

நாய்கள் ஒரு குறிப்பிட்ட திசையைப் பார்த்து விசித்திரமாகக் குரைப்பதையோ அல்லது சுவரையே வெறித்துப் பார்ப்பதையோ பார்த்து பேய்களைப் பார்க்கின்றன என்று அஞ்சுகிறீர்களா? அவற்றின் இந்த அசாதாரண புலன் உணர்வுகளுக்குப் பின்னால் என்ன மாதிரியான ரகசியங்கள் மறைந்துள்ளன என்பதை இந்த கட்டுரையில் விரிவாகப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
நாய்களின் கண்களுக்கு பேய் பிசாசு அல்லது துஷ்ட சக்திகள் தெரிவதாக பல காலமாக மக்களிடையே ஒரு நம்பிக்கை நிலவி வருகிறது.
ஆனால் அறிவியல் பூர்வமாக பார்த்தால் இதற்கு நாய்களின் அசாதாரணமான புலன் உணர்வுகளை முதன்மை காரணமாகும்.
மனிதர்களால் உணர முடியாத சில இயற்கையான மாற்றங்களை நாய்கள் எளிதாக கண்டறிந்து விடுகின்றன.
மனிதர்கள் பேய் பிசாசு என புரிந்து கொள்கிறார்கள். அதற்கான காரணங்கள் மனித கண்களால் பார்க்க முடியாத புற ஊதா கதிர்களை நாய்களால் எளிதில் அடையாளம் காண முடியும். காற்றில் மிதக்கும் சிறிய துகள்கள் மனிதர்களுக்கு தெரியாமல் ஒளியின் பிரதிபலிப்புகள் போன்றவற்றை நாய்கள் உற்று நோக்கும். இந்தச் செயலை நாம் நாய்கள் பேயை பார்ப்பதாக நினைத்துக் கொள்கிறோம்.
நாய்களுக்கு கேட்கும் திறன் ஜாஸ்தி:
மனிதர்களால் 20000 ஹார்ட்ஸ் வரை உள்ள ஒலிகளை மட்டுமே கேட்க முடியும். ஆனால் நாய்களோ 67,000 ஹார்ட்ஸ் வரை உள்ள ஒலிகளை கேட்கும் திறன் கொண்டது. வெகு தொலைவில் நடக்கும் அசைவுகள் பூமிக்கு அடியில் ஏற்படும் அதிர்வுகள் சுவர்கள் மரங்களில் உள்ள பூச்சிகள் சத்தம் கூட அதற்கு தெளிவாக கேட்கும்.
இதனால்தான் நாய்கள் ஒரு குறிப்பிட்ட திசையை பார்த்து குறைக்கும். நாய்க்கு மோப்ப சக்தி அதிகம்.
நாய்களின் மோப்ப சக்தி மனிதர்களை விட 10 ஆயிரம் முதல் ஒரு லட்சம் மடங்கு அதிகம். காற்றில் வரும் மிக நுண்ணிய வாசனைகள் விலங்குகளின் வாசனைகள் இவற்றை உடனே கண்டறிந்து விடும்.
காற்றில் ஏற்படும் வாசனை மாற்றத்தை உடனடியாக கண்டுபிடித்து விடும். இதனால் தான் நாய்கள் பூகம்பத்தை முன்கூட்டியே உணருகிறது.
காந்தப்புல உணர்வு:
நாய்கள் பூமியின் காந்தப்புல உணர்வை அறியும் ஆற்றல் கொண்டவை. வானிலை மாற்றம் பூமியில் ஏற்படும் அதிர்வுகள் இயற்கை சீற்றங்கள் இவற்றை நாய்களால் முன்கூட்டியே உணர முடியும். நாய்கள் ஒரு வித பயத்துடனும் அல்லது விசித்திரமாகவோ நடந்து கொள்ளும்.
ஆறாம் அறிவு:
நாய்களுக்கு பழக்கம் இல்லாத புதிய நிழலோ ஒளியோ அல்லது சத்தம் கேட்டால் அவை பயத்தின் காரணமாக குரைக்க ஆரம்பிக்கும். நாய்கள் பார்ப்பது பேய்களை அல்ல. மனித எல்லைக்கு அப்பாற்பட்ட சக்திகளை அதனால் எளிதாக உணர முடியும். இந்த விசித்திரமான நடவடிக்கை துஷ்ட சக்திகளை பார்க்கின்றன என்ற நம்பிக்கை மக்களிடையே பரவி உள்ளது.
நாய்களுக்கு கெட்ட சக்திகளை பார்க்கும் திறன் கொண்டது.
மனிதர்களுக்கு மூக்கில் 5 மில்லியன் நுகர்வு செல்கள் உள்ளன.
ஆனால் நாய்களுக்கு 220 மில்லியன் நுகர்வு செல்கள் உள்ளன. இந்த சக்தி மனிதனை விட பல மடங்கு அதிகம்.
சில நாய்கள் புற்றுநோய் பாதித்த மனிதர்களை கூட கண்டறிய முடியும். நாய்களுக்கு கெட்ட சக்திகளை உணர முடியும்.
அது எதிர்மறை ஆற்றலை உணர்கின்றன. அசாதாரணமான ஓசை சத்தங்கள் தொலைதூரத்தில் நடக்கும் அதிர்வுகளை கூட நாயால் எளிதில் கண்டுபிடிக்க முடியும்.
அதை வெளிப்படுத்த தான் நாய்கள் குறைக்கின்றன. முன்பின் தெரியாத நபர்களாக இருந்தால் நமக்கு எச்சரிக்கை செய்யும் விதத்தில் நாய்கள் குறைக்கின்றன. நாய்களை யாராவது தாக்கினால் அவை மோப்ப சக்தி மூலம் அவரை நினைவில் வைத்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டவை.