சிறுகதை: ‘கேலி’யை வேலியாக்கி...!

பள்ளியில் உருவ கேலிக்கு ஆளான மாணவன், தலைமை ஆசிரியரின் வழிகாட்டுதலில் கால்பந்தில் சாதனை படைத்து அனைவரையும் வியக்க வைத்த நெகிழ்ச்சி கதை.
தமிழ் கதை | headmaster and student
தமிழ் கதை | headmaster and studentAI Image
Updated on
Kalki Strip
Kalki Strip

தமிழ் ஆசிரியர் இன்னும் ஒரு வருடத்தில் ஓய்வுக்காக காத்திருக்கிறார். பெயர் தமிழ் இனியன். சுமார் 35 வருடங்கள் பள்ளி கல்வித்துறையில் அனுபவம். தலைமை ஆசிரியராக கடந்த 10 வருடங்களாக சிறந்த முறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஐந்துக்கும் மேற்பட்ட தமிழ்நாடு ஆசிரியர் விருதுகளையும், ஒருமுறை மத்திய அரசாங்கத்தின் சிறந்த ஆசிரியருக்கான விருதையும் பெற்றவர்.

அவர் தன் பணி நிறைவு முடிவதற்குள் இந்த மாணவ சமுதாயத்தை ஒரு நல்ல வரையறைக்குள் கொண்டு வர வேண்டும் என்பதற்காக பெரும்பாடு பட்டு வருகிறார்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை தமிழ் ஆசிரியருடைய வீட்டிற்கு பாரியினுடைய பெற்றோர்கள் வந்தார்கள். அவர்களுடைய கவலை எல்லாம் தன் மகனுடைய படிப்பு பற்றியது அல்ல. மாறாக அவன் உருவம் மற்றும் உயரம் மற்றும் நிறம் பற்றி சக மாணவர்கள் ‘உருவ கேலி’ செய்வதை தலைமை ஆசிரியரிடம் பக்குவமாகச் சொல்லி தன் மகனுக்கு ஒரு வழியைத் தேடி வந்தார்கள்.

இப்படியான சம்பவங்கள் பள்ளிகளில் தினமும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இவற்றுக்கான வழியைச் சிந்தித்து அதற்கான ஒரு பாதையை நாம் இருக்கும்போதே செய்துவிட வேண்டும் என்பது தமிழாசிரியரான தமிழ் இனியனுக்கு குறிக்கோளாக இருந்தது.

தலைமை ஆசிரியர் ஓய்வு பெறுவதற்கு ஒரு மாதம் முன்பாக எல்லா ஆசிரியர்களுக்கும் ஒரு விழா சம்பந்தப்பட்ட சுற்றறிக்கை வந்தது.

அந்த விழாவில் தலைமை ஆசிரியர் தமிழ் இனியன் உரையாற்றினார்...

இதையும் படியுங்கள்:
சிறுகதை: துணைவி..!
தமிழ் கதை | headmaster and student

'பாரியின் சிறந்த கால்பந்தாட்டம் மூலம் நம் பள்ளிக்குப் பேரும் புகழும் கிடைத்திருக்கிறது. மேலும், அந்தப் புகழினுடைய உயரத்திற்கு அவன் அடைந்ததாக கூறுவது அவனுடைய அவமானங்கள்.

அவமானங்களை ஏற்படுத்திய சக மாணவர்களை அவன் இதுவரை காட்டிக்கொடுக்காதது நாம் செய்த பாக்கியம் என்று கருத வேண்டும். இது 'சமுதாய குற்றம்' என்று தெரியாமல் சக மாணவர்கள், அவனுடைய உயரத்தையும், உருவத்தையும் , நிறத்தையும் கேலி செய்வதை ஒரு உந்துசத்தியாக கொண்டு சரியான முறையில் தன் நண்பர்களை ‘சொல்லால்' அடிப்பதைவிட ‘பந்தால்' அடித்து நம் பள்ளியை தமிழ்நாட்டிலேயே சிறந்த கால்பந்தாட்ட குழுவாக உருவாக்கி, மேலும் அதன் தலைமைப் பொறுப்பையும் ஏற்று, குழு மனப்பான்மையுடன் செயல்பட்டதால் நம் பள்ளி ஆனது இந்த ஆண்டில் மாநில அளவில் நடந்த ‘உதை பந்து’ போட்டியில் முதல் இலக்கை அடைந்தது.

ஆகவே நான் மாணவர்களைவிட, அவர்களைக் கண்காணிக்கும் ஆசிரியர்களுக்கு இந்தப் புத்தகத்தை காணிக்கையாக்குகிறேன்.

பாரியினுடைய அம்மா சொல்லும்போது.... "ஐயா என் மகன் இப்போது +1 வகுப்பு படிக்கிறான். தமிழிலும் மற்ற பாடங்களிலும் நன்றாக படிப்பதும் மட்டுமல்லாமல் தன்னிடம் சந்தேகம் கேட்கும் வரும் மாணவர்களுக்கும் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கும் ஒரு தோழமையோடுகூடிய ஒரு பண்பாட்டையும் அவன் வளர்த்து வந்திருக்கிறான். ஆனால், அவனுக்கு உள்ள ஒரே தாழ்வு மனப்பான்மை என்பது தன்னை தன் சக மாணவர்களே கேலி செய்வதுதான்..."

தமிழ் கதை | Headmaster and students
தமிழ் கதை | Headmaster and studentsAI Image

இப்போது அவனுடைய தந்தையார் பேச ஆரம்பித்தார்...

"இதனை நான் உங்களிடம் குறையாக முறையிடாமல் இதற்கு ஒரு தீர்வை நீங்கள் கண்டுபிடிப்பதன் மூலம் அது சமுதாயத்திற்கு பெரும் உதவியாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்.

