சிறுவர் சிறுகதை: காக்கைகளின் நல் உதவி!

கேலி செய்தவர்களைக் காப்பாற்றிய காகங்கள் பற்றிய சிறுகதை
சிறுகதை  | crows help to peacocks
சிறுகதை | crows help to peacocksImage credit: Gemini AI
எஸ்.மாரிமுத்து

கடந்த 15 ஆண்டுகளாக நானும் எனது மனைவி எம். வந்தா. நிறைய இதழ்களில் கதை, கட்டுரை, ஜோக்ஸ், ஆன்மீகம், சமையல் பற்றி எழுதி உள்ளோம். தற்போது கல்கி ஆன்லைனிலும் வருகிறது. கல்கிக்கு நன்றிகள்.

Updated on: 

ஒரு பெரிய மரத்தில் ஆண் காகமும், பெண் காகமும் தன் குஞ்சுகளுடன் கூடுகட்டி வாழ்ந்து வந்தன.

அங்கே இருந்து சற்று தொலைவில் உள்ள நகரத்துக்கு வந்து, கிடைக்கும் உணவை  உண்டு விட்டு, மாலையில் தனது கூட்டுக்கு சென்று விடும். கூடவே குஞ்சுகளையும் கூட்டிக் கொண்டு போய் திரும்பி கூட்டில் விடும்.

தினம் தினம் மனிதர்கள் போடும் மீதி உணவுகளை சாப்பிட்டு வாழ்ந்து வருவதை அந்த மரத்தில் வசிக்கும் மற்ற பறவைகள் கேலி செய்தன. "எங்களைப் போல் காட்டுக்குள் சென்று வாழ முடியாத உன்னால், எங்களுக்குத் தான் கேவலம். பேசாமல் நீ மனிதர்களுடைய சென்று வாழ வேண்டியதுதானே?" என்று கேட்டன.

உடனே காகம், அந்த பறவைகளிடம், "நாங்கள் மக்களிடம் சென்று சாப்பிட்டு பிழைப்பதால் நகரம் சுத்தப்படுகிறது. ஆகவே நாங்கள் உழைத்துத் தான் சாப்பிடுகிறோம். அதுவும் அவர்களாக பார்த்துக் கொடுப்பதை நாங்கள் பகிர்ந்து தான் உண்கிறோம்" என்று பதில் சொல்லியது.

மயில், புறா, குருவி போன்றவை காக்கைகளை கேலியும் கிண்டல் செய்து கொண்டு தான் இருந்தன. "நீங்கள் எல்லாம் கருப்பாய் இருக்கிறீர்கள்; அதனால் தான் மனிதர்கள் உங்களை அடிமையாக நடத்துகிறார்கள்" என்று காக்கைகளின் நிறத்தையும் கேலி செய்து பேசின.

இதை கேட்ட காக்கை குஞ்சுகள் மனம் வேதனைப்பட்டு, தங்கள் பெற்றோரிடம், "நாம் இங்கிருந்து போய்விடலாம்" என்று சொல்லியது.

உடனே, ஆண் காகம் தன் குஞ்சுகளை பார்த்து, "குழந்தைகளே மற்றவர்கள் பேசுவதற்கும், ஏசுவதற்கும் பயப்பட்டு நாம் கூட்டை விட்டு சென்றோம் என்றால், நம்மால் எங்கும் வசிக்க முடியாது. எங்கு சென்றாலும் ஏதாவது ஒரு பிரச்னை இருக்கும். நாம் அதனை அனுசரித்து பழகி வாழ்ந்தால் நம்மால் நன்றாக வாழ முடியும். ஆகவே மற்றவர்கள் சொல்வதைப் பற்றி கவலைப்படாமல் வாழ கற்றுக் கொள்ளுங்கள். உங்களுடைய அருமை மற்றவர்களுக்கு தெரியும் போது, எல்லாம் சரியாகிவிடும்" என்று அறிவுரை கூறியது.

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: பணிவின் பெருமை..!
சிறுகதை  | crows help to peacocks

அந்த மரத்தில் வசித்து வந்த மயில்கள் சிறிது நாட்களாக கவலையில் இருந்தன. உடனே  இதைகவனித்த காகம் சென்று "ஏன் கவலை?" என கேட்டது.

மயில்கள் சோகத்துடன், "நாங்கள் மனிதர்களின் விவசாய நிலத்தில் பயிராகும் கதிர்களை மேய்ந்து விடுவதால், மனிதர்கள் எங்கள் மேல் கோபம் கொண்டு, எங்களை பிடிக்க முற்படுகிறார்கள். இந்த மரத்தில் வசிக்கும் எங்கள் அனைவரையும் வலை போட்டு பிடித்துச் செல்ல இன்றோ, மாலையோ வருவதாக பேசிக் கொண்டார்கள்' என வருத்தத்துடன் சொன்னது.

உடனே, காகங்கள், "கவலைப்படாதீர்கள். இந்த மரத்தில் வசிக்கும் உங்களை காக்கும் பொறுப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்" என்றன. 

