சிறுகதை: மாற்றம்!

கணவன்-மனைவி இடையிலான சின்னச்சின்ன சண்டைகளும், புரிதலும் மாறும் விதம் பற்றிய சுவாரசியமான சிறுகதை.
சிறுகதை |  couple
சிறுகதை | coupleImage credit: Chatgpt

லட்சுமி ராமானுஜம், ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியை. கடந்த ஓராண்டாகச் சிறுகதைகள் எழுதி வருகிறார். வாழ்வின் நிதர்சனங்களையும், துன்பங்களை வென்று மீளும் நம்பிக்கையையும் மையமாகக் கொண்டு இவரது கதைகள் அமைகின்றன.

Updated on: 
Kalki strip
Kalki strip

அவசரம் அவசரமாக ஆபீஸ் கிளம்பிக்கொண்டிருந்த அனிரூத்,

"சிந்து இன்னிக்கு நான் ஈவினிங் வர லேட்டாகும். ஆபீஸிலேந்து என் ஃபிரண்ட் குமாரோட பர்த்டே பார்ட்டிக்குப் போயிட்டு வருவேன்."

சிந்து, "இன்னிக்குமா? இந்த வாரத்திலேயே ரெண்டு நாள் வெளியில போயாச்சு. வர வர நீங்க அடிக்கடி வெளியில போயிடறீங்க, இன்னிக்கு ஹரீஷ் ஸ்கூல்ல பேரன்ட்ஸ் டீச்சர்ஸ் மீட். நான்தான் பெர்மிஷன் போட்டுட்டு வரணும்." கோபமாக அவள் சொல்ல,

"நான் போன வாரமே உன்கிட்ட சொல்லிட்டேன் இந்தப் ப்ரோக்ராம் பத்தி..."

சிந்து, "இந்த வீட்டை எப்போவும் நான்தான் பார்த்துக்கணும். நீங்க பிரெண்டஸ், பார்ட்டின்னு நல்லா சுத்தலாம்."

அனிரூத், "சிந்து நீ பாட்டுக்கு உனக்குத் தோணினதைப் பேசாதே. நானும் வீட்டுக்கும், குழந்தைக்கும் தேவையானதைப் பார்த்துப் பார்த்துத்தான் செய்யறேன், தொணதொணன்னு ஏதாவது சொல்லிட்டு இருக்காதே..." முணுமுணுத்தவாறு வெளியில் சென்றான்.

சட்டென்று முகம் சுருங்கியவளாய், 'சே, என்ன இருந்தாலும் நம்ம மாமா- அத்தைகிட்ட இருக்கற அன்னியோன்யம் இவருக்கும் நமக்கும் கிடையாது. எப்போவும் வராது.’  

Loading content, please wait...