியை. ஆங்கிலப் பாடத்தை மிகவும் சுவாரஸ்யமாகவும் எளிமையாகவும் கற்றுக்கொடுப்பதில் அவர் சிறந்தவர். மாணவர்களிடம் பாடத்தை மட்டும் சொல்லிக் கொடுப்பதில்லை; ஒவ்வொரு மாணவனிடமும் இருக்கும் திறமையை அறிந்து அதை வளர்க்க முயற்சி செய்வார்.
ஆனால், அரவிந்துக்கு ஆங்கிலம் என்றாலே பயம்.
ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் பேசச் சொன்னால் தலைகுனிந்துகொள்வான்.
“Good morning” என்றுகூடச் சொல்லத் தயங்குவான்.
ஒருநாள் பிரேமா மேடம் வகுப்பில் கேட்டார்:
“Children, who can tell me one sentence about yourself?”
பல மாணவர்கள் கைகளை உயர்த்தினர்.
ஆனால், அரவிந்த் மட்டும் அமைதியாக இருந்தான்.
பிரேமா மேடம் அவனைப் பார்த்தார்.
“Aravind, you can try.”
அவன் மெதுவாக எழுந்தான். “Ma’am…..I cannot speak English.”
வகுப்பில் சில மாணவர்கள் சிரித்தனர்.
அரவிந்தின் முகம் சிவந்தது.
பிரேமா மேடம் உடனே மாணவர்களைப் பார்த்து, “Children, never laugh when someone is trying to learn. Remember, mistakes are the first steps to learning” என்றார்.
பின்னர் அரவிந்திடம் திரும்பி,
“Aravind, எனக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது என்பதைகூட ஆங்கிலத்தில் சொன்னதுதான் உன்னுடைய முதல் வெற்றி. தவறாகப் பேசினாலும் பரவாயில்லை. ஆனால், பேச முயற்சி செய்ய வேண்டும்.” என்று கூறி ஆசிரியை புன்னகைத்தார்.
“Can you try once again?”
அரவிந்த் சிறிது தயக்கத்துடன்,
“My name is Aravind.”
“Very good!”
வகுப்பே கைதட்டியது.
அந்த ஒரு சிறிய கைத்தட்டல் அரவிந்தின் மனதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
அடுத்த நாள் முதல் பிரேமா மேடம் அரவிந்துக்காக ஒரு சிறிய பயிற்சியைத் தொடங்கினார்.
ஒவ்வொரு நாளும் வகுப்பு தொடங்குவதற்குமுன் அவன் ஒரு ஆங்கில வாக்கியம் பேச வேண்டும்.
முதல் நாள்:
“My name is Aravind.”
அடுத்த நாள்:
“I am a student.”
மூன்றாவது நாள்:
“I like my school.”
சில நாட்களில் அவன் சிறிய வாக்கியங்களைத் தயக்கமின்றிப் பேசத் தொடங்கினான்.
ஒருநாள் பிரேமா மேடம் கேட்டார்:
“Aravind, what is your dream?”
அவன் சிறிது நேரம் யோசித்தான்.
“I don't know, Ma’am.”
“That's okay. You don't need to know your dream today. But remember one thing—you can become anything when you believe in yourself and work hard.”
அந்த வார்த்தைகள் அரவிந்தின் மனதில் ஆழமாகப் பதிந்தன.
சில வாரங்களுக்குப் பிறகு ஆங்கிலத் தேர்வு வந்தது.
அரவிந்த் முன்பைவிட நன்றாகப் படித்திருந்தான்.
ஆனால், தேர்வு முடிவுகள் வந்தபோது அவனுக்கு 100-க்கு 42 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்தன.
அவன் மனம் உடைந்தது.
விடைத்தாளை எடுத்துக்கொண்டு பிரேமா மேடத்திடம் சென்றான்.
“Ma’am, I failed again.”
பிரேமா மேடம் அவனுடைய விடைத்தாளைப் பார்த்தார்.
“Aravind, look at this.”
அவர் ஒரு கேள்வியைக் காட்டினார்.
“Last time you couldn't write even one sentence. Now you have written five sentences. Isn't that progress?”
அரவிந்த் அமைதியாக இருந்தான்.
“Marks are important, but improvement is more important.”
அவர் அவனிடம் கூறினார்:
“Don't say, ‘I can't.’ Say, ‘I can't yet.’”
“Yet என்ற ஒரு வார்த்தை உன் வாழ்க்கையை மாற்றும்.”
அந்த நாள் முதல் அரவிந்த் ஒரு முடிவு எடுத்தான்.
“I can't yet... but I will learn.”
மாதங்கள் கடந்தன.
