சிறுகதை: அஞ்சறைப்பெட்டி!

விஞ்ஞானியின் உழைப்பு காகித வடிவில் வடை சுடப் பயன்படுத்தப்பட்ட சோகமான நகைச்சுவையான சிறுகதை!
சிறுகதை | A injured man and woman
சிறுகதை | A injured man and womanImage credit: Gemini AI
Updated on
Kalki Strip
Kalki Strip

“இல்லை... இல்லை... இல்லை...” விஞ்ஞானி ரகு மொத்தமாய் மறுத்தார்.

“நீங்க யோசிச்சு சொன்னீங்களோ... இல்லை கண்டுபிடிச்ச ஃபார்முலாவைச் சொல்லாமல் மறைக்கிறீங்களோனு சந்தேகம் எங்களுக்கு” ப்ரஸ் மீட்டில் ரெண்டு, மூணு பேர் ஒருசேரக் கேட்டனர்.

“அப்படியெல்லாம் ஓவரா திங்க் பண்ணாதீங்க.. அதெல்லாம் நடக்கிறதில்லை. இம்ப்பாஸிபிள். அப்புறம்...?”

“ப்ரஸ் மீட்டை முடிக்கச் சொல்றீங்களா? உங்க அவசரம் எங்களைச் சந்தேகப்பட வைக்குது” ரோஷமாய் பேசினார் ஒரு நிருபர்.

“இது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா? இதனால் நாட்டுக்கே... உங்களாலே நாட்டுக்கே பெருமை... ஏன் மறைக்கறீங்க? பயமா? கவலையே படாதீங்க. நாங்க இருக்கோம்” தைரியம் கொடுத்தார்.

“உங்க லேபை பார்க்கலாமா?”

“ஒன்னுமில்லைனு சொல்றேன். என் வார்த்தையை மதிக்காத நீங்க எப்படி இப்படிக் கேட்கலாம்? நாட் அவாய்ட்...”

“உங்க பேச்சும் நடத்தையும் நீங்க பொய் சொல்வதை உறுதிப்படுத்தது...”

“என்னவேணா எழுதிக்கங்க...” விஞ்ஞானி ரகு எழுந்தார்.

“அவ்வளவுதானா?” ஓர் இளைய நிருபர் கேட்க,

சட்டென நின்ற ரகு “நீங்க யாரு? எந்தப் பத்திரிகை?”

“ஸ்டார் வேல்யூ...”

“அது சினிமா பத்திரிகை. நீங்க சிஐடி போலீஸ் விசு.”

சற்று தடுமாறிய விசு. “இது எனக்கே புதிய விஷயம். எப்படிக் கண்டுபிடிச்சீங்க?”

“வெளியே டீக்கடையில் போண்டாவும் டீயையும் முழுங்கிட்டு ஐடி கார்டை விட்டுட்டு வந்தாக்க.... கடைக்காரன் கொண்டு வந்து கொடுத்தான்.”

விசு பேசாமல் ஐடி கார்டை வாங்கிக்கொண்டான்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: தரையைத் தொடும் குதிகால்கள்!
சிறுகதை | A injured man and woman

ரகு “ஓகே.” என்று கிளம்ப, ”ஸார் ஒரு நிமிடம்“ என்றான் விசு

“என்னப்பா?”

“இந்தாங்க ஸேர்ச் வாரண்ட். உங்க லேபை சோதனையிட” என்று சொல்லும்முன் மூணு பேர் மஃப்டியில் வந்து சேர்ந்துகொண்டனர்.

ரகு "என்ன கொடுமை... இதெல்லாம் ரொம்ப அதிகம்...”

“எங்களுக்கு நம்பகமான தகவல் வந்திருக்கு. நீங்க ஆராய்ச்சியை முடிச்சிட்டீங்க. நோட்ஸ், ஃபார்முலா ரெண்டையும் பணக்கார வெளிநாட்டு கம்பெனிகளோட பேரம் பேசிக்கிட்டிரு்க்கீங்கனு. “

“இதெல்லாம் ரொம்ப தப்பு.”

“எது மூளையை வெளிநாட்டுக்கு விற்பது மட்டும் சரியா?”

“சரி... உங்க வேலையைப் பாருங்க...” என்ற ரகு கள்ளப்பார்வையில் சிரி்க்க,

“ஏன் சிரிக்கறீங்க?”

“ஒரு பேச்சுக்குச் சொல்றேன். ஒருவேளை நோட்ஸும் ஃபார்முலாவும் இருக்குனு வைச்சுக்கங்க. அது உங்க கையிலே கிடைச்சதுன்னே வைச்சுக்கங்க... என்ன புரியும் உங்களுக்கு?”

