குறுந்தொடர்: சித்திரம் பேசுதடி – அத்தியாயம் 1

நினைவுகள் அழிந்தாலும் மாறாத நிஜக் காதலைச் சொல்லும் சோகமான கதை
Tamil serial story - Chithiram Pesuthadi
Tamil serial story - Chithiram PesuthadiImage credit: Chatgpt
முனைவர். த. சரவணக்குமார்

முனைவர். த. சரவணக்குமார் மதுரை தியாகராசர் கல்லூரியில் இயற்பியல் துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். நானோகிரிஸ்டல்கள் சார்ந்த ஆய்வில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இவர், சமீபத்தில் Q1 தரவரிசை இதழில் கிரிஸ்டல் DFT ஆய்வு தொடர்பான ஆய்வையும் வெளியிட்டுள்ளார். எளிய உபகரணங்கள் கொண்டு அறிவியல் கருத்துக்களை மாணவர்களுக்கு விளக்கி வருகிறார். அறிவியல் மட்டுமின்றி, தமிழ், இசை, இலக்கியம் ஆகிய துறைகளிலும் ஆர்வத்துடன் இயங்கி வருகிறார். பக்தி மற்றும் நாட்டுப்புறப் பாடகராகவும், கவிஞராகவும், பாடலாசிரியராகவும் திகழும் இவர், தனது சொந்தப் பாடல்களையும் நாட்டுப்புறப் பாடல்களையும் பல்வேறு நிகழ்வுகளில் பாடி வருகிறார். இவரது அறிவியல் தேடலும், தமிழின் மீதான பற்றும், இசை மற்றும் படைப்பாற்றலும் இணைந்து, அறிவியலையும் தமிழையும் ஒருங்கே முன்னெடுக்கும் பன்முக ஆளுமையாக அவரைத் தனித்துவப்படுத்துகின்றன.

Updated on: 
Kalki Strip
Kalki Strip

குறுந்தொடர்: சித்திரம் பேசுதடி – அத்தியாயம் 1

ஊருக்குள் நுழையும்போதே அந்தப் பழைய தியேட்டர் சுவர் கண்ணில் பட்டது. காலப்போக்கில் எத்தனையோ மழை பெய்து, சுண்ணாம்பு உரிந்து போயிருந்தாலும், அந்தச் சுவரைப் பார்க்கும்போது எனக்குச் சினிமா படங்கள் ஞாபகத்திற்கு வரவில்லை... ‘வர்ணச் சித்திர’ துரைசாமி மாமாதான் நினைவுக்கு வந்தார்.

'ஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணல்' என்பார்கள். ஆனால், கோணலாக இருக்கும் சுவரில்கூடக் கோபுரம் வரைந்து காட்டும் வித்தை துரைசாமி மாமாவுக்குக் கைவந்த கலை. எழுபதுகளில் ஊரிலிருக்கும் பெரிய கடைகளின் விளம்பரப் பலகைகள், திருவிழாப் பந்தல்கள், சினிமா சுவரொட்டிகள் என எதுவென்றாலும் மாமாவின் தூரிகை படாவிட்டால் அது பூர்த்தியாகாது.

அவருக்கு ஒரு விசித்திரப் பழக்கம் உண்டு. எவ்வளவு பெரிய சித்திரமாக இருந்தாலும், அதன் வலது ஓரத்து மூலையில் சின்னதாக ஒரு 'வண்ணத்துப்பூச்சி' உருவத்தையும், அதற்குள் 'D + K' என்ற இரண்டு எழுத்துக்களையும் மெல்லிய கோட்டால் வரைந்து வைப்பார்.

"சுவரில் வரைஞ்சாலும் சுள்ளியில் வரைஞ்சாலும் ஆளு அடையாளம் வேணுமில்லையா?" என்று ஊரார்கள் கேலி பேசுவார்கள்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com