மறுநாள் நான்கைந்து மனிதர்கள் மரத்தின் அடியில் வந்து மயில்களை எப்படி பிடிக்கலாம்? என பேசிக்கொண்டு இருந்தபோது, திடீரென்று அந்த மரத்திலிருந்து நூற்றுக்கணக்கான காகங்கள் கிளம்பி அந்த மனிதர்களை நோக்கி பறந்து வந்தன.

சிறுகதை | A man gave food for crows
சிறுகதை | A man gave food for crowsImage credit: Gemini AI

திடீரென, காகங்கள் மனிதனின் தலையின் மேல் கொத்துவதற்கு பாய்ந்து வர அங்கிருந்த மனிதர்கள் ஐயோ, அம்மா எனக்கு கூக்குரலிட்டு, பயந்து தலை தெறிக்க ஓடி விட்டார்கள்.

அடுத்த நாள் மயில்கள் காகங்களிடம் வந்து, "உங்களுக்கு எல்லாம் மிகவும் நன்றி. எங்களுடைய மரத்தில் நீங்கள் வசிப்பதால் எங்களுக்கு மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது. உங்களுக்கு மட்டும் எப்படி? இத்தனை நண்பர்கள்" என்று ஆச்சரியத்துடன் கேட்டன.

காகங்கள் சிரித்தவாறு, "நாங்கள் பிழைப்புக்காக மனிதர்களின் நாடினாலும் எங்களுக்குள் எப்பொழுதும் ஒற்றுமையாக இருப்போம். ஒருவருக்கு ஆபத்து என்றாலும், அனைவரும் உதவிக்கு வந்து விடுவோம்" என்று கூறியன. உடனே மயில்கள் மிக்க நன்றி என்று கூறி விடை பெற்றன.

ஒருநாள் குருவிகள் கீச், கீச் என கத்தியன. என்னவென்று எட்டி பார்த்த காகம், அங்கு ஒரு பாம்பு, குருவி கூட்டை நோக்கி போவதை பார்த்தது. தன் குஞ்சுகளை காப்பாற்றுவதற்கு தான் அவ்வாறு கத்துகின்றன என்பதை புரிந்து கொண்டு ஆண்காகமும், பெண் காகமும் பாய்ந்து சென்று அந்த பாம்பை கொத்த ஆரம்பித்தன. இதனை சமாளிக்க முடியாத பாம்பு போதும் என்று சர சர என்று  இறங்கி சென்று விட்டது.

உடனே, குருவிக்குஞ்சுகள் வந்து  நன்றி சொல்லி அவர்களை கேலியும், கிண்டலும் செய்ததற்கு வருத்தம் தெரிவித்தன.

ஒருமுறை ஒரு வீட்டில் பெரிய விசேஷம் நடந்து கொண்டிருந்தது.

அந்த வீட்டில் இருந்தவர்கள் ஒரு இலையில் நிறைய சாப்பாடு எடுத்து வந்து வீட்டிற்கு மாடியின்மேலே வைத்தனர்.

அப்போது மேலே பறந்து கொண்டிருந்த பறவைகள், சாப்பாட்டின் வாசத்தில் கவரப்பட்டு அதை சாப்பிட கீழே இறங்கின.

உடனே அந்த வீட்டில் இருந்தவர்கள் அந்த பறவைகளை விரட்டினர்..

சாப்பாட்டை வைத்துவிட்டு சாப்பிட விடாமல் விரட்டினால் என்ன அர்த்தம்? என்று பறவைகள் தங்களுக்குள் பேசிக்கொண்டன.

அப்போது அந்த இரு காக்கைகள் பறந்து வந்து அந்த சாப்பாட்டை கொத்த ஆரம்பித்தன.

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: நான்கு திருடர்களும் ஒரு கிழவியும்!
சிறுகதை  | crows help to peacocks

உடனே அந்த மனிதர்கள் கையெடுத்து கும்பிட்டனர். மற்றபறவைகளுக்கு ஒரே ஆச்சரியம். அந்த காகங்களிடம் "எப்படி? எங்களை சாப்பிட விடாமல் விரட்டிய மனிதர்கள் நீங்கள் சாப்பிடும் போது மட்டும் கையெடுத்து கும்பிடுகிறார்களே?" என்று கேட்டன.

உடனே, அந்தக் காகங்கள் "நாங்கள் சாப்பிடுவதை தங்களுடைய முன்னோர்களே அந்த சாப்பாட்டை சாப்பிடுவதாக மக்கள் நினைக்கிறார்கள். அதனால் தான் கைகூப்பி நன்றி தெரிவிக்கிறார்கள்" என்றன. இதைக் கேட்ட மற்ற பறவைகள்,  காகங்களின் அருமையை உணர்ந்து கொண்டன. தாங்கள் கேலி செய்து பேசியதற்கு மன்னிப்பு கேட்டன.

குட்டீஸ்..... பிறரின் தோற்றம் முக்கியமல்ல அவர்கள் செய்யும் நல்ல செயல்க களத்தான் பாராட்ட வேண்டும். செய்வீர்களா?

logo
Kalki Online
kalkionline.com