ஜோக்ஸ்: '’தடையம் இல்லாம ஊழல் செய்வதில், நீங்க கில்லாடியாம்’’..!

Kalki Jokes
Pillai pic
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

தலைவரே உங்க பேரு கின்னஸில் வருதாம்..!  

எதுக்கு?  

ஆதாரம் தடையம் இல்லாமல், ஊழல் செய்வதில், நீங்கள் கில்லாடியாம்..!

******************************

நிறைய பேசினா கழுத்து வலிக்குது டாக்டர். 

வாய்தானே வலிக்கனும், அதெப்டி கழுத்து வலிக்குது?

என் பொண்டாட்டி பேசிட்டே இருக்கா... நான் தலைய ஆட்டிட்டே இருக்கவேண்டியதா இருக்கே..!

******************************  

என் படத்துல இதுவரை யாருமே சொல்லாத மெசேஜ் இருக்கு…

அட போய்யா... என் செல் ஃபோன்ல கூடத்தான் நானே படிக்காத மெசேஜ் 58 இருக்கு...”

******************************

என் தோள்கள் தினவெடுக்கின்றன தளபதியாரே! 

எதிரி அனுப்பிய போர் ஓலையை  எடுத்து  படித்துப் பாருங்கள் மன்னா, சரியாகிவிடும்.

******************************

இதையும் படியுங்கள்:
சிறுகதை; மீதி சுதந்திரம்!
Kalki Jokes

சாமிகிட்ட அடுத்த பிறவியில யார் உங்க மனைவியா வரணும்னு வேண்டிக்கிட்டீங்க? 

நாமளே மறுபடியும் கணவன் மனைவியா வரணும்னுதான் வேண்டிக்கிட்டேன். ஆனா, நான் மனைவியாவும், நீ கணவனாவும் இருக்கணும்னு பிரார்த்தனை பண்ணிக்கிட்டேன்! 

******************************

எனக்கும் உங்களுக்கும் சண்டைனு எதிர் வீட்டுக்காரர்கிட்ட சொன்னீங்களா? 

 அவருக்கும் அவரோட மனைவிக்கும் நடந்த பிரச்னைகளை அவர் சொல்லும்போது, நான் ஒண்ணு கூட சொல்லாட்டி நல்லா இருக்காதே சரசு?

******************************

உங்க மனைவி  உங்களை  அடிப்பாங்களா சார்?

அவுங்க நினைக்கிற மாதிரி நாம   நடந்துக்கிட்டா  நம்பளை எதுக்கு அடிக்கப்போறாங்க?  

logo
Kalki Online
kalkionline.com