குளோப் உருவாக்கத்திற்கு உயிர் கொடுத்த ரிச்சர்ட் ஹக்குல்யட்டின் வியக்கத்தக்க வரலாறு..!

15-ஆம் நூற்றாண்டில் குளோப்கள் எப்படி உருவாக்கப்பட்டன? புவியியல் வரைபடங்களின் பரிணாம வளர்ச்சிக்கு ரிச்சர்ட் ஹக்குல்யட் அளித்த பங்களிப்பை அறிந்துகொள்ளுங்கள்.
உலக உருண்டை | World Globe and Richard Hakluyt
உலக உருண்டை | World Globe and Richard HakluytImage Credit: AI Image
கலைமதி சிவகுரு

I am so thankful for kalki in my life. I am graduate from Holy Cross college in Nagercoil in the year 1983.I also tailaring work and make some bags, pouches. My writing were published in mangayarmalar, and Devathai, kudumbamalar with thinathanthi and received some prizes. Now I am writing in kalki publications. Cooking, Writing, reading anmigam books, playing chess are my hobbies.

Updated on: 
Kalki Strip
Kalki Strip

உலகத்தின் வடிவம் உருண்டையாக (பந்து போல) இருப்பதை பழங்காலத்திலேயே கிரேக்க, இந்திய, அரபு அறிஞர்கள் உணர்ந்திருந்தனர். ஆனால், அதனை 'உருண்டை மாதிரி உருவாக்கி காட்சி' கொடுத்தது பின்னர்தான் நடந்தது.

முதலாவது அறியப்பட்ட உலக உருண்டை:

கிமு 150-ஆம் ஆண்டில் கிரேக்க வானியலாளர் கிரேட்டஸ்டீஸ்தான்(Crates of Mallus) உலகின் முதலாவது உலக உருண்டையை உருவாக்கினார் என வரலாற்று குறிப்புகள் சொல்லுகின்றன.

பிரபலமான பழமையான குளோப்:

இன்று வரை இருக்கும் பழமையான குளோப் 'Erdapfel' (அர்த்தம்: Earth Apple) எனப்படும் ஒன்று. இதை மார்டின் பீஹைம் (Martin Behaim) என்ற ஜெர்மன் கடல் பயணி 1492-ஆம் ஆண்டு நூரெம்பெர்க், ஜெர்மனி நகரில் உருவாக்கினார். இதுதான் தற்போது உலகில் காணப்படும் மிக பழைய குளோப்.

இந்தியாவில் முகலாயர் காலத்தில் வானியல், புவியியல் ஆராய்ச்சிகளுக்காக உலோகத்தால் செய்யப்பட்ட குளோப்கள் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஜெய்ப்பூர் ஜந்தர் மந்தர் (Jantar Mantar) போன்ற இடங்களில் வானியல் கருவிகளுடன் கூடிய உருண்டைகள் இருந்தன.

ரிச்சர்ட் ஹக்குல்யட் குளோப் வரலாற்றில் எப்படி தாக்கம்செலுத்தினார்?

ஹக்குல்யட் என்பவர் ஆங்கில புவியியல் அறிஞர், ஆராய்ச்சியாளர், எழுத்தாளர். குறிப்பாக, 'The Principal Navigations, Voyages, Traffiques and Discoveries of the English Nation' என்ற பெரிய நூலை எழுதி, உலக ஆராய்ச்சிகள், பயணங்கள், கண்டுபிடிப்புகள் பற்றிய விவரங்களை தொகுத்தவர்.

ஹக்குல்யட் செய்த பணி:

ஆங்கிலக் கடல் ஆராய்ச்சிகளுக்கான தகவல்களை சேகரித்து வெளியிட்டவர். புதிய கண்டுபிடிப்புகள், உலக வரைபடங்கள், வணிக பாதைகள் பற்றிய ஆவணங்களை வெளியிட்டவர்.

