சுயசரிதையாய் தொடங்கி வழிகாட்டியாய் மாறிய ‘From Footboard to Footprints’ புத்தகம்!

சுயசரிதை எனத் தொடங்கி வாழ்க்கை வழிகாட்டியாக விரியும் From Footboard to Footprints புத்தகத்தின் விமர்சனம்!
From Footboard to Footprints புத்தகத்தின் விமர்சனம்
From Footboard to Footprints புத்தகத்தின் விமர்சனம்Image credit: Chatgpt
ராமன். செல்வராஜ்

கோவில் நகரம் குடத்தையில் வசித்து வரும் இவர் விலங்கியலில் முதுகலை பட்டமும், வெகுஜன தொடர்பு மற்றும் பத்திரிகை துறையில் முதுகலை பட்டமும் பெற்றவர். தற்சமயம் EXNORA , 'உலக தமிழர் அறக்கட்டளை' போன்ற அமைப்புகளில் தன் பங்கை ஆற்றி வருகிறார். இவரது இலக்கியத் தொடர்பு என்பது ஒரு கவிதை மூலமாக 'கவிநானூறு' என்கிற இணையதளத்தில் தொடங்கியது. தொடர்ந்து கட்டுரைகளும் வேறுசில தளங்களில் வெளியாகின. செப்டம்பர் -17- 2025 முதல் கல்கி குழுமத்துக்காக சிறுகதைகள், தத்துவங்கள், ஆன்மீக புரிதல்கள் ஆகியவற்றை எழுதி, பகிர்ந்து வருகிறார். இவரது கதை கட்டுரைகளை கல்கி ஆன்லைன் இதழ்களிலும் Motivation, பசுமை/ சுற்றுச்சூழல், மற்றும் கலை கலாச்சாரம், ஆன்மீகம், தத்துவம் ஆகிய பகுதிகளிலும் காணலாம்.

Updated on: 
Kalki Strip
Kalki Strip

சாதாரண சுயசரிதை என நினைத்துப் படிக்கத் தொடங்கிய 'From Footboard to Footprints', சுயத்தை அறிந்து வெற்றி பெறுவது எப்படி என்பதைக் கற்றுக்கொடுக்கும் அற்புத வழிகாட்டியாக விரிகிறது. அலெக்ஸாண்டர் ஜேசுதாசனின் 35 ஆண்டு கால அறிவுத் தேடல் இது. தடைகளைத் தாண்டி தன்னைச் செதுக்கிக்கொண்ட அந்தப் பயணத்தின் சுவாரசியமான ரகசியங்களைத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்!

'From Footboard to Footprints' என்கிற தலைப்பில் அமேசானில் ஒரு புத்தகம் படிக்க கிடைத்தது.

இது ஒரு சுயசரிதை என்று நினைத்துதான் படிக்க ஆரம்பித்தேன். படிக்கப் படிக்கத்தான் தெரிந்தது இது 'சுயத்தை அறிந்து வெற்றி பெறுவது எப்படி?' என்பதை அறியும் ஒரு அற்புத வழிகாட்டி என்று.

ஒரு தனி மனிதன்தான் ஒரு மாற்றத்திற்கு வித்திடுகிறான். அவன்தான் பிறகு தலைவனாக ஆகிறான். அந்த வகையில், டாக்டர் அலெக்ஸாண்டர் ஜேசுதாசன் என்கிற ஆளுமை பற்றி தெரிந்து கொள்ள ஆரம்பித்தேன். அதன் சாராம்சத்தை உங்களுடன் பகிர்கிறேன்.

அதன் முழு விவரத்தை அமேசான் செயலியில் இ புக் அல்லது புத்தக வடிவில் வாசகர்கள் பெற முடியும் .

இதோ புத்தகத்துக்குள் நுழைவோம்....

பள்ளிப்படிப்பை செயின்ட் தாமஸ் மவுண்டில் முடித்து கல்லூரியை குருநானக் கல்லூரியில் படிக்க தொடங்கியபோதுதான் ஆசிரியருக்கு ஒரு உன்னதமான எண்ணம் வித்திட்டது.

அதாவது நாம் ஒரு விஞ்ஞானியாக, ஒரு அறிவியல் சாதகராக, ஆராய்ச்சியாளராக, கல்லூரி பேராசிரியராக, வளர வேண்டும் என்கிற ஒரு ஆசை.

அதற்கான உரம் வைத்து வளர்த்த தன் குருநானக் கல்லூரி ஆசிரியர்களை நினைவு கூறுகிறார் ஆசிரியர்.

