

அப்போது நான் 'புனர்ஜென்மம்' என்கிற மாத சஞ்சிகையில் நிருபராகப் பணியாற்றிக்கொண்டிருந்த சமயம். எனக்கான ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. அது திருநெல்வேலியில் இருக்கும் திரு 'காத்தாடி கணேஷ்' என்கிற எழுத்தாளரைப்பற்றி ஒரு நேர்காணல்...
அப்போது நான் நினைக்கவில்லை அவர் பிற்காலத்தில் ‘சாகித்திய அகாதமி’ மற்றும் pulitzer prize வரை சென்று தன் புகழை தமிழ்நாட்டுக்காக வழங்க இருக்கிறார் என்பது. காரணம் என்னுடைய ஞானம் அவ்வளவே!
இப்போது அவருக்கு வயது 65. அவருடைய 30 வருடத்திற்கு முன்பான நேர்காணலைக் காண்போம்...
நான்: உங்களுடைய famous lines in prime stories 'வாழ்க்கை என்பது அபத்தமாக இருக்கலாம். அந்த அபத்தத்திலும் ஒரு அர்த்தம் இருக்கத்தான் செய்யும்.' சற்று விரிவாக விளக்கவும்!?
காத்தாடி: வாழ்க்கையை வாழ்ந்து விடு. வாழ்க்கையை அனுபவமாக ஆக்கிக்கொள். அந்த அனுபவத்திலிருந்து நல்ல சிந்தனை ஆனது உருவாகட்டும். அந்தச் சிந்தனை உன் செயலைச் செதுக்கும். அப்படியான ஒரு செதுக்கப்பட்ட வாழ்க்கை நீ தேர்ந்தெடுத்த வழியைச் செம்மைப்படுத்தும். அந்த வழியானது முடிவற்றது. அது ஒரு தெளிந்த நீரோடை போன்றது. அது ஒரு 'இயக்கம்'. அதைக் 'கண்டுகொள்'. இதுவே 'பொருள்கோள்யியல்' ஆகும்".
நான்: கடவுள் இருக்கிறாரா... இல்லையா?
காத்தாடி : என்னிடத்தில் வரும் உண்மையான பதில் இதுதான். கடவுள் இருக்கட்டும். அவர் 'அவர்' வேலையை செய்யட்டும். நாம் இந்த பிரபஞ்சத்தில் இருக்கிறோம் என்று உணர்ந்து நம் வேலையை நாம் செய்வோம். அதற்கான வழியை நம் அனுபவத்திலிருந்து பெற்றுக்கொண்டு மீண்டும் அதை செம்மைப்படுத்த ஒரு சிறந்த வழியை அவர் மூலம் கண்டு அடைவோம்.
நான்: மறுபிறவி இருக்கிறதா? காரணம் காரியம் பற்றி நிறைய எழுதி இருக்கிறீர்கள்.. எங்களை மாதிரி எளியவர்களுக்கு உங்களுடைய பதில் ?
காத்தாடி: என்னைப் பொருத்தமட்டில் நாம் வாழ்வதே முதலும் முடியுமான ஒரு எல்லையற்ற வாழ்க்கை. ஒரு கருவியாகப் பயன்படுகிறோம். அந்தக் கருவியானது இரக்கம், இனிமை, இன்சொல் இவற்றினால் உருவாக்கப்பட்டால் நம் வாழ்க்கையானது நாம் வாழும்போதே பல பிறவிகளை எடுத்து பிறருடைய வாழ்க்கையை நம்முடையதாக ஆக்கிக்கொண்டு வாழ்ந்துவிடலாம்.
இப்போது எனக்கு வயது 55 ஐயாவுக்கு 65. மீண்டும் சந்தித்தேன்; உரையாட வாய்ப்பு கிடைத்தது .
ஒரு சுயசரிதை எழுதிக்கொண்டிருக்கிறார். அதைப்பற்றி விவாதம் தொடங்கியது...
"பேரு என்னவோ காத்தாடி கணேசன்னு சொல்றான். கதை எழுதுகிறான். இவனை நம்பி வாக்குபட்டா உன் வாழ்க்கை என்ன ஆவது ?" - இப்படி கேட்டவர்கள்தான் அதிகம் நித்யாவை நோக்கி.....
எல்லோரையும்விட அவளுடைய பெற்றோர்கள் அவள்மீது நம்பிக்கை வைத்தார்கள். காரணம் அவள் படித்தது காத்தாடியை அல்ல. மாறாக காத்தாடிக்கு உயிர் கொடுத்து, பறக்கவிட்டு, உல்லாசமாக உலாவவிட்ட அந்த ஆன்மாவான கணேஷைத்தான்!!
அவருக்கென்று குடும்பம் உண்டு. அவருடைய மகனும், மகளும் இப்போது கல்யாணமாகி அமெரிக்காவில் நல்லபடியாக வாழ்வுரிமை பெற்று வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். அவருடைய மனைவி 'நித்யா' சென்னை செயலகத்தில் செய்தி தொடர்பு துறையில் முக்கிய பங்காற்றிக் கொண்டிருக்கிறார்.
இப்படியாக இவருடைய வருமானத்தில் தான் எல்லோருக்குமான ஒரு இடம் இவரால் கிடைத்தது என்பதை அந்தக் குடும்பம் எப்போதுமே மறந்ததில்லை.
இப்படியாக வாழ்க்கை 30 ஆண்டுகள் ஓடி உருண்டுவிட்டன.