இதையும் படியுங்கள்:
தேநீர் குடிப்பதால் பற்கள் நிறம் மாறுமா? - பல் நிபுணர் தரும் 'நச்சுனு 4' பதில்கள்!
உலக உருண்டை | World Globe and Richard Hakluyt

குளோப் தயாரிப்பவர்களுக்கு, வரைபடக்காரர்களுக்கு தகவல் ஆதாரம் அளித்தவர். குளோப் மற்றும் வரைபட வளர்ச்சிக்கு முக்கியமான பங்களிப்பு செய்த வரலாற்று ஆளுமை கொண்டவர்.

1. ஆராய்ச்சிகளின் பதிவுகள் குளோபுக்கான அடிப்படை தகவல்கள்:

ஹக்குல்யட் தனது வாழ்க்கை முழுவதும் ஆங்கிலக் கடல் பயணங்கள், வணிகப் பயணங்கள், புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றின் பதிவுகளை சேகரித்து தொகுத்தார். Navigations, Voyages, and Discoveries என்ற அவரது நூல்கள், அந்நாளைய புவியியல் வரைபடக்காரர்களுக்கும் குளோப் தயாரிப்பவர்களுக்கும் தரவுத்தளமாக இருந்தன.

உதாரணமாக: புதிய கடல் பாதைகள், கண்டங்கள், தீவுகள், துறைமுகங்கள் பற்றிய தகவல்கள் அவரது எழுத்துகளில் இருந்ததால், வரைபடக்காரர்கள் அவற்றை குளோப்பில் வரைந்தனர்.

World Globe and Richard Hakluyt
World Globe and Richard HakluytImage credit: AI Image

2. ஆராய்ச்சிகளுக்கு ஊக்கமளித்தல்:

ஹக்குல்யட் தனது எழுத்துகளால் ஆங்கில அரசர்களையும், கடல் பயணிகளையும் புதிய நிலங்களை ஆராய்ந்து, குடியேற்றம் செய்ய ஊக்குவித்தார். இதனால் பல ஆங்கிலக் கப்பல்கள் புதிய உலகப் பயணங்கள் மேற்கொண்டன. அந்தப் பயணங்களின் கண்டுபிடிப்புகள், புவியியல் குறிப்புகள், இடங்களின் பெயர்கள் எல்லாம் குளோப்புகளில் சேர்க்கப்பட்டன. அதாவது, ஹக்குல்யட் இல்லையென்றால் பல புது தகவல்கள் குளோப்பில் சேர முடியாது.

இதையும் படியுங்கள்:
பணத்தை அதிகமாக அச்சிட்டால் ஒரு நாடு பணக்கார நாடாக மாற முடியுமா?
உலக உருண்டை | World Globe and Richard Hakluyt

3. குளோப் தயாரிப்பவர்களுக் கான ஆதரவு:

16–17ஆம் நூற்றாண்டில் குளோப் தயாரிப்பாளர்கள் (கிராடியஸ், மெர்கேட்டர் போன்றோர்) புது தகவல்களை தேடிக் கொண்டிருந்தனர். ஹக்குல்யட்டின் ஆவணங்கள் அவர்களுக்கு நம்பகமான ஆதாரமாக இருந்தது. இதனால் குளோப்கள் பழைய தகவல்களிலிருந்து விலகி, அந்தக் காலத்தின் உண்மையான உலக வரைபடம் போல மாறின.

4. உலக பார்வையை மாற்றிய பங்கு:

ஹக்குல்யட்டின் எழுத்துகள் ஆங்கில மக்களிடம், 'உலகம் எவ்வளவு பெரிது', 'புதிய கண்டங்கள் எங்கே இருக்கின்றன' 'அங்குச் செல்லும் பாதைகள் என்ன' என்பதைக் கற்றுக் கொடுத்தன. இதனால் குளோப் வெறும் புவியியல் கருவி அல்லாமல், அரசியல், வணிக, ஆராய்ச்சி கருவியாக பார்க்கப்பட்டது.

எனவே, ஹக்குல்யட் குளோப் வரலாற்றில் மறைமுகமாக மிகப் பெரிய தாக்கம் செலுத்தியவராக கருதப்படுகிறார்.

logo
Kalki Online
kalkionline.com