சிறுகதை: அவளா சொன்னாள்?

தன் மகளாக வளர்த்தவளின் ஒற்றை வார்த்தை ஒரு மனிதனின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் கேள்விக்குள்ளாக்கியது பற்றிய சிறுகதை
சிறுகதை | Old man
சிறுகதை | Old manImage credit: Gemini AI

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 
Kalki Strip
Kalki Strip

வாழ்வில் எப்போதாவது சுனாமி வரலாம். ஆனால் சுனாமியே அன்றாட வாழ்வாகிட்டால்? அதுதான் என் நிலை. அவளைப் பற்றி சொல்வதற்குமுன் என்னைப்பற்றி சுய அறிமுகம் தேவை.

நான் மத்திய அரசு வேலையிலிருந்து முழு நேரம் புரட்சியாளராக சேர்ந்தேன். மக்களை விழிப்படையச் செய்வதன் மூலம் புரட்சி வரலாம் என்றும் நம்பினேன். அதனால்தான் என் வேலையை விட்டிருந்தேன். ஆனால், சில வருடங்களிலேயே அது சாத்தியமில்லை என்று தோன்றியது. என் அம்மாவின் நினைவுகள் ஒரு புறம். இன்னொரு புறம் போலி புரட்சியாளர்களின் அணுகுமுறை. நான் வீட்டுக்குத் திரும்பி வந்துவிட்டேன். எனக்கு வேலை இல்லை.

என் அண்ணனும் என்னைப்போல் முழு நேரப் புரட்சியாளராக ஆசைப்பட்டார். நான்தான் வேண்டாம் என்று தடுத்து நிறுத்திவிட்டேன். என் நல்ல காலம் அவர் கொடுத்த ராஜினாமா கடிதத்தை அவரது நண்பர் கொடுக்கவில்லை. இல்லையென்றால் எங்கள் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்திருக்கும். நான் வீட்டிற்கு வந்து ஏழு வாரத்திலேயே என் அண்ணனுக்குத் திருமணம் நடந்தது.

வாழ்க்கை என்பது சமரசம் அல்ல. ஆனால், வாழ்க்கை என்பது சமரசம் இல்லாமலும் இல்லை. வைதீக முறைப்படி திருமணம் நடந்தது. ஒரே வருடத்தில் அவனுக்குப் பெண் குழந்தை பிறந்தது. நான் மகிழ்ச்சியில் துள்ளினேன். அவளுக்கு முத்தம் கொடுத்தேன்.

அதற்குபிறகு என் வாழ்கை முழுவதும் அவள்தான். அவளைக் கொஞ்சினேன். அவளுக்கு வித்யா என்று பெயர் வைத்தேன். வீட்டில் என் அம்மா இஷ்டப்படி புவனேஸ்வரி என்று பெயர் வைக்காமல் புவி என்று எல்லோரும் அழைத்தோம்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: கரையும் கடலும்!
சிறுகதை | Old man

என் வாழ்வில் புவிதான். அவளுக்காக நான் வாழ கற்றுக்கொண்டேன். அவளையே கவனித்துக்கொள்வதில் என் பங்கு முழுஅளவில் இருந்தது. எல்லாமே அவள்தான். எனக்குத் திருமணம் ஆகவில்லை. எனக்கு குழந்தை இல்லை. எனவே, என் குழந்தை என்றே அவளை வளர்த்தேன். அவளும் பெரியவள் ஆனாள்.

இப்பொழுதுக்கூட நினைவிருக்கிறது. அவளுக்குச் சின்ன வயதில் பிக்ஸ் வந்தது. அதற்கு மருந்தாக டைலாண்டின் சிரப் கொடுக்க வேண்டும். ஒரே முறை நங்கள் கோவையில் இருந்தபோது சிரப் கிடைக்கவில்லை. நான் கோவை மாநகரம் முழுக்க சுற்றி எப்படியோ சிரப் வாங்கிவிட்டேன்.