அவருடைய பாணி என்பது ஒவ்வொரு வாரமும் இரண்டு நாட்கள் சென்னை கன்னிமாரா மற்றும் அண்ணா நூற்றாண்டு நூல் நிலையத்திலும் படிப்பதற்காகச் செல்வார்.
வாரம் ஒரு நாள் வாசகர்களைச் சந்திப்பதற்காக, உரையாடுவதற்காக அவர் பயன்படுத்திக்கொள்வார்.
இதன்மூலம் அவருக்கு ஒரு சமுதாயப்புரிதலும் மனிதர்களுடைய மாண்பையும் அவரால் எளிதாக புரிந்துகொள்ள முடிந்தது. மீதமுள்ள நான்கு நாட்களில் இரண்டு நாட்கள் எழுத்துப் பணியில் ஈடுபடுவது என்பது இன்றியமையாதாக இருந்தது.
அவர் குடும்பத்திற்காக செலவிட்ட கணங்கள் என்பது வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே!
இதன்மூலம் அவர் தன் குடும்பத்தையும் அதன்மூலம் தன்னை வளர்த்தெடுத்த சமுதாயத்தின் மீதும் ஒரு தீராத பற்றுகொண்டிருந்தார் என்பதை தமிழ் சமுதாயம் நன்கு அறியும்.
ஒரு நாள் அவருக்கு அவருடைய பிள்ளைகள் அன்போடு அழைப்பு விடுத்தனர்.
30 வருடங்களாக உங்களுடைய உடல், பொருள், ஆவி எல்லாவற்றையும் எங்களுக்காக செலவழித்தீர்கள். மிஞ்சிய நாட்களை நீங்கள் எங்களுடன் சேர்ந்து வாழ நாங்கள் இருவரும் அழைக்கிறோம் .
இதற்கு எந்தப் பரபரப்பையும் காட்டிக்கொள்ளாமல் தன் மகன் மற்றும் மகளுக்கு நல்வாழ்த்துகள் தெரிவித்துக்கொண்டு பதிலாக இவ்வாறு கூறியிருந்தார் .
'அதாவது நீ சொல்வது போன்று உன்னையும் உன் சகோதரனையும் வளர்த்து ஆளாக்கி படிக்க வைத்து நல்ல வேலை கிடைத்தவுடன் மணமுடித்து அனுப்பியதற்கு என்னுடன் சேர்ந்து என் துணையான நித்யாவுக்கும் பெரும் பங்கு இருக்கிறது. அவளுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது ஓய்வு பெற.
அவளுடைய பொறுப்பு அதிகமாக இருப்பதால் நான் என் எழுத்துப்பணியைக்கூட கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு அவளுக்காக வீட்டு வேலைகளை மிகவும் ஆனந்தமாகவும் மகிழ்ச்சியாகவும் செய்துகொண்டிருக்கிறேன்.
இப்போதுதான் என் வாழ்க்கை முழுமையை நோக்கி சென்றுகொண்டு இருப்பதாக உணர்கிறேன்.
ஆகவே, ஒரு வருடம் கழித்து நான் வருவதற்குள் நீங்களே ஒரு முறை வந்துவிட்டு செல்லலாம் என்பது எங்களுடைய அவா!
உங்களுடைய வாழ்க்கையில் நாங்கள் மதிப்பு கூட்டலை ஏற்படுத்தி இருக்கிறோம் என்பதே எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.
வாருங்கள்! வரவேற்கிறோம்! விரைவில் பிறகு வருகிறோம்!
இப்படிக்கு
காத்தாடி கணேஷ்
பின்னோட்டமாக நான் அவரைப் பற்றி புரிந்துகொண்டது….
வாழ்க்கை என்கிற பொருளை (அர்த்தத்தை) நாம் மற்றவரிடம் பகிர்ந்துகொள்ள எண்ணங்கள் தேவைப்படுகிறது. அந்த எண்ணங்களே எழுத்தாக மாறுகிறது. அவை சித்திரங்கள் ஆகவும், ஓவியங்களாகவும், சிற்பங்களாகவும், கலைகளாகவும், இசையாகவும், பாடலாகவும் மாறி நம் கலாச்சாரம், பண்பாட்டை உருவாக்குகின்றன.
பக்தி இயக்கம் இதற்கு ஒரு சான்று.
இதைத்தான் அவர் இப்போது எழுதிக்கொண்டிருக்கும் நூலான 'பொருள் கொள் இயல்' என்ற தத்துவத்தில் முன்னிலைப்படுத்தி ஒரு மகாதான படைப்பாக (magnus opus) மாற்றிக் கொண்டிருக்கிறேன் என்று கூறினார்.
'காத்தாடி கணேஷ்' உடைய வாழ்க்கை என்பது "ஒரு காத்தாடி காற்றில் நளினமாக பறந்து, காற்றின் திசைக்கு ஏற்ப தன் வழியை மாற்றிக்கொண்டே இருக்கும்".
அந்த வகையில் மக்களுடைய நாடி நரம்புகளை அறிந்து அவர்கள் வழியில் சென்று அவர்களுக்கான வழியை அவர்களே தேர்ந்தெடுத்துகொள்வதற்கான ஒரு எழுத்துமுறையை கண்டுபிடித்தவர் என்பதில் தமிழர்களாகிய நாம் பெருமை கொள்ளலாம்.
அவர் 'புனர்ஜென்மமாக' கருதுவது - தன்னுடைய 'எழுத்துலகம் '- அது விதிக்கப்பட்டதாக நம்புகிறார்.