இது ஏதோ மத பிரச்சார போதனையோ என்கிற ஐயப்பாடு வாசகர்களுக்கு ஏற்படலாம். ஆனால், நண்பர்களே அங்கேதான் ஆசிரியரின் (இல்லை ஒரு எழுத்தாளரின்) கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஒழுக்கம் வெளிப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
4F நெருக்கடி: வயலில் தொடங்கும் விலை உயர்வு சமையலறையில் முடிவது எப்படி?
From Footboard to Footprints புத்தகத்தின் விமர்சனம்

இந்தப் புத்தகம் பல நிகழ்வுகளை நமக்கு காட்சிகளாகத் தெரிவிக்கிறது. அதன்மூலம் ஆசிரியர் தன் குடும்பத்தில், சமூகத்தில், பொருளாதாரத்தில் ஏற்படும் பல சிக்கல்களை எப்படிச் சரியான சிந்தனை ஓட்டங்கள் மூலம், செயல்பாடுகள் மூலம் சரி செய்கிறார் என்பதை தெள்ளத் தெளிவாக விளக்குகிறார்.

இந்தப் புத்தகத்தை நிச்சயமாக ஒரு வழிகாட்டியாக சொல்லலாம். மேலும், ஆசிரியர் தம் படிப்பை அதாவது முதுகலை விலங்கியல் பட்டத்தைப் பெற 'எம்.சி.சி' யில் தொடங்குகிறார்.

அங்கேயே அவருக்கு ஆராய்ச்சி செய்யக்கூடிய டாக்டர் படிக்க வாய்ப்பு கிடைக்கிறது. அப்போது பல சிந்தனையாளர்கள், செயல்பாட்டாளர்கள், அறிஞர்கள் விஞ்ஞானிகள் என பலதரப்பட்ட மனிதர்களைச் சந்திக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கிறது.

ஒரு மனிதன் எப்படி செதுக்கப்படுகிறான் என்பதற்கு அவனுடைய தொடர்புகள் எந்த அளவுக்கு உதவுகின்றன என்பதை தெள்ளத் தெளிவாக இந்தப் புத்தகம் நமக்கு விளக்குகிறது.

இப்படி வளர்த்துவிட்ட அந்த 'எம்.சி.சி' யில் உதவி பேராசிரியராகத் தொடங்கி, பிறகு இணை பேராசிரியராக வளர்ந்து கடைசியில் 'விலங்கியல் இலாகா' வின் தலைவராகவும் மாறுகிறார்.

From Footboard to Footprints புத்தகத்தின் விமர்சனம்
From Footboard to Footprints புத்தகத்தின் விமர்சனம்Image credit: Chatgpt

கடைசியாக மெட்ராஸ் கிறிஸ்டின் காலேஜ் உயர்ந்த பொறுப்பான பிரின்சிபல் என்ற நிலைக்குத் தன்னை உயர்த்திக்கொள்கிறார்.

அதில் 12 வருட காலம் தொடர்ந்து இருந்த பெருமை இவருக்கு உண்டு. அவருடைய சேவை 35 வருடங்களாக 'எம்.எம்.சி'இல் இருந்து இருக்கிறது.

அவருடைய பயணம் ஒரு அறிவுத் தேடல். அந்த அறிவு வேட்கை எப்படி பல தடைகளைத் தாண்டி தன் பாதைகளை கண்டுகொண்டு, வளர்ந்து, வளர்த்த அமைப்பான 'எம்.சி.சி'க்கும் தன் பங்கை திறம்பட ஆற்றி ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் டாக்டர் அலெக்ஸாண்டர் ஜேசுதாசனுக்கு ஒரு சல்யூட்.

இதையும் படியுங்கள்:
‘மாண்புமிகு’ வெறும் வார்த்தையா? தொலைந்து போகும் அரசியல் நாகரிகம்!
From Footboard to Footprints புத்தகத்தின் விமர்சனம்

இந்தப் புத்தகத்தை படிக்கும்போது இது ஒரு மாயாஜால விந்தை (magical realism) ஒன்று தெரிகிறது. அதன்மூலம் நமக்கு ஒரு உண்மையும் தெரிகிறது. அதுதான் கடுமையான உழைப்பு.

'வல்லமை தாராயோ' என்று நாம் கடவுளை இறைஞ்சுகிறோம்.

அதைக் கண்டுகொண்டு அதனை தன்னுள் வளர்த்து, சீராட்டி, பாராட்டி வளர்க்க ஒரு உந்துதல் தேவைப்படும்.

அந்த உந்துதல் இந்தப் புத்தக வாசிப்பின் மூலம் கிடைக்கும் என்பதை என்னால் நிச்சயமாக சொல்ல முடியும்.

கீழ்க்கண்ட விவரங்களை உங்களுக்குக் கொடுக்கிறேன். அந்த தலைப்பின் மூலம் நீங்கள் அமேசானில் தேடி பயன்பெறுங்கள்.

இந்தப் புத்தகத்தின் தலைப்பு...

From Footboard to Footprints by Dr Alexander Jesudasan.. Alex unfiltered