சிறுவர் சிறுகதை: சுற்றுச்சூழல் ஆர்வலர்!

நீட் தேர்வில் தோற்ற ஷோபனா உலகப் புகழ் பெற்ற வைல்ட் லைஃப் ஃபோட்டோகிராபர் ஆன சிறுவர் சிறுகதை
சிறுவர் சிறுகதை | wildlife photographer
சிறுவர் சிறுகதை | wildlife photographerAI Image
Updated on

ஷோபனா +2 முடித்து விட்டு நீட் தேர்வு எழுதினார். கடைசி 12 நிமிடங்கள்தான் இருந்தது. அப்போது அவர் பேனா உடைந்தது. கண்காணிப்பாளரிடம் கேட்டார்.

அவர் பேனா தர மறுத்தது மட்டும் இன்றி, யாருடனும் கட்டாயம் பேசக்கூடாது என்று சொல்லிவிட்டார்.

வீட்டிற்கு அழுதுகொண்டே வந்தார்.

அவர் அப்பா வெங்கட் ஒரு முற்போக்குவாதி.

“ஷோபு…” ஷோபானாவை அப்படித்தான் கூப்பிடுவார்.

“ம்ம்ம்…”

“உனக்குத்தான் மரம், செடி, காடு, விலங்குகள் மற்றும் பறவைகள் என்றால் ரொம்பப் பிடிக்குமே… நீ ஏன் மெட்ராஸ் பல்கலைக்கழக டிப்ளோமோ.. பட்டயப்படிப்பு படியேன்…?”

“தேங்க்ஸ் டேட்… நான் அந்தக் கோர்ஸையே படிக்கிறேன்…!” என்று சொன்னார்.

அட்மிஷன் வாங்கிய உடன் அப்பா அவருக்கு ஒரு புதிய நவீன வீடியோ கேமிரா வாங்கிக்கொடுத்தார்.

அறிஞர் அண்ணா விலங்கியல் பார்க்... அதாவது வண்டலூர் பார்க். ஷோபனா நேரம் கிடைக்கும்போது எல்லாம் வண்டலூருக்குச் சென்று விடுவார்.

அவருக்கு மயில்கள், கிளிகள், நெருப்பு கோழி எல்லாம் பிடிக்கும். விலங்குகளில் யானை, ஒட்டகம், சிறுத்தை மற்றும் புலிகள் பிடிக்கும்.

இரண்டு வருடங்களில் மிக அதிக மதிப்பெண் பெற்று தேர்வானார்.

முதலில் அவர் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் சென்று ஒரு நாள் முழுக்க முழுக்க வீடியோ எடுத்தார். அதில் ஒரு பறவை வானில் இருந்து தண்ணீரில் அழகாக தரை இறங்குவதைப் படம் எடுத்தார்.

பிறகு அந்த வீடியோவில் தனது குரலைப் பதிவு செய்தார். தான் எழுதிய கட்டுரைகளையும் எல்லா சுற்றுச்சூழல் பத்திரிகைகளுக்கும் அனுப்பி வைத்தார். வீடியோவையும் சமூக ஊடகங்களில் சமர்ப்பித்தார்.

சிறுவர் சிறுகதை | wildlife photographer
சிறுவர் சிறுகதை | wildlife photographerAI Image

ஒரே வாரத்தில் 9000 லைக் வந்தது. அவரது கட்டுரை தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிகையில் வந்தது. நேஷனல் ஜியாகிராபிக் சேனலும் ஒளி பரப்பியது.

உலகப் புகழ் பெற்றுவிட்டார்.

ஒரு நாள் அவர் கலெக்டரை பார்த்து, துப்பாக்கி வைத்து கொள்ள அனுமதி கேட்டார்.

கலெக்டர் மறுநாள் வரச் சொன்னார். மறுநாள் ஷோபனாவை பாராட்டி ஒரு நவீன கை துப்பாக்கி மற்றும் 66 குண்டுகள் உள்ள ஒரு சிறு பையையும் கொடுத்து, “ஆல் தி பெஸ்ட்…!” சொல்லி அனுப்பிவைத்தார்.

அவருக்கு மேற்கு தொடர்ச்சி மலையில் சென்று பார்க்க வேண்டும் என்று ஆசை வந்தது.

அப்பாவிடம் சொல்லிவிட்டு நீலகிரி புறப்பட்டார். அவர் மசினகுடியில் அரசு கெஸ்ட் அவுசில் தங்கினார்.

மறு நாள் காட்டின் உள்ளே சென்று ஒரு யானை கூட்டம் குளிப்பதைப் படம் எடுத்தார். அதில் ஒரு குட்டி தன் யானை அழகாக குளிப்பதை 6 நிமிட படம் எடுத்தார்.

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: ஒற்றுமை ஒரு ஆயுதம்!
சிறுவர் சிறுகதை | wildlife photographer

மறுநாள் காட்டின் உள்ளே வெகுதூரம் வந்துவிட்டார்.

அப்போது அவர் மரத்தின் பின்னே நின்று ஜும் செய்துபார்த்தார். ஒரு சிறுத்தை பதுங்கி பதுங்கி முன்னே வந்தது. தன்னிடம் துப்பாக்கி இருந்ததால் பயம் இல்லை.

சிறுத்தை தனது இரையைக் கண்டுபிடித்து விட்டது.

எனவே, எதிரான பக்கத்தில் ஜும் செய்தார்.

ஒரு புள்ளி மான் புல் மேய்ந்துகொண்டு இருந்தது.

ஷோபனா தயார் ஆனார்.

மான் சிறுத்தையைப் பார்த்துவிட்டது. சிறுத்தை மற்றும் மான் ஓட ஆரம்பித்தது. மானின் வேகம் அதிகமாக இருந்தது.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: ஆட்டோ டிரைவர்!
சிறுவர் சிறுகதை | wildlife photographer

ஆனால், இடைவெளி இன்றி ஓடியது. மான் கொஞ்சம் ஓடி திரும்பி பார்த்து… மீண்டும் ஓட ஆரம்பித்தது. இது தொடர்ந்து நடந்தது. கடைசியில் மான் திரும்ப திரும்ப பின்னால் பார்த்ததால்… நொடிகள் பல தவறியதால்… . சிறுத்தை கடைசியில் தனது இரையைப் பெற்றது.

இதை முழுக்க முழுக்க படம் எடுத்துவிட்டார்.

சென்னை வந்து கட்டுரை எழுதினார். பின்னர் எல்லா பத்திரைகைகள் மற்றும் சமூக ஊடங்களில் பதிவு செய்தார்.

டிஸ்கவரி சேனலிலும் அவரது வீடியோ ஒளிபரப்பு ஆகியது.

ஷோபனா உலகப்புகழ் பெற்றார்....!

logo
Kalki Online
kalkionline.com