

"நீ அடித்தாயா?"
"ஆம் அடித்தேன்"
"எதற்காக அடித்தாய்?"
"குடிக்கிறாள் அடித்தேன்!"
"குடிப்பதால் அடிப்பதா? அதற்கு உனக்கு உரிமை இருக்கிறதா?"
"ஐயா, நான் கடுமையாக வேலை செய்கிறேன்; அதற்காக குடிக்கிறேன்."
"வேலை செய்வதற்கு ஒரு சாக்கு போக்கு சொல்லிக் கொண்டு இருக்கிறாய். எல்லாம் எனக்கு தெரியும்.... தினந்தோறும் அவள் சித்திரவதை படுவதை என்னிடம் பலமுறை சொல்லி அழுது இருக்கிறாள்.
உனக்கு தெரிய வாய்ப்பில்லை தான்! காரணம் உனக்கு குடிப்பது தான் ஒரே வேலை; ஆனால் உன்னுடைய மனைவி தினம் 7, 8 வீடுகளில் பாத்திரம், பண்டங்கள் சுத்தம் செய்து குடும்ப வருமானத்திற்காக போராடிக் கொண்டிருக்கிறாள்.
உன் மனைவி எங்கள் வீட்டில் வேலை செய்வது கூட உனக்கு தெரியாது. அவள் வருமானத்தில் தான் உங்கள் குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகளும் படித்துக் கொண்டிருப்பதும் எனக்கு தெரியும்.
அப்படி உழைத்து கொட்டுவதை நீ வேடிக்கை பார்த்துக்கொண்டு, அதற்கு ஒரு சித்தாந்தத்தை தேடி, அவள் குடிப்பதை நீ கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறாய்?
நீ கேள்வி கேட்க வேண்டும் என்று தான் அவள் குடிப்பது போல் நான்நடிக்க சொன்னேன்!? உனக்கு உண்மையிலேயே "ரோஷம்" இருக்கிறது; அது நல்லது தான்! நான் பாராட்டுகிறேன்!
உனக்காக தினமும் சாப்பிடுவதற்கு ஆட்டுக்கால் சூப், மீன் வறுவல், மட்டன் பிரியாணியும் செய்து கொண்டிருக்கும் அவளை கொஞ்சமாவது நினைத்துப் பார். அவள் குடும்பத்திற்காக பாடு படுகிறாள்."
ஒவ்வொரு வீட்டில் உள்ள குடும்ப பெண்களுடைய உழைப்பை மதிப்பிட்டு அவர்களுக்கு என்று ஒரு ஊதியத்தை கணவரிடம் இருந்து தனியாக பெற்று அதன்மூலம் அரசு உருவாக்கி உள்ள "பெண்கள் சிறப்பு சேமிப்பு கணக்கில்" மாதாமாதம் வைப்பு வைக்க வேண்டும் என்றும்; அதைப் பெற மனைவிமார்களுக்கு மட்டும் உரிமை இருக்கிறது என்கிற அரசு அறிக்கையை காட்டி இவ்வாறாக தன் தீர்ப்பை வழங்கினார் நீதிபதி......
இப்படி "பாசாங்கு" செய்வதற்கே உன்னுடைய "மானம்" போய்விட்டதாக சொல்கிறாய் நீ; தினமும் குடித்துவிட்டு மானங்கெட்ட தனமான நடந்து கொண்டிருப்பதை உன்னால் எப்படி ஜீரணிக்க முடிகிறது.
நீதிபதி குடிக்கும் மகனுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதமும்; அந்தத் தொகையை அவன் மனைவி பெயரில் அரசு வழிகாட்டல் படி நெறிப்படுத்த பட்ட வங்கி கணக்கில் வைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அப்படி கட்டாத பட்சத்தில் ஆறு மாதம் என்பது ஒரு வருடமாக அவனுடைய தண்டனை அதிகப்படுத்தப்படும்.
இந்த ஆறு மாதங்களில் அவனுடைய மனைவிக்கு சிறையிலேயே தங்கி பணியாற்ற வேலையும் கொடுக்கப்படுகிறது.
குடிமகனின் மனைவி நீதிபதியை பார்த்து கும்பிட்டு வணங்கினாள்.
குடி மகனோ! இனி குடிக்க மாட்டேன்! இது சத்திய மடி தங்கம்! என்று கெஞ்சினான்!.
எது எப்படியோ, அவர்களுடைய வாழ்க்கை நல்லபடியாக அமைய நீதிபதி ஒரு முன்னுதாரணமாக இருந்திருக்கிறார் என்பது எல்லா பத்திரிக்கைகளிலும் இன்று வந்த செய்தியாக இருக்கிறது.