மெல்ல மெல்ல அரவிந்தின் ஆங்கிலப் பேச்சு முன்னேறியது.
அவன் வகுப்பில் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தொடங்கினான். ஆங்கிலத்தில் சிறிய கதைகளைப் படிக்கத் தொடங்கினான்.
ஒருநாள் பள்ளியின் Morning Assembly-யில் ஆங்கிலத்தில் இரண்டு நிமிடங்கள் பேசும் வாய்ப்பும் கிடைத்தது. அதைப் பார்த்த பிரேமா மேடத்தின் முகத்தில் பெருமிதம் தெரிந்தது.
ஆசிரியர் தினத்தன்று மாணவர்கள் அனைவரும் ஒரு சிறிய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
ஆசிரியர்கள் அனைவரும் விழா அரங்கில் அமர்ந்திருந்தனர்.
பிரேமா மேடம் மேடைக்கு அழைக்கப்பட்டார்.
“Now, we have a special presentation for our English teacher, Mrs. Prema.” என்று அறிவிக்கப்பட்டது.
அரவிந்த் மேடைக்கு வந்தான்.
அவன் கையில் ஒரு சிறிய வாழ்த்து அட்டை.
பிரேமா மேடம் அவனைப் பார்த்ததும் ஆச்சரியப்பட்டார்.
“Aravind?”
அவன் மைக்கைப் பிடித்தான்.
சில மாதங்களுக்கு முன்பு ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம்கூட பேசத் தயங்கிய அதே அரவிந்த், இன்று நூற்றுக்கணக்கான மாணவர்கள் முன்னால் பேசத் தொடங்கினான்.
“Good morning, everyone.”
அனைவரும் கைதட்டினர்.
“Today is Teachers’ Day. I want to say something about my teacher, Mrs. Prema.”
அவன் பிரேமா மேடத்தைப் பார்த்தான்.
“She did not teach me only English. She taught me how to believe in myself.”
பிரேமா மேடத்தின் கண்களில் கண்ணீர் துளிகள் தோன்றின.
அரவிந்த் தொடர்ந்து பேசினான்:
“Before meeting her, I was afraid of English. I thought I could never speak English. But she told me one sentence…”
அவன் சிறிது நேரம் நிறுத்தினான்.
“Don't say ‘I can't.’ Say ‘I can't yet."
அரங்கம் முழுவதும் கைதட்டல் ஒலித்தது.
“Ma’am, you believed in me when I didn't believe in myself.”
“Thank you for being my teacher.”
“Happy Teachers’ Day, Ma’am!”
அரவிந்த் தனது வாழ்த்து அட்டையை ஆசிரியையிடம் கொடுத்தான்.
அதைத் திறந்து பார்த்த பிரேமா மேடத்தின் கண்களில் கண்ணீர் பெருகியது.
அதில் எழுதப்பட்டிருந்தது:
“A teacher takes a hand, opens a mind and touches a heart.”
காலம் ஓடியது.
அரவிந்த் பள்ளிப் படிப்பை முடித்தான். கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தைப் படித்தான்.
பின்னர் தனது கல்வியை முடித்து ஒரு நல்ல நிறுவனத்தில் வேலை பெற்றான்.
ஆண்டுகள் கடந்தன.
ஆனால், பிரேமா மேடத்தை அவன் ஒருபோதும் மறக்கவில்லை.
ஒவ்வொரு ஆசிரியர் தினத்திலும் பிரேமா டீச்சருக்கு கம் வாழ்த்து அனுப்புவான்.
ஒரு வருடம் ஆசிரியர் தினத்தன்று அவன் பள்ளிக்கு நேரடியாகச் சென்றான். பள்ளி மாறியிருந்தது. வகுப்பறைகள் மாறியிருந்தன. ஆனால், அவனுடைய நினைவுகள் மாறவில்லை.
அவன் பிரேமா மேடத்தைத் தேடிச் சென்றான். அவர் ஒரு வகுப்பறையில் மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுத்துக்கொண்டிருந்தார். அரவிந்த் கதவின் அருகில் நின்று பார்த்துக்கொண்டிருந்தான்.
பிரேமா மேடம் ஒரு மாணவனை எழுப்பி, “Don't be afraid. Try again.” என்று சொல்லிக்கொண்டிருந்தார்.
அந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் அரவிந்த் புன்னகைத்தான்.
அதே வார்த்தைகள் ஒருகாலத்தில் தனது வாழ்க்கையையும் மாற்றியிருந்தன.
வகுப்பு முடிந்ததும், “மேடம்!” என்று அழைத்தான்.