“உலகிலேயே நீங்கதான் புத்திசாலினு நினைப்போ?” சீற்றம் காட்டினான் விசு.

“தம்பிக்கு டப்டப்னு கோபம் வருது. இந்தாங்க டீ சாப்பிடுங்க” என்று பிளாஸ்கை நீட்ட, “வேணாம்” மறுத்தான் விசு

“ரோஷக்காரன்போல இருக்கு. தேவைனா குடியுங்க...” என்று அசால்டாய் சேரில் கால்மேல் கால் போட்டு அமர்ந்தார்.

சிறுகதை | Scientist
சிறுகதை | ScientistImage credit: Chatgpt

“மூன்று மணி நேரம் போராடி ஒன்றும் கிடைக்கலை” என்று விசு புலம்பியபடி வெளிவர, “சொன்னேனில்லையா? நீங்க போங்க... ஏதாவது கண்டுபிடிச்சால் சொல்லியனுப்பறேன்” கிண்டலடித்தார்.

ரகுவோடு வந்த கும்பல் கிளம்பவும், “எப்படி கண்டுபிடிக்க முடியும்? நான் நோட்ஸ், ஃபார்முலா ரெண்டையும் என் மனைவி மட்டுமே தொடக்கூடிய அஞ்சறைப் பெட்டியில் அல்லவா வைச்சிருக்கேன். சமையலறையில் தேடாமல் லேபில் தேடினால் கிடைக்குமா?" மனதில் கொக்கரித்தார்.

வீட்டிற்குள்.நுழையும்போதே “மைதிலி... மைதிலி” என்ற அழைத்தபடி வர, “என்னங்க?” என்று கேட்டபடி துணி உலர்த்திக்கொண்டிருக்க, “அஞ்சறைப் பெட்டியில் வைச்சிருந்த நோட்ஸ் ஃபார்முலா எங்கே?”

“எதுககு்?

“அதாவது ஹியூமன் பாடி ஸ்பேர் பார்ட்ஸ்... எது வேணாலும் இயற்கையாய் கிடைக்கற விஷயத்துக்கு.

இன்னும் பத்து வருடத்தில் இவையெல்லாம் கடைத்தெருவில் ஈஸியா கிடைக்கும். நம்ம ரெடிமேட் கடை மாதிரி”

“அப்படியா?”

”உனக்கு இவ்வளவு விஷயம் போதும். நோட்ஸையும் ஃபார்முலாவையும் கொண்டா...”

“அதைத்தானே வீட்டுக்கு வந்த எங்க அக்கா பிள்ளைகளுக்கு காலையில வடை மடிச்சுக் கொடுத்தேன்.”

இதையும் படியுங்கள்:
சிறுகதை: தர்மத்தின் சங்கடம்!
சிறுகதை | A injured man and woman

“என்னது? வடை மடிச்சுக் கொடுத்தியா? மண்டு மண்டு அது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா?” வெறியாய் கத்தினார் ரகு.

“அப்படின்னா அதை ஏன் அஞ்சறைப்பெட்டியில் வைக்கறீங்க? ஏங்க வேற பேப்பரில் எழுதிக்க முடியாதா?”

பேசும்போதே மயங்கி விழுந்தார் ரகு.

தண்ணி தெளிச்சு எழுப்ப, “எதிரே நிக்காதே. ஓடிடு.”

பயந்து போய் மைதிலி வெளியே செல்ல, காரை எடுத்து ரகு டென்ஷனோடு வேகமாக ஓட்ட, சரேலென திருப்பத்தில் எதிரே வந்த பிரேக் பிடிக்காத லாரியில் மோத, பலமாக அடிபட்டு மயங்கி கிடந்தார் ரகு.

டாக்டர்கள் குழு ரகுவை டெஸ்ட் பண்ணி ஆராய்ந்து, ”ஸாரி மேடம்... ரகுவின் ஒருகாலும், வயிறும் பலமாக அடிபட்டு செயலை இழந்துவிட்டன. எங்களால் ஒன்றும் செய்யமுடியாது. ட்ரீட்மென்டுக்குப் பிறகு படுத்த படுக்கையா கோமாவில் கிடப்பார்” என்று மைதிலியிடம் சொல்ல, ஓவென கத்தினாள் மைதிலி.

ரகுவின் வாய் மட்டும் “அஞ்சறைப்பெட்டி... அஞ்சறைப்பெட்டி...” என ஈனஸ்வரத்தில் முணுமுணுத்தது.

logo
Kalki Online
kalkionline.com