சிங்கப்பூர் லிட்டில் இண்டியாவில் கோலாகலத் தீபாவளி கொண்டாட்டம்!

சிங்கப்பூரில் அக்டோபர் மாதமே களைகட்டும் தீபாவளி கொண்டாட்டங்கள், லிட்டில் இண்டியா விளக்கு அலங்காரங்கள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் பற்றிய முழு விவரம்.
தீபாவளி |Singapore Deepawali
தீபாவளி | Singapore DeepawaliImage credit: Gemini AI
S CHANDRA MOULI

எஸ். சந்திர மௌலி (S Chandra Mouli) எஸ். சந்திர மௌலி கடந்த நாற்பதாண்டுகளாக கல்கி குழும பத்திரிகைகளில் எழுதிவரும் மூத்த பத்திரிகையாளர். கல்கி வெளியிட்ட பல்வேறு சிறப்பிதழ்கள், மற்றும் தீபாவளி மலர்கள், தொழில் மலர்கள், விடுமுறை மலர்களுக்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்தவர். 2008ல் கல்கி வெளியிட்ட “குஜராத் டுடே” சிறப்பிதகளுக்காக ஒரு வார காலம் குஜராத் முழுவதும் பயணித்து, குஜராத்தின் வளர்ச்சியை நேரில் கண்டு, எழுதியவர். சமூக அக்கறையோடு கல்கி மேற்கொண்ட “மாதம் ஒரு மாவட்டம்” திட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணித்து பங்களித்தவர். வாஜ்பாய், வி.பி.சிங் தொடங்கி மன்மோகன் சிங், நரேந்திர மோடி வரை ஏழு இந்தியப் பிரதமர்களை சந்தித்து பேட்டி கண்டவர். எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, என்.டி.ஆர், ஜோதி பாசு, வெங்கையா நாயுடு, நிர்மலா சீதாராமன், சிவாஜி கணேசன், ரஜினி காந்த், கமலாசன், ஜெமினிகணேசன், சூர்யா, மணிரத்னம், கிரிக்கெட்டர் ஸ்ரீக்காந்த், விக்கு வினாயகராம். உமையாள்புரம் சிவராமன், வயலின் கன்யாகுமரி, ஜெயகாந்தன், நாஞ்சில் நாடன், கவிஞர் வைரமுத்து, கவிஞர் மு.மேத்தா, நா. முத்துகுமார், சோ ராமசாமி என பல்துறைப் பிரபலங்களையும் பேட்டி கண்டு எழுதியவர். இயக்குனர் ஸ்ரீதர், நடிகர் நாகேஷ், ஓவியர் கோபுலு, இயக்குனர் எஸ்பி. முத்துராமன், திருமதி ஒய்,ஜி.பி. ஃபிலிம் நியூஸ் ஆனந்தன், நடிகர் ஏ.ஆர்.எஸ். மெஜிக் நிபுணர் லால் உள்ளிட்ட பலரது வாழ்க்கை அனுபவங்களை இவர் தொடராக எழுதி, அவை பின்னர் புத்தகங்களாக வெளியாகி உள்ளன. இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானபோது, இளைய தலைமுறையினருக்கு அமரர் கல்கி பன்முகச் சாதனை வாழ்க்கையை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் “கல்கி-பொன்னியின் செல்வர்” என்ற தலைப்பில் அவரது வாழ்க்கை வரலாற்றை சுவைபட எழுதியவர். பெண்சிசுக் கொலை தொடர்பான கட்டுரைக்கு “லாட்லி விருதும்”, ரோட்டரி சங்கத்தின் “சாதனை விருதும்” பெற்றவர். தற்போது madraspaper இணைய வார இதழில் “ஓரு குடும்பக் கதை: என்ற தலைப்பில் இந்திய அரசியலில் நேரு குடும்பத்தின் பங்களிப்பு குறித்த நெடுந்தொடர் ஒன்றை எழுதி வருகிறார். சோ குறித்த ஒரு புத்தகத்தை எழுதிக் கொண்டிருக்கிறார்.

Updated on: 
Kalki Strip
Kalki Strip

நம் ஊரில் இன்னும் தீபாவளி களைகட்டவில்லை என்றாலும், சிங்கப்பூரில் கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன! ராமாயணக் கருப்பொருளில் ஒளிரும் லிட்டில் இந்தியா வீதிகள், பெண்களுக்கான சிறப்புப் பயிலரங்குகள், 150 வெள்ளிப் பரிசுகளை அள்ளிக் கொடுக்கும் நிழற்படச் சவால் மற்றும் திரைக்கு வரவிருக்கும் 4 பிரம்மாண்டத் திரைப்படங்கள் என சிங்கப்பூர் தீபாவளி இந்த முறை எப்படிக் கோலாகலமாக மாறப் போகிறது தெரியுமா? வாருங்கள், முழு விவரங்களையும் படித்துத் தெரிந்து கொள்வோம்!

நம்ம ஊரிலேயே இன்னும் தீபாவளி சூடு பிடிக்கவில்லை. ஆனால், சிங்கப்பூர் தீபாவளிக் கொண்டாட்டங்களுக்குத் தயாராகிவிட்டது. இந்த வருடம் நவம்பர் எட்டாம் தேதி தீவாவளி. அதை ஒட்டி, சிங்கப்பூரில் தீபாவளிக் கொண்டாட்டங்கள் அக்டோபர் ஆரம்பத்தில் இருந்தே துவங்கிவிட்டன.