எனக்கு புவி என்றால் கொள்ளை உயிர். என் சகோதரிகூட சென்னையில் எனக்கு வேலை வாங்கி தருவதாகச் சொன்னார். ஆனால் நான் புவியை விட்டு வரமாட்டேன் என்று கூறிவிட்டேன். ஒரு தகப்பன் தன் குழந்தைமீது வைக்கும் பாசத்தைவிட சற்று அதிகமாகவே அவள் மீது பாசம் வைத்துவிட்டேன். அவளை பள்ளிக்கு விடுவது, அழைத்து வருவது, அவளுக்கு ஸ்னாக்ஸ் கொடுப்பது, அவளை தூங்க வைப்பது என சதா அவள் ஞாபகமாகவே வாழ்வை ஓட்டினேன். ஆனால், அவள் இன்று என்ன வார்த்தை சொன்னால் தெரியுமா?

சிறுகதை | Old man
சிறுகதை | Old man Image credit: Gemini AI

அவள் வளர்ந்துவிட்டாள். அவள் என்னை எப்போதும் 'டே' என்றே அழைப்பாள். நான் சித்தப்பா என்று எந்தவித மரியாதையையும் எதிர்பார்க்கவில்லை. அவள் என்னை எப்போதும் 'டே' அழைப்பதை ரசித்தேன். அவ்வளவு பிரியம் அவள்மீது. இப்போது அவள் பி.எஸ்.சி பயோ டெக்னாலஜி படித்துவிட்டாள். அவளுக்கு என்று ஒரு கேரக்டர் செட் ஆகிவிட்டது. அவள் என்னை வெறுக்கிறாள். அவள் அப்பாவுக்கு நான் பாரமாக இருப்பதாக கருதுகிறாள். இன்றும் எத்தனை வருடத்திற்கு என் அப்பா உன்னை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கேட்கிறாள்.

இதையெல்லாம்கூட பொறுத்துக்கொண்டேன். இன்று சோபா செட்டில் படுத்து டிவி பார்த்துக்கொண்டிருந்தேன். அவள் எனக்கு சோபா செட்தான் முக்கியம். படுத்துக்கொண்டு டிவி பார்க்காதே என்றாள். என்னால் முடியாது. எனக்கும் வயதாகிவிட்டது, கல்யாணம், குடும்பம், குழந்தை என்று எதையுமே நான் வாழ்வில் பார்க்கவில்லை. உன்னை மட்டுமே நினைத்து வாழ்ந்துவிட்டேன் என்றேன்.

'போடா பைத்தியக்கார... உனக்கு வாய் இருக்கிறதுதானே? உனக்கு கால் இருக்கிறதுதானே? என் அப்பாவை விட்டு செல்.. வீட்டை விட்டு வெளியே போடா நாயே...' என்று சொன்னாள்.

எனக்கு பகீர் என்றது.

வீட்டைவிட்டு வெளியே போடா நாயே!

என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

அவள் குழந்தை... அவள் தெரியாமல் பேசுகிறாள். இருந்தாலும் ஒரு போஸ்ட் கிராஜுவேட் பேசுகின்ற பேச்சு இல்லை.

எனக்கு ஷாக்!

வீட்டை விட்டு வெளிய போடா நாயே!

நான் பனகல் பார்க்கில் படுத்துக்கொண்டிருக்கிறேன். அடுத்து என்ன செய்வது?

இதையும் படியுங்கள்:
திகில் சிறுகதை: பொம்மை!
சிறுகதை | Old man

எனக்குத் தெரியவில்லை.

நான் என் குடும்பம், என் மனைவி, என் குழந்தை என்று யோசித்திருக்க வேண்டும். ஆனால் என்னால் முடியவில்லை. எல்லாமே புவி என்று இருந்துவிட்டேன்.

அவள் என்னைப் பார்த்து, வீட்டை விட்டு வெளியே போடா நாயே என்று சொல்லிவிட்டாள்....

என் குழந்தை என்மீது சேற்றை வாரி பூசிவிட்டது.

நான் எங்கே போவேன் ?

அடுத்த வேளை சோற்றுக்கு என்ன செய்வேன் ?

என்னை சிந்திக்க வைத்துவிட்டாள் என் புவி.

என் புவிக்கு நன்றி!

அவள் நல்லவள்!!

ஆனால் அவளா சொன்னாள்???

logo
Kalki Online
kalkionline.com