பிரேமா மேடம் திரும்பிப் பார்த்தார். சில நொடிகள் டீச்சரால் அவனை அடையாளம் காணமுடியவில்லை.
“நான் அரவிந்த் மேடம்... உங்கள் பழைய மாணவன்.”
அவருடைய முகம் மலர்ந்தது.
“அரவிந்தா!”
அவர் மகிழ்ச்சியுடன் அவனை வரவேற்றார்.
“எப்படி இருக்கிறாய்?”
“நன்றாக இருக்கிறேன் மேடம்.”
“என்ன செய்கிறாய்?”
“நான் இப்போது ஒரு ஆங்கில ஆசிரியராக வேலை செய்கிறேன்.”
பிரேமா மேடம் சில நொடிகள் பேசாமல் நின்றார்.
“ஆங்கில ஆசிரியரா?”
“ஆம் மேடம்.”
அவர் புன்னகையுடன்,
“அப்படியா? ஒருகாலத்தில் ‘I cannot speak English’ என்று சொன்ன மாணவன் இன்று ஆங்கில ஆசிரியராகிவிட்டாயா?”
அரவிந்த் சிரித்தான்.
“அதற்குக் காரணம் நீங்கள்தான் மேடம்.”
அரவிந்த் தனது பையில் இருந்து ஒரு சிறிய பரிசை எடுத்தான்.
“இது உங்களுக்காக.”
“என்ன இது?”
“திறந்து பாருங்கள்.”
பிரேமா மேடம் பெட்டியைத் திறந்தார்.
அதற்குள் ஒரு அழகான சிறிய விளக்கு இருந்தது.
அதன் கீழே எழுதப்பட்டிருந்தது:
“To the teacher who lit my life.”
பிரேமா மேடத்தின் கண்கள் கலங்கின.
அரவிந்த் மெதுவாகக் கூறினான்:
“மேடம், நீங்கள் எனக்கு ஆங்கில வார்த்தைகளை மட்டும் கற்றுக் கொடுக்கவில்லை.
நான் தோல்வியடைந்தபோது மீண்டும் முயற்சி செய்யக் கற்றுக் கொடுத்தீர்கள்.
நான் பயந்தபோது தைரியம் கொடுத்தீர்கள்.
நான் என்னை நம்பாதபோது, நீங்கள் என்னை நம்பினீர்கள்.
நான் ‘I can't’ என்றபோது ‘I can't yet’ என்று சொல்லிக் கொடுத்தீர்கள்.
அதனால்தான் இன்று நான் இங்கே இருக்கிறேன்.”
பிரேமா மேடம் புன்னகைத்தார்.
“அரவிந்த், ஒரு ஆசிரியருக்கு மாணவனின் வெற்றியைப் பார்ப்பதைவிட பெரிய பரிசு வேறு எதுவும் இல்லை.”
அன்று மாலை பள்ளியிலிருந்து வெளியே வந்த அரவிந்த், பள்ளிக்கட்டிடத்தை ஒருமுறை திரும்பிப் பார்த்தான்.
அந்தப் பள்ளியின் ஒரு சிறிய வகுப்பறையில் தொடங்கிய நம்பிக்கை, இன்று அவனுடைய வாழ்க்கையை மாற்றியிருந்தது.
அவனுக்கு ஒரு உண்மை புரிந்தது:
ஒரு ஆசிரியர் பாடப்புத்தகத்தைத் திறக்கிறார்; ஆனால் நல்ல ஆசிரியர் ஒரு மாணவனின் எதிர்காலத்தையே திறக்கிறார்.
ஒரு ஆசிரியர் எழுத்துக்களை கற்றுக்கொடுக்கிறார்; ஒரு நல்ல ஆசிரியர் வாழ்க்கையைப் படிக்கக் கற்றுக்கொடுக்கிறார்.
பிரேமா மேடம் ஒரு ஆங்கில ஆசிரியர் மட்டுமல்ல. அவர் பல மாணவர்களின் கனவுகளுக்கு முதல் வார்த்தையை எழுதும் வாழ்க்கை ஆசிரியர்.
அந்த நாளிலிருந்து அரவிந்தும் தனது மாணவர்களிடம் ஒரே வார்த்தையை அடிக்கடி கூறத் தொடங்கினான்:
“Don't say, ‘I can't.’ Say, ‘I can't yet.’ Keep learning. Keep trying. One day, you will say, ‘I did it!’”
“ஒரு ஆசிரியரின் ஒரு நல்ல வார்த்தை, ஒரு மாணவனின் வாழ்க்கையின் முழு வாழ்க்கையை மாற்றக்கூடும்.”
ஆசிரியராக பணியாற்றக்கூடிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் இது சமர்ப்பணம்.