பாரியினுடைய பெற்றோர்களைப் பாராட்டி அதற்கான தீர்வு நிச்சயம் உண்டு என்று கூறி விடை கொடுத்தார் ஆசிரியர். "உங்கள் மகனை நான் என் மாணவன் போல் பாதுகாத்து அவனுக்கான வழியை ஒரு வருடத்திற்குள் வழங்குகிறேன்" என்றார். "நீங்கள் என்னை சந்தித்ததையோ, முறையிட்டது பற்றியோ யாரிடமும் சொல்ல வேண்டாம்" என்றார்.

காலங்கள் முடிந்து அவன் +2 வில் முதல் மூன்று மாணவனாக பள்ளியில் தேர்ச்சி பெற்றான்.

இந்தப் புத்தகத்தை நீங்கள் படித்து, அதை உள்வாங்கி, மேம்பட்ட ஒழுக்கமான மாணவர் சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: அவசரகால தர்மம்!
தமிழ் கதை | headmaster and student

அந்த மாணவன் கடந்த இரண்டு வருடங்களாக இந்தப் பேச்சுக்கும், ஏச்சுக்கும் உள்ளானதைக் கவனிக்காத ‘சக ஆசிரியர்களை’ நான் வன்மையாக கண்டிக்கிறேன். அவனுடைய பெற்றோர்களுடைய அரவணைப்பு அதிகமாக இருந்ததால் அவன் தன் அவமானங்களை அஸ்திரமாகக்கொண்டு நமக்கெல்லாம் சவுக்கடி கொடுத்திருக்கிறான். இந்த சவுக்கடி ஆனது நமக்கு மாலைகளையும், மரியாதையையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. எனவே, இந்தத் தருணத்தில் அவனைக் கௌரவப்படுத்துவதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.

அவன் மரடானாவை தன் தலைவனாக கொண்டான். 1986இல் தன் அர்ஜென்டினா இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொண்டது. அப்போது மரடோனா நம் சக வீரர்களை பார்த்து 1982ல் falklands warsல் நம்முடைய குடும்பத்தையும் சமூகத்தையும் சின்னாபின்னமாக்கிய இங்கிலாந்தை நாம் உதைக்கும் உதைப்பந்து மூலம் ஒரு சரியான பாடத்தைப் புகட்ட வேண்டும் என்றார். இதுவே, அவர் அடித்த இரண்டு கோல்களில் ஒன்று கலையாகவும் மற்றொன்று காலத்தைக் கடந்தும் சொல்லப்படுகின்ற hands of God கோலாகவும் மாறியது."

எல்லா மாணவர்களும் எழுந்து நின்று "பாரி , பாரி" என்றும் முழக்கம் இட்டனர்.

அது எட்டு திசையிலும் பரவி பிறகு ஓய்ந்தபோது ஒரு மயான அமைதி ஏற்பட்டது.

பாரி தன் தலைமை ஆசிரியரிடம் தன் பள்ளிக்கான பதக்கத்தை பெற்றான் எல்லோரும் அழுதனர். அந்த அழுகையில் பள்ளியில் மாற்றம் வந்துவிட்டது என்பது தெளிவானது.

தமிழ் இனியன் எல்லோருக்கும் பரிசாக கொடுத்த அந்த குறிப்புகள்...

1. ஆசிரியரே தன்னைப் பயில வேண்டும்.

2. கல்வி என்பது தகவல் சொல்லித் தருவது அல்ல.

3. அறிவை, விழிப்புணர்வை, சுய-ஆராய்ச்சியை எழுப்புவதுதான் கல்வி.

4. ஆசிரியர் அதிகாரியாக அல்ல.

5. மாணவருடன் சேர்ந்து கற்றுக்கொள்பவர்தான் ஆசிரியர்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: ஒரு புது விடியல்!
தமிழ் கதை | headmaster and student

நடைமுறைப்படுத்தும் முக்கிய வழிகள்:

1. வகுப்பில் அச்சம், போட்டி, தண்டனை குறைத்து, திறந்த உரையாடலை ஊக்குவிக்க வேண்டும்.

2. பாடத்துடன் சேர்த்து மனநிலை, ஒழுக்கம், கவனம், கேள்வி எழுப்புதல் ஆகியவற்றையும் பயிற்றுவிக்க வேண்டும்.

3. இயற்கை, சூழல், அனுபவங்களைப் பயன்படுத்தி கற்றலை வாழ்வுடன் இணைக்க வேண்டும்

4. மாணவர் தன் எண்ணங்கள் மற்றும் நடத்தை பற்றி தானே கவனிக்கச் செய்யும் செயல்பாடுகள், தியானம், அமைதியான சிந்தனை நேரம் ஆகியவற்றை சேர்க்கலாம்.

முக்கிய செயல்முறைகள்:

A) ஜினியர் மற்றும் மிடில் பள்ளியில் flexible curriculum பயன்படுத்தப்படுகிறது;

B) தேர்வு அழுத்தம் குறைவாக இருக்கும்.

C) ஆசிரியர்கள் பாடம் சொல்லித் தருவதைவிட, கேள்வி எழுப்புதல் மற்றும் ஆர்வம் வளர்ப்பதை முக்கியமாகக் கொள்கிறார்கள் .

D) மாணவர்கள் அறிவு மட்டுமல்லாமல் நடத்தை, பொறுப்பு, சமூகத் திறன் ஆகியவற்றிலும் வளர்ச்சி அடையச் செய்யப்படுகிறார்கள்.

தமிழ் இனியன் தன் இலக்கை அடைந்துவிட்டார்!

logo
Kalki Online
kalkionline.com