"இயல்பாய் இரு": உங்கள் வாழ்க்கையை மாற்றும் ஜென் தத்துவத்தின் மந்திரம்!

அறிவுக்கும் ஞானத்திற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து, பிரபஞ்சத்தின் இயக்கத்தோடு இணைந்து வாழும் ரகசியத்தை அறியுங்கள்.
பிரபஞ்சம் | Universe
பிரபஞ்சம் | UniverseAI Image
Updated on
Kalki Strip
Kalki Strip

பிரபஞ்சம் - ஒரு அற்புதம்?

பிரபஞ்சத்தை புரிந்து கொள்ள அதுவாக மாறுவதனால் மட்டுமே சாத்தியம் - ஜென் பௌத்தம்.

எனக்கு எந்த குறையும் இல்லை; நன்றாக விழித்து எழுகிறேன்; என்னைச் சுற்றி நடக்கிற எல்லா விஷயங்களும் உண்மை தான்!!

எல்லாவற்றையும் அனுபவமாக தினமும் பார்க்கிறேன்!

என் கண் முன்னே பல நூறு எறும்புகள் இயங்கிக் கொண்டே இருக்கின்றன.

இந்த இயக்கம் தான் 'பிரபஞ்ச சக்தி'. அதற்கும் பசி உண்டு;  உணவு உண்டு; உறக்கம் உண்டு; எல்லாம் உண்டு.

நம்மை போல காலத்திற்குள் எல்லாவற்றையும் முடிக்க பாடுபடுகிறது. என்ன ஒரு விந்தை!

இந்த விந்தையை நான் சரியாக புரிந்து கொள்ள முயல்கிறேன்! அப்போது எனக்கு ஒரு 'அசரீதியாக' ஒரு பதில் வந்தது!

எல்லாவற்றையும் அறிவு கொண்டு அறிவது என்பது ஞானம்  அல்ல! அப்படியானால் அது எது என்று வினவினேன்? பதில் கிடைத்தது.

இயல்பாய் இரு! 

இருப்பதை உணர்!

ஒவ்வொரு கணமும்; உன்னை இயக்குவது ஒரு உணர்வு!அதனுடன் உறவாடு; உணர்ச்சிக்கு ஞானத்தில் இடமில்லை.

மாறாக எல்லாமாகவும் இருப்பது! எல்லாவற்றையும் அவ்வாறாகவே ஏற்றுக்கொள்வது. சரி அப்படி என்றால் உயிரற்ற மலை, மண், கடல், வானம் இவற்றை எப்படி புரிந்து கொள்வது?

சரியாக சொல்ல வேண்டுமானால் உனக்கு மட்டும் தான்  இயக்கம் உண்டு என்று நினைப்பது மடமை.

உன் இயக்கத்திற்கு காரணமாக இருப்பது தான் மலை. அதன் ஊடாக வருவது மழை. அதற்குக் காரணம் ஆக இருக்கின்றவை  வானம், காலம், வெளி எல்லாம்.

இவை தான் உன்னை உணர்வுப்பூர்வமாக இருக்க வைத்திருக்கிறது. 

உன்னுடைய அடையாளங்களை எப்பொழுது நீ மறக்க கற்றுக் கொள்கிறாயோ? அப்போதுதான் நீ மற்ற அடையாளங்களுடன் ஐக்கியமாக முடியும்.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கையின் மதிப்பை உணர்த்தும் 2 கதைகள்..!
பிரபஞ்சம் | Universe

பிரபஞ்சத்தில் உள்ள எல்லா படைப்புகளிடமும் நாம் நம் அடையாளங்களைத் துறந்து அவ்வாறாகவே  மாறுவது. 

இது உணர்வுபூர்வமாக சாத்தியம் என்கிறது - ஜென் பௌத்தம்.

அப்பொழுது அடையாளங்கள் அற்று ஒரு ஆனந்த பேரியக்கம் உன்னை வந்து அடையும்.

எல்லாம் ஆக மாறுவது என்பது....

உதாரணத்திற்கு நான் உங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேன். அதாவது எழுதிக் கொண்டிருக்கிறேன். இந்த எழுத்தின் மூலம் வாசகர்களாகிய உங்களுடன் உறவாடிக் கொண்டிருக்கிறேன். 

இதற்குக் காரணம் அறிவு!

ஞானம் அல்ல!

பிரபஞ்சம் | Old man meditate
பிரபஞ்சம் | Old man meditate AI Image

ஆனால், மாறாக 'தேடுவது' என்பதுதான் நம் அடையாளமாக எப்பொழுதுமே தொடர்ந்து கொண்டு இருக்க வேண்டும்.

அப்பொழுது தான் அந்த இயக்கம் முடிவில்லாத எங்கோ மலையில் பிறந்து பேரருவியாக, நதியாக மாறி தன் தொடர் பாய்ச்சல் மூலம் தன்னை மாற்றிக் கொள்ளாமல் இயங்கிக் கொண்டிருக்க முடியும்.

அப்படிப்பட்ட இயக்கமாக நீ மாறுவது தான் ஞானத்தின் உடைய முதலும் முடிவும் ஆகும்.

மாறாக உன் பாதையை மாற்றி குளமாகவும், குட்டையாகவும் நீ சேரும்போது உன்னுடைய சுயத்தை இழக்கிறாய்!

இதையும் படியுங்கள்:
குளோப் உருவாக்கத்திற்கு உயிர் கொடுத்த ரிச்சர்ட் ஹக்குல்யட்டின் வியக்கத்தக்க வரலாறு..!
பிரபஞ்சம் | Universe

அப்பொழுது உன்னுடைய இயல்பு தன்மை மாறி சுருங்குகிறது.

சுருங்குவது அல்ல ஞானம்!

விரிந்து கொண்டே வருவது!

அவ்வாறு விரிந்து கால வழியில் அன்பை பரப்பி அந்தப் பேரன்பு பேரானந்தமாக எப்பொழுதும் வெளிப்படும்.

அப்போது உன்னுடைய இயக்கத்திற்கு எந்த தடையும் இல்லை; நீ பிரபஞ்சத்தினுடைய ஒரு இயக்கமாகவே மாறிவிடுவாய்!!

தேவையற்ற அடையாளங்களின் பிடியிலிருந்து விடுபடுவதன் மூலம், உங்கள் வாழ்க்கை ஒரு குளத்தைப் போல தேங்கி நிற்காமல், நதியைப் போல தடையின்றிப் பாய்ந்து, புதிய வாய்ப்புகளையும் தெளிவான சிந்தனையையும் உங்களுக்கு வழங்கும்.

எல்லையற்ற இந்தத் தத்துவத்தைப் புரிந்துகொள்வதன் மூலம், வாழ்க்கையின் சவால்களைக் கண்டு அஞ்சாமல், பிரபஞ்ச இயக்கத்தின் ஒரு பகுதியாக உங்களை உணர்ந்து, எதைக் கண்டும் கலங்காத ஒரு பேரானந்த நிலையை நீங்கள் அடைவீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com