************
Qatar Airways மூலமாக நியூயார்க்கில் இருந்து மும்பை மார்க்கமாக சென்னைக்கு சரியாக காலை 9.10amக்கு வந்து அடைந்தான் வசந்த். தன் தமிழ்நாட்டு பயணத்தைத் துல்லியமாகக் கணக்கிட்டு இருந்தான். ஏனென்றால் அவனுக்கு ஒவ்வொரு மணித்துளிகளும் பணம்.
பருந்து தன் 360 டிகிரி கண்களை உருட்டிக்கொண்டு எல்லா பக்கமும் எப்படி இறைக்காகப் பார்த்துக்கொண்டிருக்குமோ அப்படியான சந்தர்ப்பங்களைப் பார்த்துப் பழகி, அதுவே தொழிலாகி இன்று உலகத்திலேயே 50 பெரிய பணக்காரர் பட்டியலில் 41-வது இடத்தைப் பிடித்திருந்தான்.
அவனைப் பொறுத்தவரையில் காலம்தான் அவனை இந்த அளவிற்கு உயர்த்தி இருக்கிறது. அந்த அளவுக்குத் தன் மீதும், தன் தொழில் மீதும் அபார நம்பிக்கை.
இது அவனுடைய உலகம். அவன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் யாருடனும் பழகமாட்டான். நேர விரயம் என்பது அவருடைய அகராதியில் இருந்ததே இல்லை.
இன்று அவன் சென்னை வந்ததுகூட ஒரு வியாபாரத்திற்குத்தான். அது தன் தந்தை மூலம் தனக்கு வரவேண்டிய மவுண்ட் ரோட்டில் அமைந்துள்ள மூன்று ஹோட்டல்கள் மற்றும் தேனாம்பேட்டையில் உள்ள இரண்டு பெரிய ஜவுளி நிறுவனங்கள் மற்றும் சைதாப்பேட்டை உள்ள ஒரு மல்டிபிளக்ஸ் என எல்லாவற்றிற்கும் ஆன சொத்துகள் அவன் பெயரில் வருவதற்கு சென்னையில் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் சரியாக 10:30 மணிக்கு அவனுக்கான நேரங்கள் ஒதுக்கப்பட்டது.
ஆகவே, மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து அவனுடைய கார் சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள தாஜ் கிளப் ஹவுஸ் ஹோட்டலை நோக்கி பயணப்பட்டுக்கொண்டிருந்தது.
சிறிது இளைப்பாரி, அதன்பிறகு ரிஜிஸ்டர் ஆபீசுக்குச் செல்ல திட்டமிட்டு இருந்தான் .
அன்று நல்ல மழை. இதன் காரணமாக தெருக்களில் பல மரங்கள் சாய்ந்துகிடந்தன. அவை வெட்டப்பட்டு மராமத்துப் பணிகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, இவனுடைய கார் இடர்பாடுகளை மீறி ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் ரோடு வழியாக மவுண்ட் ரோடில் தான் ஓய்வெடுக்க இருந்த ஹோட்டலை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது.
அப்போது திடீரென்று பாதையில் ஏற்பட்ட ஒரு பள்ளம் எதிர்பாராதவிதமாக இவன் சென்ற நேரத்தில் காரை உள்வாங்கிக் கொண்டது. பிறகு ஏற்பட்ட மணல் சரிவு மற்றும் தண்ணீருடைய வீச்சு காருக்குள்ளும் மெதுவாக பாய்ந்து வந்தது. அலைபோல வந்து இறங்கிய தண்ணீர் ஆனது அவனுடைய காரை மெல்ல மெல்ல மூழ்கடித்தது...
அவன் தன்னுடைய கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தான் நேரமானது 9.27am, 9.28am ,9.29am ,9.30am, 9.31am.. ஒரு சில நிமிடங்களில் என்ன நடக்க கூடாதோ அது நடந்துவிட்டது...
இப்படியாக காலை 9.10 am இருந்து 9.31am அவன் சென்னையில் உயிர் வாழ்ந்த நிமிடங்கள் 21. அந்த 21 நிமிடங்களில் அவன் 21 சிந்தனைகளை உருவாக்கி, அதன்மூலம் பல திட்டங்களைச் செயல்படுத்தத் துணிந்தவன்.
இப்படியாக தந்தையார் இறந்தபோது அவருடைய உடலைப் பார்ப்பதற்குகூட நேரம் ஒதுக்கமுடியாமல் இருந்த ஒரு ஆத்மா காலத்தின் கொடூரமான கைகளில் மாட்டிக்கொண்ட 21 நிமிடங்களில்..