

இது ஏழாவது முறை.. இம்முறை சத்தியபதி நாட்டின் மன்னன் போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால்…!? சத்தியபதி நாட்டின் மன்னரின் எனர்ஜி, சார்ஜ் செய்யப்படாத ஆன்ட்ராய்டு அலைபேசியாய் மாறியது. அவரின் கைகள் நடுங்கின; கால்கள் துவண்டன.
அவர் மனதிற்குள்…. முதன்மை அமைச்சர் ஏழாவது முறையும் வெற்றி பெறுவது போலவும் இராஜ்யம் பறிபோவது போலவும் காட்சிகள் ஓடிக் கொண்டிருந்தன.
ஆயிரக்கணக்கான ஆந்தைகள் வாழும் குகைக்குள் தமது மகளை ஆந்தையாக்கி சிறை வைத்திருப்பதும் நினைவுக்கு வந்து துன்புறுத்தின.
ஆதலால், நாட்டு மக்களுக்கு தண்டோரோ மூலம் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டார்.
மன்னரின் மகளை மீட்டுத் தருபவருக்கு திருமணம் செய்து தருவதாகவும், ராஜ்யத்தில் ஒரு பகுதி அரசாளும் ஆணை வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.
அப்போது மகேந்திரன் என்ற வாலிபன் வந்து, ”மன்னா! என் பேர் மகேந்திரன். உங்கள் நாட்டு பிரஜை. உங்கள் மகளை மீட்டுத் தருகிறேன். அதே நேரத்தில் உமது முதன்மை அமைச்சர் வெற்றி பெறுவதையும் தடுத்து விடுகிறேன்” என்று உறுதி அளித்தான்.
குகை வாயிலில் ஆயிரக்கணக்கான ஆந்தைகள் காவல் காத்துக்கொண்டிருந்தன.. அவற்றை எதிர்த்துச் செல்வதற்கு வாலிபன் ஒரு உபாயம் செய்தான்.
அவனும் ஆந்தையைப் போலவே உருமாறினான். குகைக்குள் சென்றான். குகைக்குள் ஆயிரக்கணக்கான ஆந்தைகள் இருந்தன. அதில் இளவரசி யாரென்று கண்டுபிடிக்க முடியாமல் திணறினான்.
குகைக்குள் அங்குமிங்கும் பறந்தான். ஓரிடத்தில் தனியாக ஆந்தை ஒன்று அமர்ந்திருந்தது. அதன் முழிகள் வழக்கமாய் இருக்கும் ஆந்தைகள்போல் இல்லாமல் சாதாரணமாய் இருந்தன. அவற்றை வைத்து இளவரசிதான் அந்த ஆந்தை எனக் கண்டுபிடித்து விட்டான். இப்பொழுது இளவரசியை ஆந்தை உருவிலிருந்து மீட்க வேண்டுமே என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
அவளை மீட்கும் வழியை யோசித்தபோது, ஆங்கே பிரம்மாண்டமான சிலை ஒன்று இருப்பதைக் கவனித்தான். அதன் மூக்கு வித்தியாசமாக இருந்தது. உடனே, ஆவான் அந்த சிலை அருகே சென்று அதன் மூக்கைத் திருகினான்.
உடனே அந்த சிலை பேசத் துவங்கியது. "எனது காலின் கீழே உள்ள மந்திர நீரை எடுத்து அந்த ஆந்தையின் மீது தெளித்தால், அது இளவரசியாக உருமாறும். அதே நேரத்தில் முதன்மை மந்திரி இம்முறைப் போட்டியில் தோற்று விடுவார்" என்று சொல்லியது.
அதேபோல அந்த வாலிபன் செய்தான். ஆந்தை உருவில் இருந்த இளவரசி அழகான தோற்றத்தில் வெளிவந்து புன்னகைத்தாள். மகேந்திரன் இளவரசியை குதிரையில் அமர்த்தினான். சத்தியபதி நாட்டின் மன்னரிடம் ஒப்படைத்தான். சொன்னபடியே மன்னரும் அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்தார். அதோடு நாட்டின் ஒரு பகுதியை அரசாளும் உரிமையையும் வழங்கினார். முதன்மை மந்திரியும் போட்டியில் தோற்றுப் போனார்.
என்ன குட்டீஸ்களா கதையை படித்தீர்களா..? இந்த மாயாஜாலக் கதையைக் கேட்பதன் மூலம், குட்டித் தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் துணிச்சலாக யோசிக்கும் திறன் கிடைக்கும்.
மேலும், எத்தகைய சிக்கல்களையும் புத்திசாலித்தனத்தால் வெல்லும் ஆற்றலும் கிடைக்கும்! சதித் திட்டங்களை முறியடித்து நீதியை நிலைநாட்டும் முறைகளை உணர்ந்து, வாழ்வில் நேர்மையுடன் வெல்லும் ஊக்கத்தைப் பெறலாம்.
ஆந்தைக் குகையில் மகேந்திரன் காட்டிய தைரியத்தைப் போல, நீங்களும் உங்கள் அன்றாட வாழ்வில் வரும் சின்னஞ்சிறு சோதனைகளைச் சிரித்துக்கொண்டே எதிர்கொள்ளும் அசாத்தியமான சூப்பர் ஹீரோ தைரியத்தைப் பெறுவீர்கள்!