

“இந்த வேலைக்கா இவ்வளவு படிச்சேன்?” நொந்துகொண்டான் ராம்.
“ஏங்க இவ்வளவு அலுத்துக்கறீங்க”? மனைவி ரமா கேட்டு,
”நல்லாத்தானே ஆடிட்டருக்கு படிச்சிருக்கீங்க? நல்ல காலம் வரும். அதுவரை பொறுங்க...” ஆறுதலாய் பேசினாள்.
"எப்படி? என்னைவிட குறைவா படிச்சவனெல்லாம் கவர்மெ்ன்ட் ஜாப், பிஸினஸ்மேன், பெரிய கம்பெனிகளில் டைரக்டரா இருக்காங்க. என் தலைவிதி நல்லவிதமா வேலை அமையலை.”
“உங்க நண்பன் சீனு என்ன படிச்சிருக்கான்?”
“அவன் படிப்புக்கும் வேலைக்கும் சம்பந்தமில்லாத வேலை? சினிமாவில் ஹீரோ ஆகிவிட்டான். பணம் கொழிக்கிறான்.”
“அவனிடம் உதவி கேட்க வேண்டியதுதானே?”
“போடி இவளே. என்னைப் பார்த்தாலே கடுப்பாகிவிடுவான்.”
சிரித்தபடி “ஏங்க?” என்று ரமா கேட்க,
"அவன் ஸ்கூலில் ஒழுங்கா படிக்கலை. அவனைத் திட்டி, அவன் அப்பாவிடம் இவன் குடிகாரன்... தண்ணியடிக்கிறான்... என்று போட்டுக்கொடுத்தேன். அவன் அப்பா அவனைத்திட்டி, வெளுத்து வாங்கிவிட்டார். அடியும் அவமானமும் பொறுக்காமல் வீட்டைவிட்டு ஓடிட்டான். மூனு வருஷமா எங்கே இருக்கான்னு தெரியலை. திடீர்னு ஒரு நாள் அவன் ஹீரோவாய் நடிப்பதாய் சேதி வந்தது. எல்லோரும் ஆச்சரியப்பட, அவனைச் சொந்தம் கொண்டாட, எனக்கு மட்டும் குற்ற உணர்வு உறுத்த, அவன் என் நண்பன்னு சொல்லி்க்க முடியலை.”