சிறுகதை: குள்ளப்பசு!

சனியை வென்ற குள்ளப் பசு: ஆன்மீக பந்தம் மற்றும் பசு பாதுகாப்பு பற்றிய சிறுகதை
சிறுகதை | Dwarf cow and a man
சிறுகதை | Dwarf cow and a manImage credit: Gemini AI
எம். ஆர். ஆனந்த்

I am a retired Bank officer. I have written articles in English for News Papers. I have written poems in English and Tamil 

Updated on: 
Kalki Strip
Kalki Strip

ஆண்டு 2004 'உனக்கு சனி திசையோடு ஏழரை சனியும் ஆரம்பிக்கிறது. இனி சோதனை மேல் சோதனைதான். கோயிலே கதி என்று கிடந்தாலும் உன்னை சனி விடப்போவதில்லை ' என்று பயமுறுத்தி போய்விட்டான் ஒரு அமெச்சூர் ஜோசியன்.

என்ன செய்வதென்றே தெரியவில்லை. நடந்து முடிந்த சுப கிரகமான குரு தசையில் விழுந்த கசை அடியின் அடையாளமே போன பாடில்லை. வந்துவிட்டார் சாட்டையுடன் சனி. அப்போதுதான் நான் பசுக்களின் மகிமைகளைப் பற்றி ஒரு பெரியவரிடம் கேள்விப்பட்டேன். ''பசுக்களுக்கு கொடு வெல்லம்... பசுக்கு கொடு வாழை பழம். எவ்வளவு முடியுமோ அவ்வளவு. ஒன்றும் செய்யாது ஏழரை சனி.''

சுட்டெரிக்கும் வெயில் போய் பொழியும் உன் மேல் பனி விடாமல் 19 வருட சனி திசை காலம் முழுதும் அருகில் உள்ள பெருமாள் கோயில் வளாகத்தில் இருக்கும் பசுக்களுக்கு வாழை பழங்கள் வெல்லம் கலந்த கோதுமாவு உருண்டைகள் கொடுத்தேன் அப்போது ஆறு பசுக்கள் இருந்தன.

அதில் ஒன்றுதான் குள்ளப்பசு. அதுவரை அத்தனை குள்ளப்பசுவை நான் பார்த்ததில்லை... முதலில் நான் அவளை கண்ணுகுட்டின்னுதான் நினைத்தேன். சிறிய தலை, சிறிய கொம்புகள். என் மகனுக்கு அவளை ரொம்பவும் பிடித்து போய்விட்டது. வாங்கி வந்த பழத்தில் பெரும் பங்கை கொடுத்துவிடுவான் இந்தக் குள்ளிக்கு. வாரம் இரண்டு நாட்கள் அதாவது சனி செவ்வாய் கிழமைகளில் போய் வருவோம்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: நிர்வாக இயக்குநர்!
சிறுகதை | Dwarf cow and a man

பழ வியாபாரி மிகவும் நல்ல மனிதர். நான் வாங்கும் இரண்டு கிலோ பழங்களுக்கு மேல் கொசுறாக நான்கு பழம் போட்டுத் தருவார். இப்படியே நகர்ந்தது. நாட்கள், வாரங்கள், மாதங்கள், வருடங்கள்... சனியின் பிடியிலிருந்து விடுபடும் நாளும் வந்தது. பசுக்களுக்கு பழம் கொடுப்பதும் நின்றது.

ஓய்வு பெற்றபின் மதுராவுக்கு குடிபெயர்ந்தேன். இதய அறுவைச் சிகிச்சைக்காக சென்னை வரவேண்டியதாகிவிட்டது. சென்னை வந்ததும் நான் செய்த முதல் வேலை... பெருமாள் கோயில் பசுக்களைப் பார்க்கப் போனது. ஆறு பசுக்கள் 12 பசுக்களாக பெருகிவிட்டிருந்தது. அன்று கன்று குட்டிகளாக இருந்ததெல்லாம் தங்கள் தங்கள் கன்று குட்டிகளோடு நின்றுகொண்டிருந்தன.

பால் கறப்பவர் வந்தார். ''எங்கே அந்த குள்ளப்பசு இறந்துவிட்டதா?'' என்று கவலையுடன் கேட்டேன்.

''அதுவா இன்னும் உயிரோடுதான் இருக்கு. ஆனால் இங்கில்லை. கொண்டு சேர்த்து விட்டோம் அநாதை பசுக்கள் பராமரிக்கும் இடத்தில...''

''ஏன் அப்படி செய்தீர்கள்? அதனால் ஒரு லாபமும் இல்லை சார். அது ஒரு சாணி மாடு ஒரு பொட்டு பால்கூட கறக்காது. நாங்களும் பொறுத்து பார்த்தோம். வயசு ஆயிடுது 20. இன்னும் போக மறுக்குது.''

சிறுகதை | Dwarf cow and a man
சிறுகதை | Dwarf cow and a manImage credit: Gemini AI

என் மகனுக்கு மிகவும் வருத்தம் ஆகிவிட்டது. 'மனித தாய்மார்கள்தான் முதியோர் இல்லத்துக்கு தள்ளப்படுகிறார்கள். பசுக்களுக்குமா அந்தக் கதி... மாட்டுக்காரனிடம் பேசி என்ன பிரயோஜனம்?' என்று பேசப் போனேன் கோயில் அலுவலகருடன்.

அவர் அதற்கு மேல். ''சார் நீங்கள் நிர்வாகத்தில் தலையிட வேண்டாம்...'' சொல்லிவிட்டார் முகத்தில் அடித்தாற்போல். ''அது சரி... அந்தக் குள்ளப்பசுவைச் சேர்த்திருக்கும் முற்றின பசுக்கள் சரணாலயத்தின் விலாசமாவது கொடுங்கள்?'' என்று வாங்கிக்கொண்டேன்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: நிர்வாக இயக்குநர்!
சிறுகதை | Dwarf cow and a man

நாங்கள் விவரித்த உடனே காப்பக ஊழியருக்கு புரிந்துவிட்டது எந்தப் பசுவென்று. ஓரமாய் சோகமாய் நின்றுகொண்டிருந்தது குள்ள பசு. அதன் அருகில் நின்றதுதான் தாமதம் அதன் முகத்தில் வந்தது ஒரு பதட்டம்.. மறக்கவில்லை என்னை. 19 வருட பழக்கமாயிற்றே. விசாரித்தபோது சொன்னார் மேனேஜர், ''அவள் உடம்புக்கு ஒரு குறையும் இல்லை. 22 வயதிலும் ஆரோக்கியயமாத்தான் இருக்கா.''

நாங்கள் கிளம்பும்போது ‘திரும்பவும் எப்போ வருவீங்க?" என்று குள்ளப்பசு பார்வையால் கேட்பதுபோல பார்த்தது...

logo
Kalki Online
kalkionline.com