சிங்கப்பூரின் 'லிட்டில் இந்தியா' பகுதியில்தான் தீபாவளிக் கொண்டாட்டங்கள் மிகுந்த கோலாகலத்துடன் ஏற்பாடு செய்யப்படும். இந்த ஆண்டில் தீபாவளியையொட்டி லிட்டில் இந்தியாவில் அக்டோபர் முழுதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்த நிகழ்ச்சிகள் அக்டோபர் 10ஆம் தேதி முதல் நவம்பர் 7ஆம் தேதிவரை ஒவ்வொரு சனிக்கிழமையும் லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள இந்திய ஹெரிடேஜ் மையத்தில் நடக்க உள்ளன.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நுழைவுச்சீட்டு அவசியம். ஆனாலும், மூத்த குடிமக்களுக்கு அனுமதி இலவசம். அதே போல மாணவர்களுக்குக் கட்டணச் சலுகைகள் உண்டு.

இவ்வாண்டு புதிதாக ‘லிட்டில் இந்தியா நிழற்படச் சவால்’ என்ற நிகழ்ச்சி அறிமுகமாகிறது. இதற்காக லிட்டில் இந்தியாவில் உள்ள பத்து இடங்கள் ஒவ்வொரு வாரமும் மக்களுக்குச் சமூக ஊடகம் வழியாகத் தெரிவிக்கப்படும்.

இதையும் படியுங்கள்:
தீபாவளி எண்ணெய் குளியல்... தவறவிட்டால் என்ன ஆகும்? அறிவியலும் சாஸ்திரமும் சொல்லும் ரகசியம்!
தீபாவளி |Singapore Deepawali

பங்கேற்பாளர்கள் அந்த இடங்களுக்குச் சென்று புகைப்படங்கள் எடுத்து அனுப்ப்பி வைக்க வேண்டும். சிறந்த நிழற்படங்களுக்கு 150 சிங்கப்பூர் டாலர் மதிப்புள்ள பரிசுக் கூப்பன்கள் அளிக்கப்படும்.

பெண்களுக்கு பயனளிக்கும் விதமாக பித்தளை விளக்கு செதுக்குதல், களிமண் விளக்கு சாயம் தீட்டுதல், மசாலா கலவைப் பயிலரங்கு போன்ற நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இசை நிகழ்ச்சிகள், ‘பிக் பஸ்’ தீபாவளிச் சுற்றுலாக்கள், சிண்டாவின் ‘புரோஜெக்ட் கிவ்’ நடவடிக்கைகள், தீபாவளிச் சந்தை போன்ற அம்சங்களும் இடம்பெறவுள்ளன.

இவ்வாண்டிற்கான வண்ண விளக்கு அலங்காரங்கள், ராமாயணத்தில் ராமர் சீதையை இலங்கையிலிருந்து மீட்டு வந்த வெற்றியை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.

தீபாவளி | Singapore Deepawali
தீபாவளி | Singapore DeepawaliImage credit: Tamil Murasu

“கடந்த ஆண்டு உலகம் பல பூசல்களையும் சவால்களையும் சந்தித்துள்ளது. அவற்றைக் கடந்தும் வாழ்வில் நம்பிக்கை இருந்தால்தான் வெற்றியை நோக்கிச் செல்ல முடியும்.

தீபாவளி என்பது இருள் நீங்கி வெளிச்சமும் நம்பிக்கையும் பிறக்கும் ஒரு விழாவாகக் கருதப்படுகிறது. ஆகையால், சவால்களை நம்பிக்கையுடன் எதிர்நோக்கினால் வெற்றி கிட்டும் என்பதற்கான எடுத்துக்காட்டாக விளங்கும் ராமர் கதையை அலங்காரக் கருப்பொருளாக்கலாம் என எண்ணினோம்,” என்றார்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.

தீபாவளிக் கொண்டாட்டத்தின் கிளைகாம்சாக ‘தீபாவளித் திருவிழா’, சிங்கப்பூரின் பர்ச் சாலையில் சனிக்கிழமை (அக்டோபர் 3) மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடைபெறும். பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்.

இதையும் படியுங்கள்:
சுவிட்சர்லாந்திலும் தீ மிதி திருவிழாவா? நம்மூர் ராவண தகனத்தோடு ஒப்பிடப்படும் விசித்திர விழா!
தீபாவளி |Singapore Deepawali

தீபாவளி என்றால் புதுப்பட ரிலீஸ் இல்லாமலிருக்குமா? இந்த ஆண்டு சிங்கப்பூரில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நான்கு திரைப்படங்கள் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா – நஸ்ரியா ஜோடி நடிக்கும் ‘சீன். ’ சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகம், நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும் சாய் பல்லவி சீதையாகவும் யாஷ் ராவணனாகவும் நடித்துள்ள ராமாயணா, மனோஜ் நிர்மலா ஶ்ரீதரன் இயக்கத்தில் பிரபு தேவா நாயகனாக நடிக்கும் ‘மூன் வாக்’ ஆகியவேயே அந்த நான்கு படங்கள்.

சிங்கப்பூர் தீபாவளி கொண்டாட்டங்களின் முழுமையான வழிகாட்டியைக் கண்டறிவதன் மூலம், உலகளாவிய கலாச்சாரத் திருவிழாக்களின் புத்துணர்ச்சியையும், பண்டிகைக் கொண்டாட்டங்களுக்கான சிறந்த திட்டமிடல் யோசனைகளையும் முழுமையாகப் பெற்று பயனடையலாம்.

logo
Kalki Online
kalkionline.com